ஜிஎஸ்டி குழுவின் முடிவால் சிறு தொழில்கள் என்ன ஆகும்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறு, குறு மற்றும் நடுத்த நிறுவனங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் ஏற்பட்டு வந்த பிரச்னைகளை மாநில அரசுகளு, யூனியன் பிரதேச அரசுகளும் ஜிஎஸ்டி குழுவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. சமீபத்தில் ஜிஎஸ்டி குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில அரசு, யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் இந்த பிரச்னைகளை எழுப்பினர். நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட வெளிப்படையான வரி விதிப்பு முறையில் இன்னும் பிரச்னைகள் நீடித்து வருவது வருத்தமாக செய்தியாகும்.

 

ஜிஎஸ்டி குழுவின் முடிவால் சிறு தொழில்கள் என்ன ஆகும்..?

இதன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்திய கடன் தர வரிசை தகவல் சேவை நிறுவனமான கிரிஸில் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில், ஜிஎஸ்டி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் சிறு நிறுவனங்களுக்கான கடன் பெறும் விகிதாச்சாரத்தை பாதித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ''ஒரு தேசம் ஒரு சந்தை’’ என்ற வரி விதிப்பு முறையில் பல ஓட்டைகள் இருக்கிறது. இதனால் சிறு வர்த்தர்களின் தொழிலை வெகுவாக பாதித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

32வது ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டு இரு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதன் மூலம் சிறு நிறுவனங்கள் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான ஆண்டு வர்த்தக உச்சவரம்பு 2 மடங்காக உயர்த்தப்பட்டது. ரூ. 20 லட்சம் என்ற நிலையில் இருந்து ரூ. 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மலைபாங்கான மற்றும் சிறு மாநிலங்களில் உள்ள சிறு நிறுவனங்களுக்கு இந்த அதிகரிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் ஜிஎஸ்டி அமல்படுத்தியபோது வரி விலக்கு அளிக்கப்பட்ட சிறு நிறுவனங்களுக்கு தற்போது வரையறை திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டள்ளது. சிறு தொழில்களுக்களுக்கு 6 சதவீத வரி விதிப்பு அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத டீலர்கள் என உரிமம் பெற்றுக் கொள்ள முடியும். இது தொழிலை நடத்த நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். மேலும், ஆண்டு வர்த்த அளவு மட்டுமின்றி இந்த வரையறை திட்டத்தை தேர்வு செய்து கொள்ளவும் சிறு வர்த்தகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

உதாரணமாக இந்த வரையறை திட்டத்தின் மூலம் இதர மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. இதனால் சிறு வர்த்தக நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான விற்பனை மூலமான வருவாய் வெகுவாக குறைந்தது. மேலும், வரையறை திட்டத்தில் உள்ள டீலர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கான ரசீதில் வருமான வரி குறித்த விபரம் குறிப்பிடப்படுதில்லை. அதனால் இத்தகைய டீலர்களிடம் மதிப்பு கூட்டு வரிவிதிப்பு காலக்கட்டத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

உற்பத்தி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு வர்த்தகர்களின் தொழில் குறைந்துள்ள நிலையில் அவர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய பாதிப்பு காரணமாக தொழில் குறைந்திருப்பதால் சிறு தொழில்கள் உற்பத்தியும் செய்யும் பொருட்களின் அடக்கவிலை அதிகரித்துள்ளது. இதனால் விற்பனை விலையை அதிரிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இத்தகைய உற்பத்தி பொருட்கள் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் போது அவர்களுடன் சிறு வர்த்தகர்கள் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் இத்தகைய பொருட்களின் விலை ஜிஎஸ்டி.க்கு முன்பும் பின்பும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

 

பெரிய உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய ஜிஎஸ்டி 12 சதவீத கலால் வரி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பெரிய நிறுவனங்கள் அதிக ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து தப்பிவிட்டன. இது சிறு தொழில்களுக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. சிறு தொழில்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. சிறு வர்த்தகர்களின் பொருட்கள் ஏற்கனவே கலால் வரி விதிப்பில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருப்பதால் இந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதனால் அவர்கள் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. இது போன்ற குறைபாடுகளை ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் மாநிலங்களோ அல்லது யூனியன் பிரதேச பிரதிநிதிகளோ எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What will happen to msme by making changes in gst

What will happen to msme by making changes in gst
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X