மூன்றே படிகளில் இன்கம் டாக்ஸ் தாக்கல் செய்வது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2016 மற்றும் 2017-ம் நிதி ஆண்டுகளுக்கான வருமான வரியினை நீங்கள் தாக்கல் செய்யவில்லையா? இதோ உங்களுக்கான கடைசி வாய்ப்பு, 2018 மார்ச் 31-க்குள் தாக்கல் செய்துவிடுங்கள்.

வருமான வரித் துறை சட்டத்தின் படி அனைத்து நிறுவனங்கள், கூட்டு ஸ்தாபனங்கள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டு நிறுவனங்கள், டிரஸ்ட்கள், சங்கங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி வரம்பு
 

வருமான வரி வரம்பு

தனிநபர் அல்லது இந்து கூட்டு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமான வரி இருக்கும் போது வருமான வரி செலுத்த வேண்டும். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 3 லட்சத்திற்கும் அதிகமாக ஆண்டு வருமானம் இருக்கும் போது வரி தாக்கல் செய்ய வேண்டும்.

 கடைசித் தேதி

கடைசித் தேதி

தற்போது வருமான வரித் துறை 2016 மற்றும் 2017 நிதி ஆண்டில் வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 2018 மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை நினைவு கூர்ந்துள்ளது.

திருத்தம்

திருத்தம்

வருமான வரிச் சட்டம் பிரிவு 139(4)-ன் கீழ் தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் காலதாமதமாக வருமான வரியினை 24 மாதங்களுக்குள் தாக்கல் செய்யலாம் என்ற விதியானது நிதி ஆண்டு முடிந்து 12 மாதங்களுக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது.

படி -1

படி -1

இலவசமாக வருமான வரியினை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் பான் எண், பிறந்த தேதி போன்றவற்றைப் பயன்படுத்திப் பதிவு செய்து செய்ய முடியும். பதிவு செய்து கடவுச்சொல் போன்றவற்றை உருவாக்க வேண்டும்.

படி -2
 

படி -2

கடவுச்சொல்லை பயன்படுத்தி www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து படிவம் 16/16A அல்லது படிவம் 26AS-ல் உள்ள விவரங்களுடன் பொருந்துமாறு வருமான வரி வரங்களை ஆன்லைன் அல்லது ஆப்லைன் வழியாக ஐடிஆர் 1 அல்லது ஐட்டிஆர் 4 படிவங்களில் பூர்த்திச் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

படி -3

படி -3

வருமான வரி தாக்கல் செய்த பிறகு மின்னணு சரிபார்ப்பு முறையான EVC அல்லது ஆதார் ஓடிபி அல்லது டிஜிட்டல் கையெழுத்துப் பத்திரம் மூலமாகச் சரிபார்ப்பை செய்து உறுதி செய்வதன் மூலமாக வெற்றிகரமாக மூன்றே படிகளில் வருமான வரியினைத் தாக்கல் செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to file income tax return in three steps before March 31

How to file income tax return in three steps before March 31
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X