நித்ய நிதி திட்டம் சிறு சேமிப்பு: கனரா வங்கியில் இப்படியொரு திட்டமா..? வெறும் 50 ரூபாய், அதுவும் வீட்டிலேயே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கனரா வங்கி நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக விளங்குகிறது, சிண்டிகேட் வங்கி உடன் இணைக்கப்பட்ட பிறகு இப்போது அதிகளவிலான வாடிக்கையாளர்களுக்கு வங்கி மற்றும் நிதி சேவையை வழங்கி வருகிறது.

 

இரண்டு வங்கிகளின் இணைப்பைப் போலவே சில திட்டங்களையும் ஒன்றிணைக்க வழிவகுத்தது மற்றும் அவற்றில் ஒன்று சிண்டிகேட் வங்கியின் பிக்மி டெபாசிட் திட்டம் ஆகும்.

இத்திட்டம் தற்போது புதிய பெயரில் கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் அளிக்கப்படுகிறது. குறிப்பாகச் சிறு சேமிப்பை விரும்பும் மக்கள், மாணவர்கள், தினசரி ஊதியம் வாங்குவோருக்குப் பெரிய அளவில் பலன் அளிக்கும்.

கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி

கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி

கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்ட பின்பு 01.04.2020 முதல், பழைய சிண்டிகேட் வங்கியின் பிக்மி டெபாசிட் திட்டம் மற்றும் கனரா வங்கி -யின் புதிய நித்ய நிதி டெபாசிட் (NNND) திட்டம் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு NITYA NIDHI DEPOSIT (NND) திட்டம் என்ற புதிய பெயர் கொண்டு இயங்கி வருகிறது.

நித்ய நிதி திட்டம்

நித்ய நிதி திட்டம்

கனரா வங்கியின் நித்ய நிதி திட்டம் சிறு சேமிப்புகளின் அதிகரிப்பை நோக்கமாகக் கொண்டது, இத்திட்டம் தினசரி அடிப்படையில் சிறு சிறு தொகையைச் சேமிப்போருக்காக உருவாக்கப்பட்டது மட்டும் அல்லாமல் இத்திட்டத்தில் வங்கி அதிகாரிகள் வீட்டின் வாசலுக்கு வந்த பணத்தை வசூல் செய்யும் வசதியை அளிக்கின்றது.

வீட்டு வாசலில் கலெக்ஷன்
 

வீட்டு வாசலில் கலெக்ஷன்

நீங்கள் இந்தக் கணக்கைத் திறந்தால், வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் உங்கள் வசதிக்கேற்ப தினசரி அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் உங்கள் சேமிப்பை தொகையை உங்கள் வீட்டு வாசலில் வந்து கலெக்ஷன் செய்து டெப்பாசிட் செய்வார். இதனாஸ் நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை.

 முதிர்வு காலம்

முதிர்வு காலம்

கனரா வங்கியின் NITYA NIDHI DEPOSIT திட்டத்தில் டெப்பாசிட் செய்யப்படும் தொகைக்கு வருடாந்திர அடிப்படையில் சுமார் 2 சதவீத வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது. இத்திட்ட முதலீட்டு முதிர்வு காலம் என்பது 63 மாதம் அல்லது 5 வருடம் அல்லது 3 மாதம். இத்திட்டம் மூலம் குறுகிய கால அடிப்படையிலும் பணத்தைச் சேமிக்க முடியும்.

முக்கியத் தேவை

முக்கியத் தேவை

இதேபோல் 5 ஆண்டு முதிர்வு காலம் இருக்கும் காரணத்தால் பிள்ளைகளின் கல்வி செலவுகள், திருமணச் செலவுகள், இரு சக்கர வாகனங்கள் வாங்குவது, மாணவர்கள் தங்களது கல்விக்காக லேப்டாப் போன்றவற்றை வாங்குவது போன்ற முக்கியமான காரணத்திற்குப் பணத்தைச் சேமிக்க முடியும். இளம் தலைமுறையினர் மத்தியில் இத்தகையைச் சிறு சேமிப்புத் திட்டம் அதிகமானோரை ஈர்க்கும்.

50 ரூபாய் முதல்

50 ரூபாய் முதல்

கனரா வங்கியின் NITYA NIDHI DEPOSIT திட்டத்தில் தினசரி அடிப்படையில் குறைந்தபட்சம் 50 ரூபாயும், அதிகப்படியாக 1000 ரூபாயும் சேமிக்க முடியும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு அதிகப்படியாக 30000 ரூபாய் வரையில் சேமிக்க முடியும். இதேபோல் டெபாசிட் செய்யப்பட்ட தொகையைத் திரும்ப எடுப்பதைப் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும்.

அபராதம்

அபராதம்

இதேபோல் முதிர்வு காலம் முடியும் முன்னரே 12 மாதத்திற்குள் பணத்தை வித்டிரா செய்தால் 3 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் 12 மாதத்திற்கு மேல் எப்போது வித்டிரா செய்தாலும் அபராதம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திட்ட முதலீட்டுக்கு 12 மாதம் குறைவான திட்டத்திற்கு 0.10 சதவீத வட்டியும், 63 மாத முதிர்வு திட்டத்திற்கு 2 சதவீதம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

கடன் வசதி

கடன் வசதி

கடைசியாக இத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகையில் 75 சதவீதம் வரையிலான தொகையை எப்போது வேண்டுமானாலும் கடனாகப் பெறலாம். இதன் மூலம் அவசர நிதி தேவை பிரச்சனைகளைச் சரி செய்ய முடியும். மேலும் இத்திட்டத்தில் நாமினேஷன் வசதி உள்ளது.

சிறப்பு அம்சம்

சிறப்பு அம்சம்

கனரா வங்கியின் NITYA NIDHI DEPOSIT திட்டத்தில் முக்கியச் சிறப்பு அம்சம் 50 கூடத் தினமும் சேமிக்க முடியும் என்பதும், இந்தப் பணத்தை வீட்டுக்கு வந்து கலெக்ஷன் செய்வார்கள் என்பதும் முக்கியமானதாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Benefits of Canara Bank Nitya Nidhi Deposit Scheme, Best For Daily Savers, Check Details Here

Canara Bank Nitya Nidhi Scheme is best for daily savers; Check the amazing benefits of this scheme
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X