யூபிஐ பேமெண்ட் என்றால் என்ன..? : முழுமையான விளக்கம்

Written By: Staff
Subscribe to GoodReturns Tamil

மாற்றம் ஒன்றே மாறாதது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. உலகம் தோன்றியது முதல் மாறாதது மாற்றம் ஒன்றுதான் என்றாலும் மாற்றத்தைத் துவக்கத்தில் எதிர்ப்பது என்ற ஒன்றும் மாறாததாகவே இருந்து வந்திருக்கின்றது.

அதுவும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத நமக்குப் புரியாத ஒன்றை எதிர்ப்பது மனிதக் குலத்தின் வழக்கம். ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் விஞ்ஞான வளர்ச்சியின் தாக்கத்தை மனிதன் ஏற்றாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

வங்கித்துறையும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இதில் குறைந்துவிடவில்லை.

வங்கித் துறை

வங்கி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் UPI ஆகும். அதாவது, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (Unified Payments Interface). UPI இந்த வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் அது என்ன, எப்படிச் செயல்படுகிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. எந்த ஒரு மாற்றத்தையும் புரிந்து செய்யும்போது அதை ஏற்றுக்கொள்ளத் தாயாராவது எளிது என்பதற்கேற்ப இங்கு UPI பேமெண்ட்டுகளில் என்ன நடக்கிறது என்பதை அலசுவோம்.

 

UPI என்றால் என்ன?

ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) என்பது இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (National Payment Corporation of India) அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு கட்டண முறையாகும். இது இரண்டு வங்கிக் கணக்குகளுக்கும் இடையில் உடனடியாகப் பணப் பரிவர்த்தனையை அனுமதிக்கிறது. UPI ஆனது ஏற்கனவே உள்ள IMPS உள்கட்டமைப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை 24 மணி நேரமும் உடனடியாகப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

NPCI என்றால் என்ன?

இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் (NPCI) என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இது இந்தியாவில் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துகிறது.

UPI எவ்வாறு வேலை செய்கிறது?

UPI ஆனது வங்கி கணக்கின் விவரங்களை நிரப்ப வேண்டிய அவசியமின்றி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வாடிக்கையாளரின் மெய்நிகர் முகவரி (mail id) மூலம் ஒரு ஸ்மார்ட்போனில் பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ அனுமதிக்கிறது.

இதில் பரிவர்த்தனை உங்களின் குளோபல் அட்ரஸ் (உங்களின் கைப்பேசி எண் அல்லது ஆதார் எண்) மற்றும் லோக்கல் அட்ரஸ் (மெய்நிகர் முகவரி) அடிப்படையில் நடக்கிறது.

 

மெய்நிகர் முகவரி

உங்கள் மெய்நிகர் முகவரி என்பது ஒரு மின்னஞ்சல் முகவரியை ஒத்தது. உதாரணமாக xyz@hdfc. இதில் xyz என்பது பயனாளியின் பெயர் மற்றும் HDFC உங்கள் உங்கள் வங்கியாக இருக்கும். மெய்நிகர் முகவரிகள் உங்கள் வங்கிக் கணக்கின் எண்ணைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலான சிறந்த மாற்றுகளாகும். நீங்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் மெய்நிகர் முகவரிகளை உருவாக்கலாம். மேலும் இது மிகவும் பாதுகாப்பானது (பிட்காயின் பரிமாற்றங்களை ஒத்தது).

UPI ல் இரண்டடுக்குப் பாதுகாப்பு முறை (2FA) பயன்படுத்தப்படுகிறது. அதாவது நீங்கள் ஓர் ATM ல் பணம் எடுக்கிறபோது உங்கள் ATM கார்டு முதல் காரணியாகவும் உங்களின் பாஸ்வேர்ட் இரண்டாவது காரணியாகவும் கொள்ளப்படுகிறது. அதே போல இதில் NCPI ஆப் BHIM மூலம் UPI குறியீடும் வங்கிகள் மூலம் MPIN குறியீடும் தரப்படுகிறது.

 

UPI-PIN மற்றும் M-PIN இடையே உள்ள வேறுபாடு என்ன?

UPI- PIN என்பது 4-6 இலக்க குறியீடாக உள்ளது, இது BHIM பயன்பாட்டில் முதல் முறையாக நீங்கள் பதிவு செய்யும்போது உருவாக்கப்பட்டதாகும். UPI பரிமாற்றங்களை அங்கீகரிப்பதற்கு இந்தக் குறியீட்டை நீங்கள் பயன்படுத்தலாம்.

MPIN என்ப‌தோ வங்கிகளால் தங்களது கைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது.இவை இரண்டில் உங்களது தேவை மற்றும் பயன்படுத்தும் ஊடகத்திற்கு ஏற்ப இரண்டையும் பயன்படுத்தலாம்.

 

BHIM என்பது என்ன?

BHIM (Bharat Interface forMoney) UPI அல்லது சாதாரணக் கணக்குகளுக்குப் பரிவர்த்தனை செய்ய உதவுவது. பேலன்ஸ் மற்றும் ஏனைய தகவல்களுக்கும் இது பயன்படுகிறது.

IMPS-ஐ லவ் வங்கி எண் குறிப்பிடும் நேரத்தையும் விட இது விரைவானது. அதிகபட்ச பரிவர்த்தனை வரையறை:

தற்சமயம் அதிகபட்ச பரிவர்த்தனை வரையறை ஒரு லட்சமாக உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is UPI? A detailed explanation

What is UPI? A detailed explanation
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns