நீங்கள் வேலைசெய்யும் இடத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டிய 7 பொருட்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாளின் பெரும்பாலான பகுதியை நாம் பணியாற்றும் அலுவலகத்தில் கழிக்கிறோம். சில நேரங்களில், நாம் வீட்டில் இருக்கும் நேரத்தை விட, அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுகிறோம். இதனால் நாம் பணியாற்றும் அலுவலக மேசையை ஒரு சுமூகமான பகுதியாக மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனமான காரியம் அல்லவா? எனவே எல்லா வசதிகளோடு அமைந்து, நாள் முழுவதும் அதிக உற்பத்தியைப் பெறும் வகையில், உங்கள் அலுவலக மேசையில் இருக்க வேண்டிய 7 காரியங்களைக் குறித்துக் கீழே காண்போம்...

 பணிகளின் பட்டியல்
 

பணிகளின் பட்டியல்

உங்கள் பணிகளை வரிசைப்படுத்திக் கொண்டு ஒரு நாளின் பணி ஆரம்பிக்க வேண்டும். நாள் முழுவதும் நீங்கள் செய்ய வேண்டிய பணிகளைத் தொகுத்து, ஒரு பணிகளின் பட்டியலைத் தயாரித்துக் கொண்டு, அதனோடு தொடர்புடைய முடிக்க வேண்டிய பணிகளை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் பாட்டில்

தண்ணீர் பாட்டில்

நீங்கள் பணியில் முழுகி இருக்கும் நேரத்தில், குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது போன்ற சில அடிப்படை காரியங்களையும் மறந்துவிடக்கூடும். இதனால் உங்கள் லேப்டாப் அருகிலேயே ஒரு பாட்டில் தண்ணீரை வைத்துக் கொண்டால், குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதோடு, நாள் முழுவதும் தாகத்தோடு இருப்பதைத் தவிர்க்கலாம்.

சிறிய அளவிலான சிற்றுண்டி

சிறிய அளவிலான சிற்றுண்டி

வெறும் வயிற்றில் யாராலும் வேலையில் கவனம் செலுத்த முடியாது. எனவே கொட்டைகள், பழங்கள், ஆளி விதைகள் மற்றும் சில ஆரோக்கியமான சிற்றுண்டிகளைக் கையிருப்பில் வைத்துக் கொண்டால், உங்களுக்குப் பசி ஏற்படும் போதெல்லாம் அசைப் போடுவதற்கு வசதியாக இருக்கும். இதன்மூலம் உங்களுக்கு வயிற்றில் நிறைவான அனுபவம் கிடைப்பதோடு, ஆரோக்கியமற்ற மிதமிஞ்சிய உணவிற்கான தேவையை எண்ணி வருத்தப்பட வேண்டிய தேவையில்லை.

டிஷூ பாக்ஸ்
 

டிஷூ பாக்ஸ்

உடன் ஊழியர் ஒருவர், உங்கள் முன் டிஷூ பேப்பர் இல்லாமல் தும்மல் போடுவதைவிட, உங்களுக்கு அதிக எரிச்சலை உண்டாகும் சம்பவம் வேறெதுவும் இருக்காது. எனவே கையடக்கமான ஒரு டிஷூ பாக்ஸை வைத்துக் கொள்ளுங்கள். சொந்த பயன்பாட்டிற்கு மட்டும் என்பதையும் கடந்து, அதைப் பயன்படுத்தாத ஒரு உடன் ஊழியருக்கும் அளித்து உதவலாம். அப்படிச் செய்தால் நீங்கள் மகிழ்ச்சிகரமாக உணருவீர்கள்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

உங்களுக்கு நெருங்கினவர்கள் மற்றும் அன்பானவர்களின் புகைப்படங்களைக் கொண்ட சில போட்டோ பிரேம்களை மேசையில் வைத்துக் கொள்ளுங்கள். அப்போது எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், அதைப் பார்க்கும் போது உங்களால் புத்தொளியுடன் செயல்பட முடியும்.

 உடல் பராமரிப்புத் தயாரிப்புகள்

உடல் பராமரிப்புத் தயாரிப்புகள்

நீங்கள் அலுவலகத்திற்கு வரும் முன் தகுந்த முறையில் அலங்காரம் செய்யத் தவறும் சந்தர்ப்பம் ஏற்பட்டாலோ அல்லது அலுவலகம் முடித்து ஒரு விருந்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பாட்டாலோ, இந்தப் பொருட்கள் பெரும் உதவியாக இருக்கும். இதில் ஒரு சானிடைஸர், டியோடெரண்ட், சீப்பு மற்றும் முக்கியமான மேக்அ பொருட்கள் ஆகியவற்றை உங்கள் மேசை டிராயரில் வைத்துக் கொள்ளுங்கள்.

 ஃபோன் சார்ஜர்

ஃபோன் சார்ஜர்

இதைக் குறித்து விளக்க வேண்டிய தேவையில்லை. நம் உலகமே நம்மிடம் உள்ள மொபைல்போனை சுற்றியே அமைந்துள்ளது என்பதால், எப்போது கையில் ஒரு சார்ஜரை வைத்திருப்பது நல்லதொரு பழக்கமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 things you should always keep at your work desk

7 things you should always keep at your work desk
Story first published: Friday, January 12, 2018, 11:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X