குறைந்த செலவில் நீச்சல் குளம் அமைக்கச் சூப்பர் ஐடியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் வீட்டில் தேவையான அளவு இடம் இருந்தால் நிச்சயம் நீச்சல் குளம் அமைப்பது சிறப்பான ஒன்றுதான்.

வீட்டில் நீச்சல் குளம் இருப்பது சிறந்த பொழுதுபோக்காக இருப்பது மட்டுமின்றி, வீட்டை விற்கும் போது அதன் மதிப்பும் அதிகரிக்கும். உங்கள் பட்ஜெட்டில் துண்டு விழாமல் நீச்சல் குளத்தை அமைக்கத் திட்டமிடுகிறீர்கள் எனில், பின்வரும் பணத்தை மிச்சப்படுத்தும் வழிமுறையைப் பின்பற்றுங்கள்.

 வினைல் லைனர் நீச்சல் குளங்கள் (vinyl-liner pool)
 

வினைல் லைனர் நீச்சல் குளங்கள் (vinyl-liner pool)

சந்தையில் கிடைக்கும் மூன்று வகை நீச்சல் குளங்களில் ஒன்றான வினைல் லைனர், பைபர் கிளாஸ் மற்றும் கான்கிரீட்-ஐ உள்ளடக்கியது. மிகவும் மலிவு விலை திட்டமாக அறியப்படும் இது ரூ1,00,000 முதல் ரூ3,00,000 வரை கிடைக்கிறது. இதைக் கட்டமைப்பது மலிவு விலையில் கிடைத்தாலும், இவற்றை அடிக்கடி பராமரிக்க வேண்டும் மற்றும் இதற்கு 7-15 ஆண்டுகள் என்ற குறுகிய வாழ்நாள்.

 ஆழமற்ற நீச்சல் குளம் (Shallow Pool)

ஆழமற்ற நீச்சல் குளம் (Shallow Pool)

நீங்கள் அதிக அளவு பணத்தைச் செலவு செய்யாமல், குறைந்த இடத்திலேயே நீச்சல் குளம் வேண்டுமென்றால் சிறு நீச்சல் குள வடிவமைப்புள்ள நிலத்திற்கு உள்ளான நீச்சல்குள (In-ground pool) வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வடிவமைப்பில் செயல்படுத்துவதற்கான குறைவாக இருப்பதுடன், நீண்ட காலம் உழைக்கும் என்பதால் அதிகப் பணத்தைச் சேமிக்கலாம். சிறிய மற்றும் ஆழமற்ற நீச்சல் குளம் என்றாலே குறைந்த பராமரிப்பு, குறைந்த ஆட்கள் மற்றும் குறைந்த மூலப்பொருட்கள்.

மேலும் உங்களுக்கு விரும்பமான வடிவம் வேண்டுமென்றால் அதிகச் செலவுகள் ஏற்படும் என்பதால் அதையும் தவிர்க்கவும்.

தேவை குறைந்த காலத்தில் உருவாக்குதல் (Off-season installation)

தேவை குறைந்த காலத்தில் உருவாக்குதல் (Off-season installation)

குறைந்த விலையில் நீச்சல் குளத்தைக் கட்டமைக்கவேண்டும் என்றால், அதற்குத் தேவை குறைவாக உள்ள குளிர்காலத்தில் பணிகளைச் செய்ய வேண்டும். குளிர்காலத்தில் நீச்சல் குளத்தை வடிவமைக்கும் செயல்திட்டங்கள் குறைவாகவே இருக்கும் என்பதால், சிறந்த முறையில் குறைவான பணத்தில் வடிவமைத்துவிடலாம்.இதே காலத்தில் குறைந்த விலையில் அதற்கான கருவிகளை வாங்கிவிட வேண்டும்.

ஒப்பந்ததாரர்
 

ஒப்பந்ததாரர்

மேலும், உங்கள் நீச்சல் குளத்தை உருவாக்க ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுக்கும் முன், குறைந்தபட்சம் ஐந்து ஒப்பந்ததாரரிடம் விசாரியுங்கள். பல்வேறு நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகளை ஒப்பிட்டுக் குறைந்த விலையில் சிறந்த சேவை வழங்குவோரைத் தேர்ந்தெடுங்கள். பின்னர் என்ன? நீச்சல் குளத்தில் மட்டுமில்லாமல் மகிழ்ச்சியிலும் மிதக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tips For A Cost-effective Swimming Pool

Tips For A Cost-effective Swimming Pool
Story first published: Monday, July 2, 2018, 15:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X