இந்தியாவில் நிறுவனத்தை பதிவு செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி 2018

Written By: Staff
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவில் உங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்ய முடியாமல், அதற்கான வழிமுறைகள் தெரியாமல் தவிக்கிறீர்களா? இதோ, உங்களுக்குத் தேவையான இந்தத் துல்லியமான தகவல்கள், நிறுவனத்தை விரைவாகப் பதிவு செய்ய உதவும்.

மத்திய பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகம் (MCA) வகுத்துள்ள வழிமுறைகளின் மூலம், மிகவும் எளிதாக, துரிதமாக, வெறும் ஏழே நாட்களில் உங்களின் நிறுவனத்தைத் துவங்கிட முடியும்.

மின்னணு முறை

இந்தியாவின் எந்த மூலைமுடுக்கிலிருந்தும், அரசு அலுவலகங்களுக்குச் செல்லாமலேயே நிறுவனத்தைப் பதிவு செய்யலாம். அனைத்து ஆவணங்களும் மின்னணு முறையில் பூர்த்தி செய்யப்படுவதால், பதிவு செய்வதற்குக் கூடச் செல்லவேண்டியதில்லை.

குறைந்த கட்டணம்

மிகவும் குறைந்த கட்டணத்தில் பல நிறுவனங்கள், உங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்ய உதவுகின்றன. இந்தக் கட்டுரையின் மூலம் நீங்கள் கீழ்க்கண்ட தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

- நிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி?
-எந்த வகை நிறுவனமாக, உங்கள் நிறுவனத்தைப் பதிய வேண்டும்?
-பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?

முதலாவதாக, இந்தியாவில் எந்தெந்த வகையான நிறுவனமாகப் பதிவு செய்யலாம் எனப் பார்ப்போம். இந்தியாவில், முக்கியமாக 5 வகை நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றவற்றிலிருந்து வேறுபட்டவை.

 

நிறுவனத்தைப் பதிவு செய்யும் வழிமுறைகள்

இந்தியாவில் தொழில் துவங்குவதை எளிதாக்கும் வகையில், மத்திய பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகம், INC-29 என்ற படிவத்தை வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தைப் பதிவு செய்யும் பல்வேறு செயல்முறைகளில், தொழில் நிறுவனத்தின் பெயர் அங்கீகாரம், நிறுவன இயக்குனர் அடையாள எண், இணைப்புப் படிவம் போன்றவை ஒன்றிணைக்கப்பட்டு, படிவம் INC-29 ன் கீழ் ஒரே செயல்முறையாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம், நிறுவன இணைப்பு என்பது மிகவும் சுலபமாக்கப்பட்டு, இணையதளம் மூலமாக வெறும் ஏழே நாட்களில் இணைப்பு நடக்கிறது.

 

டிஜிட்டல் கையெழுத்துச் சான்றிதழ் பெறுதல்

முதல் படியாக, நிறுவன இயக்குநர்களின் டி.எஸ்.சி எனும் டிஜிட்டல் கையெழுத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த மின்னணு கையெழுத்து, இணையவழியில் உங்கள் புதிய நிறுவனத்தின் பதிவை செய்ய உதவும்.

ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த பின்பு, டி.எஸ்.சி யை பெற 2 நாட்கள் ஆகும். மின்னணு முறையில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 கீழ் டிஜிட்டல் கையொப்பங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

மின்னணு முறையில் ஆவணங்களைச் சமர்ப்பிக்க இம்முறையே பாதுகாப்பான மற்றும் நம்பகமானது. MCA21 மின்னணு அரசாங்க திட்டத்தின் கீழ் நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்படும் அனைத்தும், அங்கீகரிக்கப்பட்ட நபர்களால் டிஜிட்டல் கையொப்ப முறையில் கையெழுத்திட வேண்டும்.

 

INC29 படிவத்தைத் தயார் செய்தல்

நிறுவன இயக்குநர்களின் அடையாள எண் (DIN number)
அங்கீகரிக்கப்பட்டப் பெயர்
ஒப்பந்தம் மற்றும் பிரிவுகளின் இணைப்பு (Memorandum and Articles association)
பதிவுசெய்யப்பட்ட அலுவலகங்களைச் சரிபார்த்தல் (Registered office verification)
பணிநியமன ஆணைகள் மற்றும் அறிவிக்கை ( Appointment letters and declaration)

INC29 படிவத்தைச் சமர்ப்பித்தல்

அனைத்து ஆவணங்களும் தயார் செய்த பின்பு, நிறுவனத்தைத் துவங்குவதற்காக அவற்றைச் சமர்ப்பிக்கவேண்டும். அதன் பின்பு, பதிவு சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவு சான்றிதழ் வழங்குதல்

பதிவு சான்றிதழ் பெறும் போது, ஃபான் எண்ணும் வழங்கப்படும்.அதை வைத்து வங்கி கணக்குத் துவங்கலாம்.

நிறுவனத்தைப் பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள்

இந்தியாவில் நிறுவனங்களைப் பதிவு செய்வதற்குக் கீழ்க்கண்ட ஆவணங்கள் அவசியம்.

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
ஃபான் அட்டையின் நகல்
சமீபத்திய வங்கி அறிக்கை/ தொலைப்பேசி/மின்சாரம்/ எரிவாயு இரசீது
வாக்காளர் அட்டை/ கடவுசீட்டு
நோட்டரி கையெழுத்து பெற்ற வாடகை ஒப்பந்தம் (ஆங்கிலத்தில்)
சொத்து உரிமையாளரின் எதிர்ப்பில்லா சான்றிதழ் (NOC from property owner)
பதிவுசெய்யப்பட்ட முகவரியின் பயன்பாட்டு இரசீதுகள்

இந்த ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையவழியில் சமர்ப்பித்துப் பதிவு செயல்முறையைத் துவங்கலாம். அதன் பிறகு ஜி.எஸ்.டி -க்கு விண்ணப்பிக்கலாம் ( தொழிலின் வகை மற்றும் அளவைப் பொறுத்து). இந்தப் பதிவு செய்யும் வழிமுறையில், சில சந்தேகங்கள் எழலாம். அவை கேள்வி பதிலாகக் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

 

நான் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கவுள்ளேன். எவ்வகை நிறுவனம் எனத் தேர்வு செய்ய வேண்டும்?

உங்களது ஸ்டார்ட்அப் மற்றும் அதற்கு முதலீடு கோர விரும்பினால், வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் (private limited company) எனப் பதியலாம். இதன் மூலம் வெளியிலிருந்து முதலீடுகளைப் பெறலாம் மற்றும் உங்கள் ஊழியர்களுக்குப் பங்குகளும் தர இயலும்.

வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தைத் துவங்க எவ்வளவு இயக்குநர்கள் தேவை?

வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாகப் பதிவு செய்ய விரும்பினால், குறைந்தபட்சம் 2 இயக்குநர் மற்றும் பங்குதாரர்களும், அதிகபட்சமாக 15 இயக்குநர்கள் மற்றும் 50 பங்குதாரர்களும் இருக்கலாம்.

பிரைவேட் லிமிடேட் அல்லது LLP? இரண்டில் எதைத் தேர்வு செய்யலாம்?

சுலபமாகச் சொல்ல வேண்டுமென்றால், முதலீடுகளை ஈர்க்க மற்றும் ஊழியர்களுக்கும் பங்குகளைத் தர விரும்பினால், பிரைவேட் லிமிடேட் சிறந்தது. சிறிய நிறுவனம் தான், எனவே எதிர்காலத்தில் வெளி முதலீடுகள் தேவையில்லை எனில் LLP சிறந்தது. LLP நிறுவனத்தைக் குறைந்த செலவில் துவங்கிவிடலாம். கணக்குப் பராமரிப்பு செலவும் குறைவு.

ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.ஏனெனில், நீங்கள் LLP எனப் பதிவு செய்ய முடிவுசெய்துவிட்டால், அதன் பெயரில் நிறைய லைசென்ஸ் மற்றும் அங்கீகாரங்கள் பெறவேண்டும்(தொழில் வரி, கட்டமைப்புப் பதிவு போன்றவை). எப்போதாவது, பிரைவேட் லிமிடேட் ஆக மாற விரும்பினால், மீண்டும் நிறையச் சிரமத்தை சந்திக்க வேண்டும்.

 

வெளிநிறுவனங்கள் உதவி இல்லாமல் நிறுவனத்தைப் பதிவு செய்ய முடியுமா?

முடியும், MCA இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். ஆனால், அது சிரமமான ஒன்று என்பதால், அதற்கென இருக்கும் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டு உங்கள் தொழிலின் மீது கவனம் செலுத்தலாம்.

பதிவுசெய்து கொடுப்பதற்கென நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன. சிறந்ததைத் தேர்வு செய்வது எப்படி?

ஆம், எந்தச் சிக்கலும் இல்லாமல் நிறுவனத்தைப் பதிவு செய்து தர நிறைய வல்லுநர்கள் இருக்கின்றனர். நல்ல அனுவபம் மற்றும் நற்பெயர் உள்ள ஒருவரைத் தேர்வு செய்வது நல்லது. இணையதளம் இதை மேலும் சுலபமாக்கி, எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போதும் பதிவு செய்ய உதவுகிறது.

வீட்டு முகவரியில் பதிவு செய்யலாமா? வாடகை வீடாக இருந்தால் என்ன செய்வது?

வீட்டு முகவரியில் உங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்யலாம். ஆனால் செயல்பாட்டு இரசீதுகள் கண்டிப்பாகத் தேவை. மேலும் வாடகை வீடாக இருந்தால், வாடகை ஒப்பந்தம் மற்றும் தடையில்லா சான்றிதழ் அவசியம்.

பிரைவேட் லிமிடேட் நிறுவனத்திற்கு 2 இயக்குநர்கள் கண்டிப்பாக அவசியமா?

ஆம், வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் (பிரைவேட் லிமிடேட்) எனப் பதிவு செய்ய இரண்டு இயக்குநர்கள் அவசியம் தேவை. இந்தக் கட்டுரை, நிறுவனத்தைப் பதிவு செய்யும் வழிமுறையை உங்களுக்கு எளிமையாக அறிய உதவியிருக்கும் என நம்புகிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How To Register A Company In India? A Complete Guide 2018

How To Register A Company In India? A Complete Guide 2018
Story first published: Tuesday, March 13, 2018, 12:48 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns