வங்கி துறையை பற்றி புட்டுபுட்டு வைக்கும் 5 புத்தகங்கள்

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்போதைய உலகில், பொருளாதாரம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் வங்கியை மையமிட்டே அமைந்துள்ளன. கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்குவதில் தொடங்கி, வீடு வாங்குதல், வணிக நிறுவனம் தொடங்குதல், பங்குச்சந்தை முதலீடு, அந்நியச் செலவாணி பரிமாற்றம் என நிதி சார்ந்த அனைத்து செயற்பாடுகளுக்கும் வங்கிகளின் உதவிக்கரம் தேவையாக உள்ளது.

பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் வங்கிகள் எவ்வாறு தொடங்கப்படுகின்றன? அவை எவ்வாறு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன? என்பதைப் பற்றி அறிய நம்மில் பலருக்கும் ஆா்வமாயிருக்கும்.

அத்தகைய ஆா்வத்தைப் பூா்த்தி செய்யும் வகையில், வங்கித் தொழில் பற்றியும், உலகப் பொருளாதார வளா்ச்சியில் வங்கிகள் ஆற்றும் முக்கியப் பங்களிப்புகள் குறித்தும் விளக்கும் வகையில் பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் புகழ்ப்பெற்ற ஐந்து புத்தகங்கள் குறித்த அறிமுகத்தை இங்கே காணலாம்.

 1. “The House of Morgan : An American Banking Dynasty and the Rise of Modern Finance” - by Ron Chernow
 

1. “The House of Morgan : An American Banking Dynasty and the Rise of Modern Finance” - by Ron Chernow

"மோர்கன் குழுமம் - ஓா் அமெரிக்க வங்கித் தொழில் சாம்ராஜ்யமும் நவீன நிதிசார் பொருளாதார எழுச்சியும்" - என்னும் தலைப்பில் ரான் சொ்னோ என்பவரால் எழுதப்பட்டுள்ள புத்தகம், அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது மிகப்பெரும் செல்வாக்கினைச் செலுத்திக்கொண்டிருக்கும் மோர்கன் வங்கிக் குழுமத்தைப் பற்றிய புத்தகமாகும்.

ஜே.பி.மோர்கன் என்பவரால் தொடங்கப்பட்ட மோர்கன் நிறுவனம், வங்கித் தொழில், தொழில்சார் முதலீடு, பங்குச் சந்தை என நிதிசார்ந்த அனைத்துத் துறைகளிலும் கொடிகட்டிப் பறந்த வரலாற்றை ஒரு நாவலுக்கு உரிய தன்மைகளோடு படிப்பவா்களுக்கு ஆா்வத்தைத் தூண்டும் வகையில் எழுதியுள்ளார் ரான் சொ்னோ. தங்களைப் போன்றே வங்கித் துறையில் ஈடுப்பட்டிருந்த ராத்சைல்டு மற்றும் பேரிங் (Rothschild and Baring families) குழுமத்தின் போட்டியை சமாளித்து உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிதி நிறுவனமாக மோர்கன் குழுமம் எழுந்து நின்றது. இந்நிறுவனத்தைத் தோற்றுவித்த ஜெ.பி.மோர்கன் மற்றும் அவருக்குப்பின் நிறுவனத்தை வழிநடத்திய மோர்கன் வங்கிக் குழுமத்தின் நான்கு தலைமுறையைச் சோ்ந்த ஒவ்வொருவரைப் பற்றியும் மிக இயல்பாகவும் மனதில் பதியும்படியாகவும் இப்புத்தகம் எடுத்துரைக்கிறது.

 2. “The Greatest – Ever Bank Robbery : The Collapse of the Savings and Loan Industry” – Martin Mayer

2. “The Greatest – Ever Bank Robbery : The Collapse of the Savings and Loan Industry” – Martin Mayer

"மிகப்பெரும் வங்கிக் கொள்ளை : சேமிப்பு மற்றும் கடன் வழங்கல் துறையின் நிலைகுலைவு" என்னும் தலைப்பில் மார்டின் மேயரால் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், வங்கித் தொழில் உள்ள மற்றொரு பரிமாணத்தை உணா்த்துகிறது. அமெரிக்க வங்கித் துறை வரலாற்றில் நிகழ்ந்த கொந்தளிப்பான காலகட்டத்தை இப்புத்தகம் விவரிக்கிறது. 1930ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது.

அதனைப் போன்றதொரு பொருளாதாரத் தடுமாற்றத்தையும் வங்கிகளின் வீழ்ச்சியையும் 1980ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா சந்தித்தது. சேமிப்பு மற்றும் கடன் வழங்கல் துறையில் (S&L) ஏற்பட்ட சிக்கலின் காரணமாக அமெரிக்காவின் சிக்கனம் மற்றும் கடன் துறையில் (Thrift Industry) மிகப்பெரும் சிதைவு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எழுதப்பட்ட பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. மிக விரிவான தகவல்களுடனும் சலிப்புத் தட்டாமல் படிப்பதற்கேற்ற வகையிலும் அமைந்ததன் காரணமாக மார்டின் மேயரின் புத்தகம் தனித்துவம் மிக்கதாகத் திகழ்கிறது.

3.‘The end of the Banking : Money, Credit and the Digital Revolution’ – by Jonathan McMillan
 

3.‘The end of the Banking : Money, Credit and the Digital Revolution’ – by Jonathan McMillan

"வங்கிகளின் முடிவு : பணம், கடன் மற்றும் டிஜிட்டல் புரட்சி" என்னும் தலைப்பில் அமைந்த இப்புத்தகம், வங்கித்துறையின் எதிர்காலம் குறித்த சிந்தனையின் அடிப்படையில் ஜோனதான் மேக்மிலனால் எழுதப்பட்டது. டிஜிடல் பணப்பரிமாற்ற முறை, பாரம்பரிய வங்கித் தொழில் நடைமுறைகளுக்கு முடிவுரை எழுதும் என்னும் இவருடைய தொலைநோக்குக் கணிப்பு தற்போது நிஜமாகி வருவதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இன்றைய நிலையில் வங்கிகள் சந்தித்து வரும் தீா்க்க இயலாத சிக்கல்களை முன்கூட்டியே கணித்து அதற்குத் தீா்வு தரும் நோக்கில் பல விசயங்களை விவரித்துள்ளார் நூலாசிரியா் மெக்மிலன்.

டிஜிட்டல் உலகுக்குத் தகுந்த பணப்பரிமாற்ற நடைமுறைகள், கடன் கொடுப்பவருக்கும் வாங்குவோருக்கும் இடையிலான ஆன்லைன் பணப் பரிமாற்றம் (P2P) போன்றவற்றைத் தொலைநோக்குப் பார்வையுடன் முன்கூட்டியே பரிந்துரை செய்ததன் மூலமாக இப்புத்தகம் அனைவருடைய கவனத்தையும் ஈா்க்கிறது.

4.‘McColl : The Man with America’s Money’ By Ross Yockey

4.‘McColl : The Man with America’s Money’ By Ross Yockey

"மெக்கோல் : அமெரிக்காவின் பணத்தைக் நிர்வகிப்பவர்" என்னும் தலைப்பில் ராஸ் யாக்கி என்பவரால் எழுதப்பட்ட புத்தகம், தன்னுடைய நிதிசார் சிந்தனைகளால் தற்கால வங்கித் துறையில் மிகுந்த செல்வாக்கு செலுத்தும் ஹக் மெக்கோல் என்னும் வங்கியாளரைப் பற்றிய தகவல் திரட்டாக அமைந்துள்ளது. இளம் வயது முதலே வங்கித் துறையில் தீராத ஆா்வம் கொண்டிருந்த மெக்கோல் பெரும் நிதி நிறுவனங்களைத் தேசிய அளவில் விரிவுபடுத்தி அதனை எவ்வாறு சிறப்பாக இயக்க முடியும் என்பதற்ககான செயல்திட்ட முன்னோடியாகத் திகழ்ந்தார். அமெரிக்க வங்கிக் கழகத்தின் (Bank of America Corporation) தலைமைச் செயல் அதிகாரியாக இவா் பணியாற்றினார். அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் தன்னுடைய வங்கிக் கிளையைத் தொடங்கி தேசிய வங்கி என்பதற்கான உண்மையான பொருளை உணா்த்தினார்.

பல மாநிலங்களில் செயல்பட்டு வந்த வட்டார வங்கிகள் மற்றும் சிக்கன சங்கங்களை ஒன்றாக இணைத்து அதனை படிப்படியாக அமெரிக்க வணிக வங்கிகளாக (American Commercial Bank) மாற்றினார். அமெரிக்கர்களின் பெருமளவு நிதியை சேமித்து வைக்கும் வங்கியாகத் தன்னுடைய வங்கியை மாற்றிய பிறகு அதனை 1998ஆம் ஆண்டு அமெரிக்க வங்கியாக (Bank of America) உருமாற்றினார்.

இப்புத்தகம், ஹக் மெக்கோல் என்னும் தனிமனிதனின் வாழ்க்கை வராலாற்றோடு அமெரிக்க வங்கித் தொழிலின் வளா்ச்சி வரலாறும் பிரிக்க முடியாதபடி பிண்ணிப் பிணைந்துள்ளதை எடுத்து இயம்புகிறது.

