வீட்டு கடன் வாங்கியுள்ளீர்களா? நீங்கள் இறந்துவிட்டால் அதை யார் செலுத்துவார்கள் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்களின் மிக முக்கிய கனவுகளில் ஒன்று, அவர்களுக்கான ஒரு சொந்த வீடு. அந்த கனவை நனவாக்க பெரும்பாலோனோர் வீட்டுக் கடன் வாங்குகின்றனர். அதிலும் வீட்டுக் கடன்களின் அளவு மிக அதிகமாகும். மேலும் வீட்டுக் கடன்களின் கால அளவும் அதிகமாகும்.

 

இத்தகைய வீட்டுக கடன்களின் அளவுகள் 10, 20 அல்லது சுமார் 30 வருடங்களாக இருக்கலாம். அத்தகைய நீண்ட நெடிய காலத்தில் வீட்டுக் கடன் வாங்கிய நபருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவ்வாறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், வீட்டுக் கடன் வாங்கியவரின் வாரிசு உடைந்து போய் விடுவார். சொந்தத்தை இழந்த சோகத்துடன், வீட்டுக கடன் பற்றிய கவலையும் அந்த வாரிசுக்கு வந்து சேரும்.

எனவே, சட்ட ரீதியாக உங்ளுடைய வாரிசுக்குத் துன்பம் ஏதேனும் ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது. உங்களுடைய மரணத்திற்குப் பிறகு உங்களுடைய வீட்டுக் கடனுக்கு என்ன நடக்கும். பாக்கியுள்ள வீட்டுக் கடனை உங்களுக்காக யார் செலுத்துவார்? இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

உங்களுடைய மரணத்திற்குப் பின்னர் உங்களுக்கான வீட்டுக் கடனை சட்டப்படி யார் செலுத்துவார்?

உங்களுடைய மரணத்திற்குப் பின்னர் உங்களுக்கான வீட்டுக் கடனை சட்டப்படி யார் செலுத்துவார்?

உங்களுடைய வீட்டுக் கடனில் ஏதேனும் பாக்கி இருக்கும் பொழுது, ஒரு வேளை நீங்கள் இறந்து போக நேரிட்டால், உங்களுடைய சட்டப்படியான வாரிசு, உங்களுடைய சொத்தில் இருந்து வீட்டுக் கடனை அடைக்க வேண்டும்.

எனினும், நீங்கள் எந்த விதமான சொத்துக்களையும் விட்டு வைக்கவில்லை என்றால், கடவுள் மட்டுமே உங்களுடைய வாரிசைக் காப்பாற்ற வேண்டும். எனவே உங்களுடைய வாரிசைக் காப்பாற்ற வீட்டுக் கடனை வாங்கும் பொழுது அதை ஒரு நல்ல தொகைக்கு காப்பீடு செய்வது மிகவும் இன்றியமையாதது. அது புத்திசாலித்தனமும் கூட.

ஒரு வேளை உங்களுக்குக் கடுமையான வியாதி இருந்தால் வீட்டு கடனுக்கு என்ன நடக்கும்?
 

ஒரு வேளை உங்களுக்குக் கடுமையான வியாதி இருந்தால் வீட்டு கடனுக்கு என்ன நடக்கும்?

காப்பீட்டு பணம் என்பது மரணத்திற்குப் பிறகு தான் கிடைக்கும். உங்களுக்குத் தீராத நோய் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் உங்களுடைய வீட்டுக் கடன் தவணைகள் மிச்சம் இருந்தால் என்ன செய்யலாம். அதிலிருந்து தப்பிக்க ஏதேனும் வழி உள்ளதா?

இத்தகைய சந்தர்ப்பங்களில், கடன் வாங்கிய நபர் கடன் வழங்கிய வீட்டு நிதி நிறுவனம் அல்லது வங்கியுடன் பேச வேண்டும். இது நிதி நிறுவனம் மற்றும் வங்கிகளின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் சம்பந்தப்பட்டது.

உங்களுக்குக் கடன் வழங்கியவர்கள் உங்களுடைய கடனை மறுகட்டமைக்கலாம் அல்லது இஎம்ஐ கட்ட சிறிது கால அவகாசம் அளிக்கலாம். இதைத் தவிர அவர்களிடம் இருந்து எந்த விதமான அதிசயத்தையும் நம்மால் எதிர்பார்க்க இயலாது. எனவே பாக்கியுள்ள இ எம் ஐ செலுத்த ஏதேனும் ஒரு வழிமுறையைக் கண்டிப்பாக நாம் கண்டு பிடிக்க வேண்டும்.

