ஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா?

திருமணம் மட்டுமே ஒரு குடும்பத்தைத் தராது என்கிற ஒரு புதிய சித்தாந்தம் இன்று இந்தியாவில் பரவலாகப் பரவி வருகின்றது. திருமணப் பாந்தத்தில் இணையாமல் அந்தக் கஷ்டத்தை அனுபவிக்காமல் வாழ்வை அனுபவிக்கும் ஒரு புதிய தலைமுறை இன்று புதிதாகக் கிளம்பி இருக்கின்றது. என்னதான் அவர்கள் குடும்ப அமைப்புக்குள் சிக்காமல் தப்பிக்க நினைத்தாலும் பந்தம் மற்றும் பாசம் ஆகிய இரண்டும் அவர்களை இந்தச் சமூகத்துடன் இணைக்கத்தான் செய்கின்றது. திருமணத்தைத் தவிர்த்தாலும் அவர்களால் அவர்களுடைய அன்புக்குரியவர்களைத் தவிர்க்க முடியாது.

திருமண வாழ்வு ஒரு சில நன்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாய் போல், திருமண வாழ்வில் ஈடுபடாதவர்களுக்கும் சுதந்திரம் என்கிற ஒன்று போராடாமலேயே கிடைத்து விடுகின்றது. ஒண்டிக்கட்டை நபர்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நண்பர்களோடு சாகசப் பயணங்கள், டிவி பார்ப்பது, ஷாப்பிங் செல்வது, பார்ட்டிக்கு செல்வது, விருந்துக்குச் செல்வது போன்ற எண்ணற்ற செயல்களைச் செய்கின்றனர். அவர்கள் தங்களுடைய வாழ்வை மிகவும் சுதந்திரமாக அனுபவிக்கின்றனர். எனவே அவர்களின் இந்த "சுயாதீன வாழ்க்கை, ஒற்றுமையும் சுறுசுறுப்பும் நிறைந்த சுமைகளுடன் சேர்ந்து". ஒரு சிலருக்குத் திருமணம் என்பது சுதந்திரத்தை பறிக்கும் ஒரு செய்கையாகத் தோன்றுகின்றது. அவர்களுக்குத் திருமண வாழ்வு ஒரு கசப்பு மருந்து போன்றது. ஆகவே அவர்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தனியாக இருப்பதை விரும்புகின்றனர். அதிலும் பொருளாதார வாழ்வைப் பொறுத்த வரை அவர்களும் மிகக் சாதாரணமானவர்களே. மற்றவர்களுக்கு உள்ள அழுத்தங்கள் அனைத்தும் ஒண்டிக் கட்டை நபர்களுக்கும் உண்டு.

இன்றைய சுழலில் ஒரு புத்திசாலியான நிதி திட்டமிடல் அம்சங்களில் ஒன்று ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை வாங்குவதாகும். அதிலும் சுமார் 40 அல்லது 45 வயதை அடைந்தால், கண்டிப்பாக ஆயுள் காப்பீட்டைப் பெற வேண்டும் என்பது ஒரு கலாச்சாரமாகவே மாறி விட்டது., ஆயுள் காப்பீட்டைப் பற்றிப் பேசும் பொழுது அது குடும்பப் பந்தித்ததில் இருக்கின்ற மனிதர்களுக்கு மட்டுமே என்கிற மனோபாவம் நம்மிடையே காணப்படுகின்றது. திருமணப் பாந்தத்தில் இணையாதவர்களுக்கும் காப்பீடு என்பது மிகவும் அவசியம். ஒண்டிக்கடடை நபர்கள் எதற்காகக் காப்பீடு பெற வேண்டும். அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

 கரணம் 1. மிக்கக் குறைந்த பிரிமியம்

கரணம் 1. மிக்கக் குறைந்த பிரிமியம்

இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள், 20 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். இளைய வயதில், மக்கள் ஆரோக்கியம் மிகுந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியங்கள் வயது, ஒருவருடைய தனிப்பட்ட வரலாறு, குடும்ப வரலாறு, சமூகக் சுழல் மற்றும் பல்வேறு காரணிகளைச் சார்ந்திருக்கிறது. குறைந்த வயதில் ஒரு காப்பீடு திட்டத்தை வாங்கும் பொழுது குறைந்தபட்ச பிரீமியம் செலவில் அதிக அளவு தொகைக்குக் காப்பீடு வழங்கப்படும்.

காப்பீட்டு நிறுவனங்கள் உங்களுடைய வாழ்வை "ஆரோக்கியமான வாழ்க்கை" என்று கருதுவார்கள் மற்றும் உங்கள் சுயவிவரத்தில் குறைந்த ஆபத்து எனக் குறிப்பிடப்பட்டு உங்களிடம் குறைவான பிரீமியம் கட்டணங்களையும், குறைந்த இறப்பு விகிதங்களையும் வசூலிப்பார்கள். எனவே இத்தகைய சுழில் ஆயுள் காப்புறுதிக் காப்பீட்டுக் காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரீமியங்கள் (பிரீமியம் விருப்பத்தேர்வை அதிகரிப்பதற்கு நீங்கள் விரும்பியிருந்தால்) மிக்கக் குறைவாகவே இருக்கும். மேலும் அதே அளவு பிரிமியத் தொகையுடன் நீங்கள் ஆயுள் முழுவதும் உங்களுடைய காப்பீடு திட்டத்தைத் தொடரலாம். உங்களுடைய மத்திம வயதில் நீங்கள் காப்பீடு வாங்க நினைத்தால் அதற்கு அதிகப் பிரிமியம் செலுத்த வேண்டும். அது உங்களைக் காப்பீடு வாங்காமலே செய்திடும்.

