ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விரிவாக்கத்தின் போது எதிர்கொள்ளும் சிக்கல்களை எளிதிதாகச் சமாளிக்கும் வழிகள்!

Written By:
Subscribe to GoodReturns Tamil

நம்முடைய நிலையை அடியோடு புரட்டிப்போட கூடிய வகையில், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கையில், எது நடந்தாலும் அதனை இன்முகத்தோடு எதிர்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் அமைவது ஒருவருக்குக் கிடைத்த வரமாகும்.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான சாந்தா கோச்சாரின் மேற்கண்ட வார்த்தைகள், புதியதாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதனை விரிவாக்கம் செய்ய நினைக்கும் ஒவ்வொருவருக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். உயர்ந்த இலக்கினை நோக்கிப் பயணிக்கும் ஒரு நிறுவனத்தின் பயணம், நவீன தொழில் நுட்பம், பிற நிறுவனங்களின் போட்டிகள், மேலாண்மைச் சிக்கல்கள், எளிதில் கணிக்க இயலாத வணிகச்சூழல்கள் ஆகியவற்றால் கடினமானதாக அமையலாம்.

சிந்தனையிலிருந்து நிறுவனம் செயலாக்கம் பெறுதல், நிறுவனத்தைத் தோற்றுவித்த பிறகு வணிகச்சூழலுக்கு ஏற்ப அதனை நிலைநிறுத்திக் கொள்ளல், பிறகு, அந்நிறுவனத்தைத் தொடக்கநிலை வாடிக்கையாளர்களிடமிருந்து மிகப்பெரிய சந்தையை நோக்கி விரிவாக்கம் செய்தல் ஆகிய மூன்று நிலைகளை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டால் வணிகநிறுவன வரலாற்றில் நம்முடைய வெற்றிக் கொடியும் பறக்கத் தொடங்கிவிடும். தீர்க்கமான சிந்தனை, உற்பத்தி மேம்பாடு, டிஜிட்டல் ஊடகங்களின் பயன்பாடு, சப்ளை மற்றும் விற்பனை நடவடிக்கைகளை முறைப்படுத்தல் ஆகிய பல்வேறு வகையான விசயங்களை முறையாகக் கையாளத் தெரிந்தால் இத்தகைய நிலையை அடையமுடியும். நிறுவன விரிவாக்கத்தின் போது கருத்தில் கொள்ள வேண்டிய எட்டு விசயங்கள் குறித்து இங்குக் காண்போம்.

உற்பத்தி விரிவாக்கம்

உற்பத்தி மேலாளா், வணிகம், தொழில்நுட்பம், வாடிக்கையாளரின் மனநிலை அறிந்து செயல்படுதல் ஆகிய மூன்றைப் பற்றிய அறிவுடையவராகவும் இவற்றுள் ஏதேனும் ஒன்றில் மிகுந்த அனுபவம் மிகுந்தவராகவும் விளங்க வேண்டும். உற்பத்தி மேலாளா் செயல்திறன் மிக்கவராகவும் பிறரைச் செயலாற்றத் தூண்டும் திறன் மிக்கவராகவும் இருக்க வேண்டும். வாடிக்கையாளரின் தேவைகள், அவர்களுடைய எதிர்பார்ப்புகள், சந்தைப்போக்கின் நிலவரம், நிறுவனம் தொடர்பான ஆய்வறிக்கைத் தகவல்கள் ஆகியவை குறித்த விவரங்களை விரல் நுனியில் வைத்திருக் வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்பவும், நவீனத் தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும், காலத்திற்கேற்ற மாறுதல்களுடன் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். உற்பத்தி மேலாளர்களும் நிதிமேலாளா்களும் நிறுவனத்தோடு தொடர்புடைய உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சோ்ந்த அலுவலர்களோடு இணைந்து ஒரு குழுவாகச் செயல்படவேண்டும். உள்நாடு மற்றும் அயல்நாட்டு வாடிக்கையாளரோடு நேரடித்தொடா்பில் இருக்க மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியாக்களின் துணையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

துணைச் சாதனங்கள்

புதிதாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதனை வரிவாக்கம் செய்ய முயல்வோருக்கு வழிகாட்டும் நோக்கில் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள், நிறுவனத் தோற்றுவிப்பாளர்களுக்குப் பல துணைச் சாதனங்களையும், ஆவணங்களையும் பரிந்துரைக்கின்றன. முன்னோட்ட உற்பத்தி (MVP development), நிறுவன அமைப்புமுறை, புதிய கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்வதற்கான நடைமுறை, பங்குநிதி திரட்டல், உற்பத்தி நடைமுறை திட்டம், பங்குதாரா்கள் மற்றும் பணியாளா்களும் நிறுவனத்தில் உரிமை பெறுவததற்கான தி்ட்ட நடைமுறை, விதிமுறைகள் ஆவணம், போட்டித்திறன் மதிப்பீடு, தகவல் பாதுகாப்புக் கொள்கை ஆகியவற்றை உருவாக்க வேண்டும். இவற்றை உருவாக்கிக் கொடுத்து உதவுவதற்காக வணிகரீதியாகப் பல நிறுவனங்கள் இயங்குகின்றன. SimilarWeb, eDataSource, Google Alerts, QuickMVP.com, InstaPage, LanderApp, SurveyMonkey, SurveyGizmo, Quickbooks, AccounEedge, Kissmetrics, MixPanel, UpWork.com போன்றவை அத்தகைய நிறுவனங்களுள் குறிப்பிடத் தகுந்தவை.

நிறுவன விரிவாக்கத்திற்குத் தேவையான உதவிகளை இணையம் வழியாக வழங்குவதற்காகப் பல நிறுவனங்கள் இயங்குகின்றன. அவைகள் நமக்குத் தேவைப்படும் துறைகளுக்கு ஏற்பப் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. வாடிக்கையாளா் உறவு மேலாண்மை (Zoho, SalesForce, SugarCRM), வாடிக்கையாளா் உதவி(FreshDesk, ZenDesk), மனித வளம்(Zenefits, JustWorks, WorkDay), குழுத் தொடா்பியல் (Slack, Yammer, Sococo), திட்ட மேலாண்மை (Trello, Asana, BaseCamp), சந்தையிடல் (MailChimp, HubSpot, SendGrid) மற்றும் சமூக ஊடக மேலாண்மை (HootSuite, SocialFlow, Sprout Social) ஆகியவை தொடா்பாக அடைப்புக் குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் இணையம் வழி துணை நிற்கின்றன.

 

செயலாக்க அளவீடுகள்

நிறுவன விரிவாக்க நிலையில் குறைந்தது ஐந்து செயலாக்க அளவீடுகளின்மீது கவனம் செலுத்த வேண்டும். இணைய வழிப் பதிவுகள் மற்றும் பயன்பாட்டுச் செயலிகள் பதிவிறக்கம் ஆகியவை தொடக்க நிலையிலான செயலாக்க அளவைகள் ஆகும். உற்பத்திப் பொருளுக்கான விலை நிர்ணயம், சந்தையிடுதலை மேம்படுத்தல், விற்பனையை அதிகரித்தல் ஆகியவை வளா்நிலை அளவீடுகளில் அடங்கும்.

நிறுவனம் சார்ந்த மேம்படுத்தப்பட்ட நடைமுறைகள், வாடிக்கையாளரின் உள்ளுணா்வுகளைப் புரிந்து கொள்ளுதல், புத்தாக்க உரிமை பெறலுக்கான நடைமுறைகள் ஆகியவை அறிவுசார் செயலாக்க அளவீடுகளாகும். வாடிக்கையாளா் மற்றும் பணியாளா் நலன் ஆகியவை மக்கள் நலன் சார் செயல் அளவீடுகளாகும். நிறுவன வருவாய் மற்றும் இலாபத்தை உயா்த்துதல், பொருளுக்கான விலை நிர்ணயம், நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர வருவாய், வணிக வளா்ச்சி ஆகியவை வணிகம் சார்ந்த செயலாக்க அளவீடுகளாகும்.

 

தலைமைப்பண்பு மற்றும் மேலாண்மை

திறமை, தலைமைப்பண்பு, நிர்வாக அமைப்பு சார்ந்த நடைமுறைகளில் தனித்திறன் ஆகியவை நிறுவனத்தைத் தொடங்கும் போது அதனுடைய தோற்றுவிப்பாளா்களுக்குத் தேவையான பண்புகளாகும். ஆனால், நிறுவன விரிவாக்கத்தின் போது இவையோடு சோ்ந்த பிற பண்புகளும் தேவையாக இருக்கின்றன. நிறுவனத்தைத் தொடங்கியோர் சுயவிழிப்புணா்வையும், திறன்கள் மற்றும் சமூகஉறவு ஆகியவற்றைப் பலமடங்கு மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொழில்முனைவோர் துறைப் பேராசிரியா்கள் பக்தே மற்றும் சைலேந்திர வியாகா்ணம் ஆகியோரின் கூற்றுப்படி அதிகாரப்போட்டி, பணியாளா் மதிப்பீட்டு முறை, உரிமைகோரல் ஆகிய சிக்கல்கள் நிறுவன விரிவாக்க காலகட்டத்தில் எழும் முக்கியப் பிரச்சினைகளாகும். ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர் விழிப்பு நிலையுடன் செயல்பட்டு இலக்கு நோக்கிப் பயணித்தல், உறவுகளை மேம்படுத்தல், மாற்றங்களை முன்னெடுத்தல், துணிச்சலோடு முடிவெடுத்தல் ஆகிய பண்புகளைப் பெற்று இயங்கவேண்டும்.
திட்டமிடுவதற்கும் செயலாக்க நடைமுறைகளுக்கும் இடையேயான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு இயங்கவேண்டும். நிறுவனம் வளரும்பொழுது அனுபவத்தின் அடிப்படையிலான நடைமுறை விதிகளை உருவாக்கினால் ஆற்றல்மிகு செயலாக்கத்திற்கு வழிவகுக்கும். நிறுவனத்தின் தொடக்கக் காலச் சோதனை முயற்சிகள் பிற்கால வெற்றிகரமான செயல்பாட்டுத் திட்டங்களுக்கு வழிவகுக்கும். நிறுவனம் வளரும்பொழுது, தலைமையில் இருப்பவா்கள், செயலாக்கம் மிக்கவா்களாகவும், படிநிலைகளுக்கு ஏற்ப அதிகாரப் பிரதிநிதித்துவம் அளிக்கக் கூடியவராகவும் திகழவேண்டும். உற்பத்தி மற்றும் வணிக நடைமுறைகள் நன்கு முறைப்படுத்தப்பட்டதாக மாறும்பொழுது அவை உள்நாடு மற்றும் அயல்நாடுகளில் நிறுவன விரிவாக்கத்திற்குத் துணைசெய்யும்.

 

நிறுவன நடைமுறைகளும் வளா்ச்சியும்

நிறுவனத்தைத் தோற்றுவிப்பவா்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களுக்கென்று தனித்த வணிகநடைமுறைகளை உருவாக்குகிறார்கள். பிறகு இந்நிறுவனத்தோடு தொடா்புடைய மற்றவா்கள் தனிமுத்திரைகள் பதி்க்கின்ற வகையில் நடைமுறைகளை உருவாக்குகின்றனா். நிறுவனத்தைத் தோற்றுவிப்பவா்களின் நடவடிக்கைகள், உளப்பாங்கு, பணியாளா்களின் நோ்மை, விசுவாசம், செயல்திறன், ஒருங்கிணைந்து செயல்படுதல், செயல்வேகம், பொறுப்புணா்வு, வாடிக்கையாளா் நலன், தொழில்தா்மம் ஆகியவை நிறுவன விரிவாக்கத்திற்குத் துணை செய்யும் என நிறுவனங்கள் குறித்த புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பணியமா்த்துதல், பதவி உயா்வு, பதவி நீக்கம் ஆகியன போன்ற சிக்கலான விசயங்களில் நிறுவனத்தைத் தோற்றுவிப்பவா்களும் தலைமைக்குழுவினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நிறுவனத்தைத் தோற்றுவிப்பவா்கள் நிறுவன நடைமுறைகள் தொடா்பாகக் காலத்திறகேற்ப தங்களுடைய அறிவை வளா்த்துக் கொள்ளத் தகுந்த பயிற்சி பெறுவதும் தொடா்புடையவா்களுக்குப் பயிற்சியளிக்கவும் வேண்டும். நிறுவனத் தோற்றுவிப்பாளா்கள், அதிகாரத்தைப் பகிர்ந்தளித்துத் தகுதியுடையவா்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.

நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சந்தைச் சூழலுக்கு ஏற்ப மூத்த விற்பனை இயக்குநா் ஒருவா் நியமிக்கப்பட வேண்டும். தேவையேற்பட்டால், விற்பனை தொடா்பான முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை அவரை நம்பி ஒப்படைக்கவேண்டும். சீராய்வுத் தகவல்களும், பணியாளா்களின் நோ்மை மற்றும் விசுவாசம் சார்ந்த நிறுவனத்தினரின் உள்ளுணா்வு மதிப்பீடும் சமநிலையில் அமையவேண்டும்.

 

ஊக்குவிப்பாளா்களும் விரிவாக்குநா்களும்

புதியதாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதனை விரிவாக்கம் செய்ய நினைப்பவா்கள் பல்வேறுவகையான இடா்பாடுகளை எதிர்கொண்டு தத்தளிக்க நேரிடுகிறது. அத்தகையோருக்கு உதவிக்கரம் நீட்டி அவா்களை முன்னோக்கி அழைத்துச் செல்ல ஊக்குவிப்பாளா்களும் விரிவாக்குநா்களும் (Incubators & Accelerators) துணைநிற்கின்றனா். புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனம் தடையின்றி இயங்குவதற்கு ஊக்குவிப்பாளா்களும், அந்நிறுவனம் தன்னை விரிவாக்கம் செய்து மேலும் வளா்வதற்கு விரிவாக்குநா்களும் முன்வருகின்றனா்.

நிறுவனத்தின் இக்காலக் கட்டத்தில், தொடா்ச்சியான ஒருங்கிணைப்பு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள், நிறுவனத்தோடு தொடா்புடைய பல்வேறு பயனாளா்களும் பயன்பெறும் வகையில் சமூகநகழ்வுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நடத்தப்பட வேண்டும். ஊக்குவிப்பாளா்கள் மற்றும் விரிவாக்குநா்களால் மானியமாகவும், முதலீடாகவும் நிறுவனத்திற்குத் தேவையான நிதிஆதாரம் வழங்கப்படுகிறது. வணிக விரிவாக்குநா்கள் திரும்பக் கிடைக்கும் பங்காதாயத்தை மனதில் கொண்டும், நிறுவனம் சார்ந்த விரிவாக்குநா்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தின் உற்பத்திப் பொருளை தங்களுடைய நிறுவனத்தின் உற்பத்திப் பொருளோடு இணைத்துக் கொள்ளும் நோக்கத்தோடும் முதலீடு செய்கின்றனா். ஊக்குவிப்பாளா்கள் மற்றும் விரிவாக்குநா்கள் மட்டுமல்லாமல் நிறுவனத்தின் நலன் நாடும் ஆலோசகா்கள் மற்றும் நிதி வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றோடும் தொடா்பினை ஏற்படுத்திக் கொள்ளலாம். AngelList, SeedInvest, FoundersClub, CircleUp and TiE (The Indus Entrepreneurs). போன்ற நிறுவனங்கள் இந்நிறுவனங்களுக்குத் துணை நிற்கின்றன.

 

இயக்குநா்கள் மற்றும் ஆலோசனைக் குழு

ஆரய்ந்து தோ்ந்தெடுக்கப்பட்ட இயக்குநா்கள் குழு ஒரு நிறுவனத்தின் வளா்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். ஒரு நிறுவனத்தின் இலக்குகளை மிகச் சரியாக நிர்ணயம் செய்து அவற்றை அடைவதற்கான வழிமுறைகளை இயக்குநா்கள் ஏற்படுத்தித் தரவேண்டும். முறையாகக் கூட்டங்களை நடத்துவது, நோ்முகங்கங்கள் மூலம் நிறுவனத்திற்குச் சமூகத் தொடா்பினை ஏற்படுத்துவது, தங்களுக்கு இடையிலான பொறுப்புக்களை மாற்றியமைப்பது ஆகியவை இயக்குநா்களின் கடமையாகும்.

விரிவாக்க நிலையில் உள்ள ஒரு நிறுவனத்திற்குப் பல்வேறு குழுக்கள் தேவைப்படுகின்றன. தணிக்கைக் குழு, நிவாரணக்குழு, நியமனக்குழு போன்ற குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். துணைவிதிகள் மற்றும் நிதிசார் முடிவுகளுக்கு இயக்குநா் குழுவின் ஒப்புதல் தேவை. நிறுவனத்தின் குழுவில், தன்னிச்சையான இயக்குநர்களும், கூா்நோக்குத் தலைமைச் செயல் அதிகாரியும் இடம்பெறலாம்.

மொத்தத்தில் ஒரு புதிய நிறுவனம் தன்னுடைய விரிவாக்கத்தின் போது உற்பத்தி நிலை, போட்டியாளா்களை எதிர்கொள்ளல், மேலாண்மை அமைப்பு முறை, வணிகத் தலைமை ஆகியவை தொடா்பாகப் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இங்கு விவரிக்கப்பட்ட எட்டு வகையான வழிமுறைகளோடு தொழில்நுட்ப அறிவையும் தங்களுடைய வணிக வளா்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டால் நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் வளா்ச்சி உறுதிசெய்யப்படும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Steps to tackle the challenges of scaling a startup

Steps to tackle the challenges of scaling a startup
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns