பங்குச்சந்தை வர்த்தகத்தில் வெற்றி அடைவதற்கான ரகசியம் இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவர் ஒரு தவறை தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும். தான் செய்த தவறிலிருந்து கண்டிப்பாகப் பாடம் கற்றுக் கொண்டு அந்தத் தவறு தன் வாழ்நாளில் மீண்டும் திரும்பாமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் பழக்கத்தை ஒரு அனிச்சை செயலாக மாற்றிக் கொண்ட நபரே வெற்றி பெற்ற நபராவர். இதை நாம் சிறிது கவனமாக ஆராய்ந்தால், அனைத்து மனிதர்களும் தன் வாழ்நாளில் தவறு புரிகின்றனர் எனத் தெரியும்.

 

எனவே நாம் நம்முடைய வாழ்வில் ஒரு தவறு நடந்து விட்டால் பதற வேண்டிய அவசியம் இல்லை. அந்தத் தவறிலிருந்து எவ்வாறு வெளிவருகிறது என்றும், வெளியேறிய பின்னர் அந்தத் தவறு மீண்டும் ஒரு முறை நடக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் பழக்கம் நிதித் துறை அதிலும் குறிப்பாகப் பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு மிகவும் உதவியாக இருக்கின்றது.

 இழப்புகளை விரும்பாத வர்த்தகர்கள்

இழப்புகளை விரும்பாத வர்த்தகர்கள்

பெரும்பாலான வர்த்தகர்கள் பங்குச் சந்தையில் ஜொலிக்க விரும்புகின்றனர். அதாவது அவர்கள் தவறுகளைச் செய்ய விரும்புவதில்லை அல்லது தங்கள் வர்த்தகத்தில் எந்தவிதமான வர்த்தக இழப்புகளையும் விரும்பவில்லை. எனினும் பங்குச் சந்தை தன் வாழ்.நாளில் தவறுகளைக் கண்டிராத அதாவது ஒரு சரியான வர்த்தகரை இது வரை கண்டதில்லை. பங்குச் சந்தை வர்த்தகர்கள் சந்தை சார்ந்த அனைத்து நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு தங்களது உத்திகளை மாற்றிக் கொள்கின்றனர். இருப்பினும் இந்த உத்திகள் அனைத்து நேரத்திலும் வெற்றி பெறாது. அத்தகைய சமயங்களில் பல வர்த்தகர்கள் விரக்தி அடைகின்றனர். வெகு சிலர் தங்கள் கணக்கை முழுவதுமாக மூடி விட்டு பங்குச் சந்தையை விட்டு வெளியேறி விடுகின்றனர்.

வெற்றி பெற என்ன தேவை?

வெற்றி பெற என்ன தேவை?

பங்குச் சந்தையில் வெற்றிபெற விரும்பும் பெரும்பாலான வர்த்தகர்கள் ஒரு அடிப்படைக் கருத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றனர். அதாவது நிதியியல் சார்ந்த அடிப்படைக் கருத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இது உண்மையில்லை. நிதித் துறை சார்ந்த அடிப்படை அறிவு உங்களுக்குச் சில சமயங்களில் கை கொடுத்தாலும், பங்குச் சந்தையில் வெற்றி பெற சந்தையைப் பற்றிய அடிப்படை அறிவே போதுமானது. இந்த அடிப்படைக் கருத்துக்கள் உங்களைப் பங்குச் சந்தையில் வெற்றி வெற்றியாளராக மாற்றும். எனவே அதைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

சுய மேலாண்மை
 

சுய மேலாண்மை

உங்களை நீங்களே நிர்வகிப்பது என்பது வணிக வெற்றிக்குத் தேவையான அடிப்படை குணங்களில் ஒன்றாகும். நீங்கள் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேர வர்த்தகராகவோ பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டுமா? அதை முதலில் முடிவு செய்து அதற்கேற்ப உங்களுடைய நேரத்தை ஒதுக்க வேண்டும். சந்தையில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் மூலதனத்தின் அளவு குறித்தும் முடிவு செய்யுங்கள். உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். தினசரி செய்தி மற்றும் செய்தித்தாள்கள் மூலம் உலகம் முழுவதும் நிகழும் நிதி நிகழ்வுகள் பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருங்கள். அதாவது சந்தையில் இறங்கும் முன்னர் உங்களை மனதளவிலும், பொருளாதார அளவிலும் தயார் செய்து கொள்ளுங்கள்.

பல்துறை முதலீடு

பல்துறை முதலீடு

பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, மற்ற முதலீட்டு வாய்ப்புகளிலும் முதலீடு செய்ய முயற்சி செய்யவும். பரஸ்பர நிதிகள், ப்யூச்சர் அண்ட் ஆப்சன், கடன் பத்திரங்கள், பெருநிறுவன பத்திரங்கள், வரி இல்லாத பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் ஒற்றை நிதி சந்தையில் நிழவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக உங்களுடைய முழு முதலீடும் பாதிக்கப்படும் ஆபத்தைக் கணிசமாகக் குறைக்க இயலும்.

 வர்த்தகத்தில் அதனுடைய பண மதிப்பை மட்டும் பார்க்காதீர்கள்

வர்த்தகத்தில் அதனுடைய பண மதிப்பை மட்டும் பார்க்காதீர்கள்

உங்களுடைய வர்த்தகத்தில் ஸ்டாப் லாஸ் அல்லது லாபத்தை நீங்கள் முதலீடு செய்த பணத்தின் அளவைப் பொருத்து நிர்ணயித்து வர்த்தகத்தில் ஈடுபடாதீர்கள். தனித்தனியாக ஒவ்வொரு வர்த்தகத்தையும் கருத்தில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, அந்நிய செலாவணி வர்த்தகம் போது, பிப்பை அடிப்படையாகக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடுங்கள். அந்நிய செலாவணி சந்தையில் பிப் என்பது ஜோடி நாணயங்களுக்கு இடையே ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் ஆகும். இது நீங்கள் உணர்ச்சி வயப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கும்.

 ஒவ்வொரு பைசாவையும் முக்கியமாகக் கருதுங்கள்

ஒவ்வொரு பைசாவையும் முக்கியமாகக் கருதுங்கள்

உங்கள் மூலதனத்தின் ஒரு பகுதியாக இலாபங்களைக் கருதுங்கள். சில வர்த்தகர்கள், இலாபத்தைச் சம்பாதித்த பிறகு, தங்களுடைய லாபத்தைச் சூதாட்டம் போன்று மிகவும் ஆபத்தான முதலீடுகளில் செலுத்துகின்றனர். ஏனெனில் அவர்கள் தங்களுடைய மூலதனத்தின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. மேலும், குறைந்த பரிவர்த்தனை கட்டணம் அல்லது குறைவான தரகு கட்டணம் அளிக்கும் பங்குச் சந்தை தரகு நிறுவனங்களைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில் நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு பைசாவும் சம்பாதிக்கும் பணத்திற்குச் சமம்.

வர்த்தகர்கள் ஒரு வெற்றிகரமான வர்த்தக வாழ்க்கையை மேற்கொள்ள ஒரு சில அடிப்படைக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. வர்த்தகர்கள் டெக்னிக்கல் அனளிசஸ்க்கு முக்கியத்துவம் அளித்துச் சுய நிர்ணயத்தில் கோட்டை விட்டு விடுகின்றனர். டெக்னிக்கல் அனலிஸஸ் பங்கு வர்த்தகத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஆனால் அது மட்டுமே முக்கியம் அல்ல. எனவே பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட விரும்பும் வர்த்தகர்கள் ஒரு சரியான திட்டத்துடன் சந்தையில் இறங்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால் அவர்கள் சந்தையில் தோல்வியைத் தழுவுவார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The secret of success in the stock market

The secret of success in the stock market
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X