இன்டர்வியூக்கு போகும்போது டிரஸ் பண்ண வேண்டிய முறைகள்..!

Written By: Staff
Subscribe to GoodReturns Tamil

படிப்பை முடித்தவர்கள் அனைவருக்கும் வளாகத் தேர்வு அல்லது நேர்காணல் தேர்வு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. நேர்முகத் தேர்வுக்கு உங்கள் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் உடையையும் சரியான முறையில் அணிய வேண்டும்.

இத்தகைய முக்கியமான டிரசிங் சென்ஸ் பற்றியே நாம் இப்போது பேசப்போகிறோம்.

அடர் நிற உடைகள்

நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்புடையதாக அமையும் வகையில் உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அடர் நிறத்திலான உடைகளைத் தவிர்த்து, நேர்காணலுக்குப் போகும் முன் உங்கள் உடைகள் இஸ்திரி போடப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வழக்கமான உடை அணிதல்

ஒரு நேர்காணலுக்குச் செல்லும் போது, அடர் மற்றும் பளிச் நிறங்களில் அமைந்த உடைகளை அணிந்து சென்றால், அவை கவனத்தைச் சிதறடிக்கும் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, வழக்கமான கருப்பு, வெள்ளை, சாம்பல், நீலம் மற்றும் பழுப்பு நிறத்தில் அமைந்த உடைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

முன்னதாகவே தயாராகுதல்

எந்த உடையை அணிய போகிறோம் என்பதை ஒரு நாளுக்கு முன்னதாகவே முடிவு செய்து, அதை இஸ்திரி போட்டு வைத்துக் கொள்வது சிறந்தது. நன்றாக இஸ்திரி போடப்பட்டு, சரியான முறையில் உடை அணிந்து சென்றால், பார்ப்பவர்களுக்கு நன்றாகக் காட்சியளிக்கும்.

ஒரு நேர்காணலுக்குச் செல்லும் போது, வெளிர் நிறத்திலான முழுக் கை சட்டையும், அடர் நிறத்திலான சூட் அல்லது அதற்கு ஏற்றார்போன்ற நிறத்தில் உடையைத் தேர்ந்தெடுப்பது சரியான தேர்வாக அமையும்.

 

அறிவுப்பூர்வமாகத் தேர்ந்தெடுத்தல்

உங்கள் தனித்தன்மையை எடுத்துக் காட்டுவதில் உடைகளுக்கு அடுத்தபடியாக, நீங்கள் அணியும் ஷூக்கள் அமைகின்றன என்பதால், அவற்றை அறிவுப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள். ஆக்ஸ்ஃபோர்டுஸ் (குறைந்த ஹீல் கொண்ட லேஸ் உள்ள ஷூக்கள்) மற்றும் பிரோகுஸ் போன்ற அலுவலகப் பயன்பாட்டிற்கு ஏற்றக் கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் அமைந்த ஷூக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நேர்காணலில் இதுபோன்ற ஷூக்களை அணிந்து சென்றால், கம்பீரமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட நபராகத் தெரியும்.

உங்கள் அணிகலன்களுடன் ஒத்துபோகும் நிறத்தைத் தேர்ந்தெடுத்தல்

நம் அணிகலன்கள் அனைத்தும் ஒரே நிறத்தில் ஒத்துபோகும் வகையில் அணிவது புதிய நடைமுறையாக உள்ளதால், உங்கள் பெல்ட் நிறத்திற்கு முரணாக அமையாமல், அதற்கு ஏற்றாற் போன்ற நிறத்திலான ஷூக்களை அணிந்து கொள்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dressing ethics for a job interview

Dressing ethics for a job interview
Story first published: Wednesday, January 10, 2018, 18:12 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns