எல்ஐசி பிரீமியமை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்ஐசி பிரீமியத்தினை நேரடியாக அதன் கிளைகளுக்குச் சென்று செலுத்துவது உங்களுக்குச் சிரமாக உள்ளதா? இதோ உங்களுக்காகவே இருக்கிறது ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்து எல்ஐசி பிரீமியத்தினை ஆன்லைனில் செலுத்துவதற்கான சேவை. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பாலிசிதார்களுக்குச் சில ஆன்லைன் சேவைகள் மூலம் பிரீமியங்களைச் செலுத்த வழிவகைச் செய்துள்ளது.

 

எனவே எல்ஐசி பிரீமியத்தினை எல்ஐசி இணையதளம் அல்லது எல்ஐசி இந்தியா செயலி மூலம் செலுத்த முடியும்.

இதோ ஆன்லைனில் எப்படி எல்ஐசி பிரீமியத்தினை வெவ்வேறு வழிகளில் செலுத்துவது என்று இங்குப் பார்க்கலாம்.

எல்ஐசி இணையதளம் வாயிலாகப் பிரீமியத்தினைச் செலுத்துவது எப்படி?

எல்ஐசி இணையதளம் வாயிலாகப் பிரீமியத்தினைச் செலுத்துவது எப்படி?

எல்ஐசி பிரீமியத்தை www.licindia.in என்ற இணையத்தில் ‘Pay Premium online' என்ற தெரிவை கிளிக் செய்வதன் மூலம் ‘ஆன்லைன் சேவை இணையதளத்திற்கு' உங்களால் செல்ல முடியும். இங்கு உங்களுக்கு அ) நேரடியாகப் பணம் செலுத்துதல் (லாக் இன் செய்யாமல்) மற்றும் ஆ) வாடிக்கையாளர் இணையதளம வழியாகப் பணம் செலுத்துதல் என இரண்டு வகையாகப் பிரீமியம் தொகையினைச் செலுத்த முடியும்.

லாக் இன் செய்யாமல் நேரடியாகப் பிரீமியம் செலுத்துவது எப்படி?
 

லாக் இன் செய்யாமல் நேரடியாகப் பிரீமியம் செலுத்துவது எப்படி?

எல்ஐசி இணையதளத்தில் பதிவு செய்ய விரும்பாத வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பணத்தினைச் செலுத்தும் முறையினைத் தேர்வு செய்யும் போது அவர்களுக்கு மூன்று தெரிவுகள் வரும் அ) பிரீமியம் செலுத்துதல் / ரெவைவல் ஆ) கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் இ) கடன் வட்டியைத் திருப்பிச் செலுத்துதல்

படி 1: பணத்தினைச் செலுத்த "பிரீமியத்தைச் செலுத்தவும்" என்பதைத் தேர்வு செய்யவும்.

படி 2: அப்போது உங்கள் கணினி திரையில் பிரீமியம் செலுத்தல் பிராசஸ் செய்யப்பட்ட பிறகு "தொடரவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3: பின்னர்ப் பிரீமியம் எண், பிரீமியம் செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும். இந்த விவரங்களை எல்லாம் அளிக்கும் போது அவை சரியாக உள்ளிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும், நேரத்தினை வீணடிக்காமல் அடுத்தப் படிக்கு செல்ல வேண்டும்.

படி 4: பின்னர்க் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ‘நான் ஏற்கிறேன்' என்பதைக் கிளிக் செய்தபிறகு சமர்ப்பிக்கவும் என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

படி 5: ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசிக்கான விவரங்களையும் ஒரே நேரத்தில் உள்ளிட்டுப் பிரீமியத்தினைச் செலுத்த முடியும்.

படி 6: அடுத்தப் படியில் எவ்வளவு பாலிசிகளுக்கு எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும் என்றும் வரியுடன் விவரங்கள் காண்பிக்கப்படும். அதன் பின் அதனைச் சரிபார்த்து செலுத்தவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

படி 7: பணத்தை இணையதள வங்கி சேவை, இ-வாலெட்டுகள், கிரெட்ட் கார்டுகள், டெபிட் கார்டுகள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு, ஸ்டாண்டர் சார்டெட் வங்கி யூபிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி யூபிஐ வழியாக எல்லாம் பணத்தினைச் செலுத்த அனுமதிக்கப்படுவீர்கள்.

படி 8: அதில் உங்களுக்குத் தோதான பணம் செலுத்தும் வழிமுறையைத் தேர்வு செய்து பணம் செலுத்தலாம்.