 இறப்பிற்குப் பின்னர் வீட்டு கடன் மீது வங்கிகள் என்ன நடவடிக்கை எடுக்கும்?

இறப்பிற்குப் பின்னர் வீட்டு கடன் மீது வங்கிகள் என்ன நடவடிக்கை எடுக்கும்?

ஒரு வேளை உங்களுடைய வீட்டுக் கடன் விண்ணப்பத்தில் ஒரு இணை விண்ணப்பதாரர் இருந்தால், உங்களுடைய இறப்பிற்குப் பின்னர் அவர் கண்டிப்பாக உங்களுடைய வீட்டுக் கடன் இ எம் ஐ களை செலுத்த வேண்டும். ஒரு வேளை அவருக்கு ஏற்கனவே இன்னொரு கடன் இருக்கும் பட்சத்தில், இரண்டு இ எம் ஐக்களையும்சேர்த்து செலுத்த வேண்டும். அதற்கும் சேர்த்து சம்பாதிக்க வேண்டும்.

ஒரு வேளை இது சாத்தியமற்றதாக இருந்தால், அல்லது காப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லாமல் இருந்தால், வங்கி அந்தச் சொத்தை விற்று கடன் தொகையை திரும்பப் பெறும். இது வீட்டுக் கடன் வாங்கியவருக்கு நல்லதல்ல.

வங்கி, சொத்து விற்பனையைத் தாமதப்படுத்தலாம்

வங்கி, சொத்து விற்பனையைத் தாமதப்படுத்தலாம்

வீட்டுக் கடனைப் பொருத்தவரை, வங்கிகள் சொத்துக்களை உடனடியாக விற்பனை செய்யவதை விரும்புவதில்லை. வீட்டுக் கடன் வாங்கியவர்கள், அல்லது அவருடைய வாரிசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண கண்டிப்பாக முயற்சி செய்யும். வங்கிகள் கடன் மறுசீரமைப்பு அல்லது இ எம் ஐ செலுத்தச் சிறிது கால அவகாசம் போன்றவற்றை வழங்கலாம். வங்கிகள் வீட்டுக் கடனை ஒரு பொழுதும் குறைக்க முயற்சி செய்யாது.

பல்வேறு வகையான காப்புறுதி திட்டங்கள் உள்ளன

பல்வேறு வகையான காப்புறுதி திட்டங்கள் உள்ளன

நீங்கள் ஒரு வீட்டுக் கடனை செலுத்த முடியாமல் போவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் மட்டுமே இருக்க இயலும். ஒன்று உங்களுடைய மரணம் அல்லது கடுமையான நோய். இந்த இரண்டு பிரச்சனைகளில் இருந்தும் காப்பீடு உதவியினால் மிக எளிதாகத் தப்பிக்கலாம்.

உண்மையில், பெரும்பாலான வங்கிகளும் வீட்டுவசதி நிதி நிறுவனங்களும் உங்களுக்கு வீட்டுக் கடன் வழங்குவதற்கு முன் போதுமான காப்பீட்டை வலியுறுத்துகின்றன.

டெர்ம் காப்பீடு

டெர்ம் காப்பீடு

வீட்டு கடனை வாங்கும் முன்னர் உங்களுடைய டெர்ம் காப்பீடு முழு வீட்டுக் கடனை விட அதிகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். இது உங்களுடைய மரணத்திற்குப் பின்னர் இது உங்களுடைய வாரிசை சொத்துப் பிரச்சனையில் இருந்து காப்பாற்றும்.

இந்த நாட்களில் பல வீட்டு கடன் நிறுவனங்கள் வீடு கட்டும் பொழுது அல்லது மாற்றி அமைக்கும் பொழுது ஏற்படக்கூடிய எதிர்பாராத அசம்பாவிதங்களில் இருந்து கடன் வாங்குபவர்களை பாதுகாத்திட பில்ட் இன் காப்பீடு திட்டங்களை வழங்குகின்றன.

ஒரு வீட்டுக் கடனை வாங்கும் பொழுது எதிர்பாராத அசம்பாவிதங்களை எதிர்கொள்ள ஒரு காப்பீடு மிக அவசியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who Pays Your Home Loan In India after death?

Who Pays Your Home Loan In India after death?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X