முதுமையிலும் வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் பண்ண இதைச் செய்யுங்கள்..!

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுறுசுறுப்பான வாழ்க்கையில் முறையில் இருந்தோ அல்லது பணியில் இருந்தோ மனிதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வது தான் பணிஓய்வு. மாதந்தோறும் கிடைத்து வந்த சம்பளம் ஓய்வுக்குப் பின்னர் நின்றுவிடும். ஆனால், செலவுகளோ?, குடும்பப் பொறுப்புகளோ? நின்று விடாது.

 

இதைத் தொடர்ந்து சமாளிக்கத் தான் பென்சன் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரைந்து தொடங்க வேண்டும்

விரைந்து தொடங்க வேண்டும்

சம்பளம் போன்ற மாதாந்திர பயன்கள் ஓய்வுக்குப் பின்னரும் தொடர்ந்து கிடைக்க அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஓய்வு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஓய்வு திட்டங்கள் மூலம் மாதாந்திர சம்பளத்தில் கிடைத்த பயன்கள் முழுமையாகக் கிடைக்காது என்றாலும், தனிப்பட்ட நபர் மற்றும் குடும்பப் பாதுகாப்புக்கு இது உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 25 ஆண்டுக்காலம்

25 ஆண்டுக்காலம்

இது போன்ற பாலிசிகளை 25 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி ஓய்வு பெறும் வரை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். சரியான ஒரு பென்சன் திட்டத்தில் இருந்து பணத்தைப் பகுதி பகுதியாகத் திரும்பப் பெறும் வசதிகள் உள்ளது. அதனால் ஒருவரின் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில் அதற்கு ஏற்ற பென்சன் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

பென்சன் திட்டங்கள்
 

பென்சன் திட்டங்கள்

இந்திய சந்தையில் தற்போது பல விதமான ஓய்வு திட்டங்கள் கிடைக்கிறது. அதில் சில...

இந்திய அரசின் தேசிய பென்சன் திட்டம்.
எல்ஐசி ஜீவன் அக்சயா 6 திட்டம்.
எல்ஐசி ஜீவன் நிதி திட்டம்
எஸ்பிஐ லைஃப் சரல் பென்சன் திட்டம்.
ஹெச்டிஎப்சி லைஃப் கிளிக் 2 ரிடையர்.
ஹெச்டிஎப்சி லைஃ பென்சன் உத்தரவாத திட்டம்.
ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் ஈசி ரிடையர்மென்ட்.
ரிலையன்ஸ் ஸ்மார்ட் பென்சன்.
பஜாஜ் அலையான்ஸ் பென்சன் உத்தரவாதம்.
மேக்ஸ் லைஃப்ஸ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட லைஃப் டைம் வருமான திட்டம்.
பிர்லா சன் லைஃப் எம்பவர்மென்ட் பென்சன்.

 

 வாழ்க்கைக்குச் சீரான வருவாய்

வாழ்க்கைக்குச் சீரான வருவாய்

வாழ்க்கை நடத்தச் சீரான வருவாய் கிடைக்கும். ஓய்வு திட்ட முதலீடுகள் மூலம் மாதாந்திர வருவாய், ஓய்வுக்குப் பின்னர் இறப்பு வரை கிடைக்கும். இதர சேமிப்புகள் மூலம் கிடைக்கும் வருவாய்களோடு இது கூடுதல் நிதி ஆதாரமாகத் திகழும்.

 தனிநபர் வரிப் பயன்கள்

தனிநபர் வரிப் பயன்கள்

முதலீட்டாளருக்கு வரிப் பயன்கள் கிடைக்கும். வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ.1,50,000 வரை வரி விலக்கு பெற முடியும்.

 வாழ்க்கைத் துணைக்குப் பாதுகாப்பு

வாழ்க்கைத் துணைக்குப் பாதுகாப்பு

முதலீட்டாளர் இறக்க நேரிட்டால் வாழ்க்கைத் துணைக்கு முதலீடு செய்த முழுத் தொகை வட்டியுடன் பெறலாம்.

குழந்தைகளின் பாதுகாப்பு

குழந்தைகளின் பாதுகாப்பு

முதலீட்டாளர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணையும் இறக்க நேரிட்டால், முதலீடு செய்த முழுத் தொகையும் வட்டியுடன் அவரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு

பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு

பணவீக்கம் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. ஓய்வுக்குப் பின்னர் மாதாந்திர சம்பளம் இருக்காது என்பதால் பணவீக்கத்தை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் பென்சன் திட்டங்களின் மூலமான மாதாந்திர வருவாய் வயதான காலத்தில் உதவியாக இருக்கும்.

சரியான பென்சன் திட்டத்தைத் தேர்வு செய்யச் சில ஆலோசனைகள்:

சரியான பென்சன் திட்டத்தைத் தேர்வு செய்யச் சில ஆலோசனைகள்:

ஒருவரின் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துகொள்ளுதல்- ஓய்வுக்குப் பின்னர்க் குடும்பத்தை வழிநடத்த எவ்வளவு பணம் வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் சவாலான விஷயம். இதில் பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 அபாயக் கணக்கீடு

அபாயக் கணக்கீடு

ஓய்வு திட்டங்களில் முதலீடு செய்வதில் உள்ள அபாயங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும். இதில் சில குறிப்பிட்ட அளவு முதலீடுகள் சந்தை செயல்பாட்டைச் சார்ந்ததாக இருக்கும்.

ஓய்வு திட்டங்களில் உள்ள வாய்ப்புகள்

ஓய்வு திட்டங்களில் உள்ள வாய்ப்புகள்

சந்தையில் பல ஓய்வு திட்ட பாலிசிகள் உள்ளது. நமது தேவையைப் பூர்த்திச் செய்யக்கூடிய திட்டத்தைக் கவனமாகக் கணித்துச் சரியான திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

முதுமை பருவ பயன்கள்

முதுமை பருவ பயன்கள்

முதுமை வாழ்க்கை என்ற கனியை ருசிக்கும் வகையில் சிறப்பான திட்டங்களில் முதலீடு செய்ய முன்கூடியே திட்டமிட வேண்டும். ஓய்வுக்குப் பின்னர் அதிகப் பயன்களை வழங்கும் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தத் திட்டம் வயதான காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்கும். ஓய்வுக்குப் பின்னர் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்திர வருவாயாகப் பெற உதவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Retirement Benefit Plans in India

Retirement Benefit Plans in India
Story first published: Friday, February 23, 2018, 17:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X