வாடிக்கையாளர் தளம் வழியாக எல்ஐசி பிரீமியம் செலுத்துவது எப்படி?

வாடிக்கையாளர் தளம் வழியாக எல்ஐசி பிரீமியம் செலுத்துவது எப்படி?

எல்ஐசி வாடிக்கையாளர் இணையதளத்தில் நீங்கள் ஏற்கவே பதிவு செய்து இருந்தால் நீங்கள் லாக் இன் செய்ய வேண்டிய விவரங்களைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். இல்லை என்றால் முதலில் உங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

உங்களை நீங்கள் பதிவு செய்துகொள்ளச் சைன் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அப்போது பாலிசி எண் மற்றும் பிரீமியம் தொகை, பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

மேலே கூறிய விவரங்களை அளித்துப் பதிவு செய்த பிறகு எல்ஐசி இணையதளத்தில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து பணத்தினைச் செலுத்தலாம்.

படி 1: உங்கள் விவரங்களை உள்ளிட்டு எல்ஐசி வாடிக்கையாளர் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

படி 2: ஒரு முறை நீங்கள் உள்நுழைந்த பிறகு ஆன்லைன் பேமெண்ட்ஸ் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அது உங்கள் பிரீமியம் செலுத்துவதற்கான இணையதளத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும்.

படி 3: பாலிசிகளைத் தேர்வு செய்து அதற்கான கட்டணத்தினைச் சரிபார்த்துக் கட்டணத்தினைச் செலுத்தலாம்.

படி 4: அப்போது உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் பிரீமியம் தொகை உள்ளிட்டவற்றை மறுமுறை சரிபார்த்துக்கொண்டு பணத்தினைச் செலுத்தலாம்..

படி 5: பணப் பரிவர்த்தனை கேட்வேயை தேவு செய்து பரிவர்த்தனையை நிறைவு செய்யலாம்.

பணத்தினைச் செலுத்தும் போது கவனத்திகொள்ள வேண்டியவை

பணத்தினைச் செலுத்தும் போது கவனத்திகொள்ள வேண்டியவை

1. சரியான மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அளிக்க வேண்டும்

2. ரசீது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

ஆன்லைன் முறையில் பாலிசிதாரர் தான் பிரீமியம் செலுத்த வேண்டும். மூன்றாம் தரப்பினர் செய்யக் கூடாது.

4. பிரீமியம் பணம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பெறப்பட்டுப் பிறகு பிழை பக்கம் காண்பிக்கப்பட்டாலும் மின்னஞ்சல் முகவரிக்கு மூன்று நாட்களுக்குள் ரசீது மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். புகார் அளிக்க விரும்பினால் bo_eps1@licindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் அளிக்கலாம்.

5. மீண்டும் பணத்தினைச் செலுத்தும் முன்பு உங்கள் வங்கி கணக்கு அறிக்கையினைச் சரிபார்க்கவும். பணம் பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால் நிறுவனம் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் வரை காத்திருக்கவும்.

6. ஆன்லைன் போர்ட்டல் இந்திய வங்கிகள் அளித்த கார்டுகள் மூலமாகப் பணத்தினைச் செலுத்த அனுமதிக்கும். வெளிநாட்டு வங்கி கார்டுகளை ஏற்காது.

செயலி மூலமாகப் பணத்தினைச் செலுத்துதல்

செயலி மூலமாகப் பணத்தினைச் செலுத்துதல்

எல்ஐசி செயலியை கூகுள் பிளே ஸ்டோ அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் எல்ஐசி கஸ்டமர், எல்ஐசி டைரக்ட் மற்றும் மை எல்ஐசி செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பிரீமியத்தினைச் செலுத்தலாம்.

 எல்ஐசி வாடிக்கையாளர்கள் செயலி

எல்ஐசி வாடிக்கையாளர்கள் செயலி

இந்தச் செயலியை பயன்படுத்தியும் இணையதளம் போன்றே நேரடியாகவும், பதிவு செய்தும் பிரீமியம் தொகையினைச் செலுத்தலாம். அது மட்டும் இல்லாமல் அருகில் உள்ள எல்ஐசி அலுவலகத்தினைக் கண்டறிதல் மற்றும் பிரீமியம் கால்குலேட்டர் போன்ற சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற்றுப் பயன்படுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to pay LIC premium through online

How to pay LIC premium through online
Story first published: Thursday, May 10, 2018, 17:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X