டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி..?

Written By:
Subscribe to GoodReturns Tamil
இணையத்தின் பரிணாம வளர்ச்சி மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்கள் இணையத்தினைப் பெரிதும் சார்ந்து வாழ்கிறார்கள். எனவே, ஒரு மணிநேரத்திற்கும் இணையம் இல்லாமல் வாழ்வது கடினமான செயலாகும். இணையத்தின் பயன்படானது, நன்மை மற்றும் தீமைகளை அளிக்கவல்லது. இதனை,உயிர்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தினால், அது மக்களிடம் புன்னகைகளைக் கொண்டு வரலாம். இது போன்ற ஒன்று டிஜிலாகர்(DigiLocker).

டிஜிலாகரில் எந்த ஆவணங்களைச் சேமிக்க முடியும்?

கல்வி சான்றிதழ்கள், பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாகன உரிம பத்திரங்கள், ஆதார் அட்டை போன்ற அரசாங்க முகவர்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை பலவற்றை டிஜிலாகரில் சேமிக்க முடியும்.

டிஜிலாகரில் சேமிப்புக்கான நினைவக இடம் எவ்வளவு?

ஒவ்வொரு பயனர்களுக்கும் 1 GB (1 ஜீபி) சேமிப்பகமானது டிஜிலாகரில் வழங்கப்படுகிறது.

டிஜிலாகரை பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் அம்சங்கள் யாது?

பயனர்கள் டிஜிலாகர் வசதிக்காக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும்.

டிஜிலாகருக்குப் பதிவு செய்ய, பயனர் முதலில் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும். ஆதார் அட்டை எண்ணை நுழைந்தவுடன், ஒரு முறை கடவுச்சொல் சொல்லானது ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். அதைப் பயன்படுத்தி, கணக்குத் தொடங்கித் தங்கள் புதிய கடவுச் சொல்லை பதியலாம்.

மேலும் உள்நுழைவுகளுக்கு, பயனர் பேஸ்புக் அல்லது கூகிள் உள்நுழைவுகளுக்குக் கணக்குடன் இணைக்கும் கடவுச்சொல்லை அமைக்கலாம்.

 

டிஜிலாகரின் பங்கேற்பாளர்கள் யார்?

மூன்று பங்கேற்பாளர்கள் உள்ளனர். அவர்கள், குடிமக்கள், வழங்குநர்கள் மற்றும் மனுதாரர்களாக உள்ளனர்.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் டிஜிலாகரின் பங்கேற்பாளராக உள்ளது. டிஜிலாகரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி - https://digilocker.gov.in , சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் , டிஜிலாகர் உடன் இணைந்து இந்திய குடிமக்களுக்கு டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் கிடைக்க வழிவகுத்துள்ளது.
டிஜிலாகர் இப்போது தேசிய பதிவேட்டுடன் நேரடியாக ஒருங்கிணைத்து, நாடு முழுவதும் உள்ள ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு தரவுகளின் தரவுத்தளமாகவும் உள்ளது.

டிஜிலாகரின் பயனர்கள் தற்போது தங்கள் மொபைல் சாதனங்களிலும், கணினிகளிலும் ஆர்.சி. (RC)இன் டிஜிட்டல் வடிவத்தை எளிதாக அணுகலாம்.

 

டிஜிட்டல் ஓட்டுனர் உரிமத்தின் நன்மைகள்:

• டிஜிலாகர் படி, டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம், அசல் ஆவணங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்கும்
• குடிமக்கள் தரவு மூலத்திலிருந்து நேரடியாக நம்பகமான டிஜிட்டல் ஓட்டுநர் உரிமையைப் பகிர்ந்து கொள்ளலாம்.
• டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் முகவரியின் அடையாளமாகவும், அடையாளத்தின் ஆதாரமாகவும் மற்ற துறைகளோடு பகிர்ந்து கொள்ளலாம், இதன்மூலம் நிர்வாகப் பணியைக் குறைக்க முடியும்.
• டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் ஆவணத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது மொபைலில் டிஜிலாகர் பயன்பாட்டில் உள்ள QR ஸ்கேன் வசதி மூலம் டிஜிட்டல் ஓட்டுனர் உரிமத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க முடியும்.

டிஜிலாகர் மூலம் டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்:

• பயனர்கள் முதலில் தங்கள் ஆதார் அட்டை எண்ணை டிஜிலாகர் கணக்குடன் இணைக்க வேண்டும்.
• அது முடிந்தவுடன், அவர்கள் "பங்குதாரர் ஆவணங்கள் கொடு "(Pull Partner Documents) பிரிவில் கிளிக் செய்ய வேண்டும்.
• வழங்குபவர் மற்றும் ஆவண வகைகளைத் தேர்ந்தெடுத்து ஆவணம் தொடர்பான விவரங்களை உள்ளிடவும்.
• ஆவணம் தரவுத்தளத்தில் இருந்து பெறப்படும்.
• இப்போது டிஜிட்டல் ஆவணத்திற்கு ஒரு "நிரந்தர இணைப்பு" (URL) கிடைக்கும். இதனை,"வெளியிடப்பட்ட ஆவணங்கள்"("Issued Documents") பிரிவின் கீழ் சேமிக்கவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How To Get Driving License Online Through DigiLocker?

How To Get Driving License Online Through DigiLocker?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns