டிடிஎஸ் தாக்கல் செய்யக் கடைசி நாள் ஜூலை 31 ! தாக்கல் செய்வது எப்படி?

By Abu Bakker Fakkirmohamed
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமானத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படும் (TDS ) வருமான வரிக் கணக்கினை மூன்று மாதத்திற்கு ஒரு முறை வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிதி ஆண்டுக்கான முதல் மூன்று மாதத்திற்கான கணக்கினைத் தாக்கல் செய்ய ஜீலை மாதம் 31 ஆம் தேதிதான் கடைசி நாள் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால், கடைசித் தேதிக்குப் பிந்தைய ஒவ்வொரு நாளுக்கும் 200 ரூபாய் வீதம் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக ரூபாய் 1,00,000 வரை தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும்.

டிடிஎஸ் நடைமுறையின் வழியாக மாத சம்பளம் பெறுவோர் மற்றும் கமிஷன் தொகை அடிப்படையிலான வருமானம் பெறுவோர் ஆகியோரிடமிருந்து வருமான வரியை வருமான வரித்துறை வசூல் செய்கிறது. டிடிஎஸ் பிடித்தம் தொடர்பான கணக்கினைத் தாக்கல் செய்யும் பொழுது வரிச் சேமிப்புக்கான முதலீடு மற்றும் பிற சேமிப்புத் திட்டங்கள் குறித்தும் குறிப்பிட வேண்டும். அப்பொழுதுதான் அதிகப்படியாகப் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரித் தொகையைத் திரும்பப் பெறமுடியும்.

டிடிஎஸ் கணக்கினை எவ்வாறு தாக்கல் செய்வது ?

டிடிஎஸ் கணக்கினை எவ்வாறு தாக்கல் செய்வது ?

முதலில், வரிப் பிடித்தம் செய்வதற்கான கணக்கு எண் (TAN or tax deduction account number) பெற்று அதனை வருமான வரித் துறையின் இணையத் தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைப் படிப்படியாகப் பார்ப்போம்.

இணையதளம்

இணையதளம்

வருமான வரித்துறையின் இணையத் தளத்தில் உள்ள மின் வரி தாக்கல் (e-filing portal) பகுதிக்குள் நுழைய வேண்டும்.

உள்நுழைவது எப்படி?

உள்நுழைவது எப்படி?

இவ்விடத்தில் நம்முடைய பயன்பாட்டுப் பெயரைப் பதிவிட்டு உள் நுழைய வேண்டும். பொதுவாக நம்முடைய TAN எண்தான் பயனர் அடையாள எண்ணாகும். பிறகு அதற்கான கடவுச் சொல்லைப் பதிவிட வேண்டும்.

டிடிஎஸ் படிவத்தைப் பதிவேற்றுதல்

டிடிஎஸ் படிவத்தைப் பதிவேற்றுதல்

பிறகு, 'Upload TDS' பகுதிக்குள் நுழைய வேண்டும்.

இப்பகுதியில் மிகுந்த கவனத்தோடு சரியான தகவல்களைப் பதிவிட வேண்டும். பிறகு "validate" பகுதியை கிளிக் செய்யவும்.

 

ஒப்புதல்

ஒப்புதல்

பிறகு, TDS அறிக்கையினைப் மின் ஒப்பத்தோடு (digital signatures) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

முடிவு

முடிவு

தேவையான ஆவணங்களையும் தகவல்களையும் பதிவேற்றம் செய்தவுடன், உங்களுடைய தகவல் பரிமாற்றத்திற்கான அடையாள எண் திரையில் தோன்றும். அதே தகவல் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மின் அஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும்.

இணையதளத்தில் உள்ள, அறிக்கைத் தயாரிப்புப் பயன்பாடு (RPU) மற்றும் கோப்பு மதிப்பீட்டுப் பயன்பாடு (FVU) ஆகியவற்றின் உதவியுடனும் TDS அறிக்கையைத் தாக்கல் செய்யலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Last Date To File TDS Return For June Qtr Is July 31. How To File It?

Last Date To File TDS Return For June Qtr Is July 31. How To File It?
Story first published: Tuesday, July 31, 2018, 11:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X