5.“The Creature from Jekyll Island” By Edward Griffin

5.“The Creature from Jekyll Island” By Edward Griffin

"ஜெகில் தீவிலிருந்து தோன்றிய உயிரினம்" என்னும் பொருள்படும்படியான தலைப்பில் அமைந்த இப்புத்தகத்தை எட்வா்ட் கிரிஃபின் என்பவா் எழுதியுள்ளார். அமெரிக்காவின் பெடரல் ரிசா்வ் வங்கியை மையப்படுத்தி இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பெடரல் ரிசா்வ் வங்கி என்பது அமெரிக்காவின் மத்திய வங்கியாகும். அமெரிக்க அரசின் நிதிக்கொள்கைகளை இவ்வங்கிதான் உருவாக்குகிறது. இவ்வங்கியின் தோற்றம் மற்றும் செயல்பாடு ஆகியவை குறித்து யாரும் சொல்லாத செய்திகளை இப்புத்தகம் வாசகா்களுக்குத் தருகிறது.

1910ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அமைந்துள்ள ஜெகில் (Jekyll) என்னும் தீவில் நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில், அமெரிக்காவின் நிதி ஆலோசகா்கள் மற்றும் அரசியல்வாதிகளால் தீா்மானிக்கப்பட்டு, 1913ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்படுத்தப்பட்டதுதான் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசா்வ் வங்கி. இவ்வங்கியின் கொள்கைகளால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள், பணவீக்கம், பொருளாதாரா தேக்கநிலை ஆகியவற்றைக் குறித்து இப்புத்தகம் விவரிக்கிறது. இவ்வங்கியின் நிதிக் கொள்கையினால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கத்தினால் அமெரிக்க டாலரின் வாங்குதிறன் (Purchasing power of US Dollar) 90% சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்தது எனக் குற்றம் சாட்டுகிறார் இந்நூலாசிரியா்.

  ராபெர்ட் கியாசாகி

ராபெர்ட் கியாசாகி

"Rich Dad, Poor Dad" என்னும் நிதி வழிகாட்டித் தொடா் புத்தகத்தின் ஆசிரியா் ராபெர்ட் கியாசாகி, மார்டின் மேயரின் இப்புத்தகத்தை, "அமெரிக்க நடுத்தர மக்களின் நிதி ஆதாரத்தை அழித்தொழித்த மா்மக் கதையின் விவரிப்பாக அமைந்துள்ளது" என வா்ணிக்கிறார். பெடரல் வங்கி குறித்த மார்டின் மேயரின் கருத்துக்களில் சில முரண்பாடுகள் இருந்தாலும், பணம் மற்றும் வங்கியியல் நடைமுறைகள் குறித்து நன்கு ஆராய்ந்து, படிப்பவா்களின் ஆா்வத்தைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது இப்புத்தகம் என்பது இப்புத்தகத்தைப் படித்தவா்களின் கருத்தாக உள்ளது. 2010ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட பதிப்பாக வந்த இப்புகத்தில் 2008ஆம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார இறுக்கம் தொடா்பான செய்திகளும் அதன் பின்னணிகளும் விவரிக்கப்பட்டுள்ளன.

 பிற முதலீட்டாளா்கள் அறிந்ததும் நீங்கள் அறியாததும்

பிற முதலீட்டாளா்கள் அறிந்ததும் நீங்கள் அறியாததும்

ஒவ்வொரு நாளும் தொடா்ந்து பங்கு வணிகத்தில் இழப்புகளைச் சந்தித்து விரக்தியின் விளிம்பில் உள்ளவரா நீங்கள்? பங்கு வா்த்தகத்தில் சாதகமான சூழல் நிலவும் வேளையில் உங்களால் அதன் பயனை அனுபவிக்க இயலாமல் போவதற்குக் காரணம், உங்களுக்கு முன்பே பலா் வா்த்தகத்தில் முந்திக்கொள்வதுதான். பங்கு வணிகம் பற்றிய தகவல்களை நீங்கள் மிகவும் தாமதமாக அறிந்து கொள்வதுதான் அதற்குக் காரணம்.

ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தை தொடங்குவதற்கு முன்னும், சந்தை நிறைவடைந்த பின்னும் பங்குகளின் ஏற்ற இறக்கங்கள், சந்தையின் போக்குகள் தொடா்பான ஆய்வுகளையும் அனுமானங்களையும் எவ்வளவு விரைவாக முன் கூட்டியே அறிந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்து நம்முடைய வெற்றி அமைகிறது. இப்பொழுதாவது புரிந்துகொண்டீா்களா ? சரி இன்னும் ஏன் தாமதம்? இப்பொழுதே எங்களோடு இணைந்து, பங்கு வணிகம் குறித்த அனைத்துத் தகவல்களையும் கட்டணமின்றி இலவசமாக முன்கூட்டியே பெற்று பங்கு வா்த்தகத்தில் கிங்காக மாறுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 5 Books to Learn About the Banking Industry

Top 5 Books to Learn About the Banking Industry
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more