 

கரணம் 2: உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நிதி பாதுகாப்பு

கரணம் 2: உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நிதி பாதுகாப்பு

ஒண்டிக் கட்டையாக இருப்பது என்பதற்குத் தனியாக இருப்பது என்று அர்த்தமில்லை. நீங்கள் கவனிப்பதற்கு உங்களுடைய பெற்றோரும் சகோதரர்களும் உள்ளனர். எனவே வாழ்க்கையில் நீங்கள் அன்புக்குரியவர்களால் நிறைந்திருக்கிறீர்கள். எனினும் உங்களுக்குக் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், நீங்கள் ஒற்றைப் பேர்வழியாக இருந்தாலும், உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்குவீர்கள். எனவே ஒரு ஆயுள் காப்பீட்டை வாங்குவது என்பது ஒரு பொறுப்பான முடிவாகும். மற்றும் அது ஒரு சிறந்த முடிவாகும். மேலும், ஒரு வேளை மனது மாறி நீங்கள் சில ஆண்டுகளில் திருமணம் செய்து கொள்வீர்கள்; அப்பொழுது நீங்கள் உங்கள் குடும்பம் பெருகி விடும். உங்களுடைய பொறுப்புகளும் அதிகரித்து விடும். எனவே உங்களுடைய அன்புக்குரியவர்களுக்குத் தேவையான நிதி பாதுகாப்பை வழங்குவதற்கு நீங்கள் சரியான கட்டத்தில் ஆயுள் காப்புறுதித் திட்டத்தை வாங்குவது மிகவும் முக்கியம். கொள்கையை நீங்கள் வங்கிக்குச் செலுத்தலாம்.

கரணம் 3: சேமிப்பு பழக்க வழக்கங்கள்

கரணம் 3: சேமிப்பு பழக்க வழக்கங்கள்

ஆயுள் காப்பீட்டு பாலிசி என்பது காப்பீட்டாளருடன் காப்பீடு நிறுவனம் செய்து கொள்ளும் ஒரு நீண்டகால ஒப்பந்தம். நீங்கள் காப்பீட்டாளராக இருப்பதால் அதற்கான வழக்கமான பிரீமியத்தைச் செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்தும் பிரிமியம் மட்டுமே உங்களுடைய காப்பீடை செயலில் வைத்திருக்க உதவும். உங்கள் காப்பீடு கொள்கைக்கான நிலையான அளவு பிரீமியத்தைச் செலுத்துவதால், இது உங்களிடம் ஒரு வழக்கமான சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும். எனவே இது உங்களுடைய செலவினங்களைக் கட்டுப்படுத்த உதவும். ஒரு நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில் நிலையான சேமிப்பு என்பது ஒரு வலுவான வருங்கால நிதியை உறுதிசெய்கிறது. வருங்காலங்களில் இது பல்வேறு நிலைகளில் உங்களுடைய நிதி தேவைகளைப் பூர்த்திச் செய்யும். வழக்கமான சேமிப்புப் பழக்கம் உங்களிடம் பொறுப்பையும் விவேகத்தையும் ஏற்படுத்தும்.

காரணம் 4: வரி நன்மைகள்

காரணம் 4: வரி நன்மைகள்

ஆயுள் காப்புறுதி பாலிசிக்கு நீங்கள் செலுத்தும் பிரீமியத்திற்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும். பிரிவு 80C கீழ் பெறக்கூடிய அதிகபட்ச வரி விலக்கு ரூ 1.5 லட்சம் ஆகும். மேலும், முதிர்ச்சி வருமானத்திற்கும் வரிச் சட்டம் 10-ஆவது 10 (10 டி) திட்டத்தின் கீழ் நிபந்தனைகளுக்குட்பட்ட நிலைமைகளின் அடிப்படையில் வரி விலக்கும் கிடைக்கும்.

கரணம் 5: தொகுக்கப்பட்ட நன்மைகளுடன் பாதுகாப்பான முதலீடு

கரணம் 5: தொகுக்கப்பட்ட நன்மைகளுடன் பாதுகாப்பான முதலீடு

ஆயுள் காப்பீடு என்பது ஒரு பாதுகாப்பான முதலீட்டு ஆகும். பிற முதலீடுகளான பங்குகள், பரஸ்பர நிதி போன்ற முதலீடுகள் , சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. பாரம்பரிய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் உங்கள் முதலீட்டில் உள்ள அபாயக் காரணிகளை அகற்றும். உங்களுக்கு உத்தரவாதத்துடன் கூடிய வருமானத்தை வழங்கும். மேலும், உங்களுடைய ஆயுள் காப்பீட்டுத் திட்டம் உங்களுக்குச் சில கூடுதல் நன்மைகள் அளிக்கிறது:

உங்கள் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எதிராக நீங்கள் கடன் வாங்கலாம்
உங்கள் ஆயுள் காப்புறுதிக் கொள்கையானது நீங்கள் பல்வேறு கடன்களைப் பெறுவதற்கு இணைப்பாகச் செயல்படலாம். அவசர நிதி தேவைகளைப் பூர்த்திச் செய்ய உங்கள் காப்பீடு திட்டங்களில் சேர்த்துள்ள நிதிகளில் இருந்து ஒரு பகுதி நிதியை திரும்பப் பெறலாம்.

எனவே ஒண்டிக்கட்டையாக நீங்கள் இருந்தாலும் சரியான முடிவுகளை எடுப்பதன் மூலம் பல்வேறு அதிசயங்களைப் பெறுங்கள். இந்த நிலையில் நீங்கள் எடுக்கும் விவேகமான நிதி முடிவுகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+