ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஓய்வூதிய நிலைமையை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?

Written By: Lekhaka
Subscribe to GoodReturns Tamil

கடந்த புதன்கிழமை EPFO அமைப்பு ஓய்வூதியம் பெறுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய கணக்கு விவரங்களை ஆன்லைனில் பார்க்கக்கூடிய ஒரு புதிய போர்ட்டலை EPFO அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள் எந்த விதமான தொந்தரவும் இல்லாமல், தங்களுடைய KYC தொடர்பான விவரங்கள், ஓய்வூதிய செலுத்துதல் வரிசை எண், ஓய்வூதிய செலுத்து ஒழுங்கு விவரங்கள், பாஸ் புக் தகவல்கள் போன்ற பல்வேறு ஓய்வூதிய விவரங்களை இந்தப் போர்டலின் மூலம் கண்காணிக்க முடியும்.

ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஓய்வூதிய நிலைமையை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?

இங்கே உங்கள் ஓய்வூதிய விவரங்களை என்பதைக் கண்டுபிடிக்க உதவும் செயல்முறைகளைப் பற்றிய விரிவான படிநிலை விளக்கத்தைக் காணலாம்.

இணையதளம்

வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ள mis.epfindia.gov.in/PensionPaymentEnquiry என்கிற இணைப்பிற்குச் சென்று அல்லது EPFO இணையதளத்திற்குச் சென்று 'Pensioners Portal' க்கான இணைப்பைச் சொடுக்கி பிஎப் மற்றும் ஓய்வூதிய தொகையினைக் காணலாம்.

ஜீவன் பிரமன் ஐடி

அந்த வலைத்தளத்தில், உங்கள் ஓய்வூதியக் கணக்கு தொடர்பான அனைத்து சேவைகளைப் பெற உங்களுக்கு வழங்கப்பட்ட, உங்களுடைய ஜீவன் பிரமன் ஐடி ஐ உள்ளிடவும். இந்தப் போர்ட்டலின் கீழ் உங்களுடைய பிஓஓ எண், பிபிஓ விசாரணை, பணம் சார்ந்த விசாரணை, ஓய்வூதிய நிலை விசாரணை மற்றும் ஜீவன் பிரமான் விசாரணை போன்ற பலவேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

விவரங்கள்

ஓய்வூதியம் பெறுவோர் தாங்கள் ஓய்வூதியம் பெறும் தேதி போன்ற விபரங்களை அந்த வலைத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். அதோடு அவர்கள் தங்களால் சமர்ப்பிக்கப்பட்ட வாழ்க்கைச் சான்றிதழின் நிலையையும் அறிந்து கொள்ளலாம். இந்த வலைத்தளத்தில் ஒருவர் தன்னுடைய ஓய்வூதியம் ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய விபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

கேஒய்சி

இதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதிய நிதி அமைப்பானது 'டிராக் ஈ.கே.ஒய்.சி.' எனப்படும் ஒரு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதிகளைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்களுடைய ஆதார் மற்றும் யூ ஏ என் இணைப்பைப் பற்றிய விபரங்களையும் தெரிந்து கொள்ள இயலும். அதோடு மட்டுமல்ல பயனர்கள் தங்கள் வழங்கிய விவரங்களில் உள்ள பொருத்தமற்ற மற்றும் தவறான தகவல்களைப் பற்றிய விபரங்களையும் தெரிந்து கொள்ள இயலும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How Pensioners Can Check Pension Status Online?

How Pensioners Can Check Pension Status Online?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns