BHIM UPI: அதிகபட்ச வரம்பு எவ்வளவு.. இதனை எப்படி, எங்கு, எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யுபிஐ பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் பீம் செயலி மூலம் எளிதாக பண பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். பாரத் இன்டர்ஃபேஸ் பார் மணி என்பதன் சுருக்கம் தான் BHIM. இது மிக மக்களிடையே மிக நம்பகமான யுபிஐ சேவையாகும்.

 

இதனை NPCL எனப்படும் தேசிய கட்டண நிறுவனம் உருவாக்கியுள்ளது. வங்கிகளால் வழங்கப்படும் அனைத்து யுபிஐ சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு செயலியாக பீம் உள்ளது.

இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் சென்று BHIM என டைப் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

ரூபே, யுபிஐ பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.2600 கோடி.. மத்திய அமைச்சகத்தின் சூப்பரான அறிவிப்பு! ரூபே, யுபிஐ பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.2600 கோடி.. மத்திய அமைச்சகத்தின் சூப்பரான அறிவிப்பு!

எப்படி டவுன்லோட்?

எப்படி டவுன்லோட்?

1.இந்த BHIM செயலியை பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

2.அடுத்த படியாக உங்களது மொழியினை தேர்வு செய்யவும்

3.உங்களது வங்கிக் கணக்குடன் இணைத்துள்ள மொபைல் உள்ள சிம்மினை தேர்வு செய்யவும்.

4.இந்த ஆப்பினுள் நுழைய பாஸ்வேர்டு கொடுக்க வேண்டியிருக்கும்.

5.உங்கள் வங்கிக் கணக்குடன் இணைந்துள்ள மொபைல் நம்பரை கொடுத்து வங்கிக் கணக்கினை லிங்க் செய்யவும்

6.உங்களது யுபிஐ பின் நம்பரை உருவாக்கவும். இதற்காக உங்களது டெபிட் கார்டின் கடைசி 6 இலக்க எண் மற்றும் எக்ஸ்பெய்ரி தேதியினையும் குறிப்பிட வேண்டும்.

7.SEND என்ற ஆப்சனை கிளிக் செய்து யுபிஐ ஐடி கொடுத்தும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதில் ஸ்கேன் செய்தும் நீங்கள் பணம் செலுத்திக் கொள்ளலாம்.

8.யுபிஐ பின் கொடுத்து, பே ஆப்சனை கொடுக்கவும்.

இறுதியாக உங்களது பரிவர்த்தனை வரலாற்றினை ஒரு முறை செக் செய்து கொள்ளுங்கள்.

எவ்வளவு பரிவர்த்தனை செய்யலாம்?

எவ்வளவு பரிவர்த்தனை செய்யலாம்?

உங்களது யுபிஐ பரிவர்த்தனை மூலம் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு கணக்கிற்கு 1 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். இந்த வரம்பு BHIM உடன் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் கிடைக்கும்.

எங்கு எப்படி பயன்படுத்துவது?
 

எங்கு எப்படி பயன்படுத்துவது?

இந்த யுபிஐ ஐடியை பயன்படுத்தி உங்களது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பணம் அனுப்பிக் கொள்ளலாம்.

ஆன்லைனிலும் இதனை பயன்படுத்தி பொருளை வாங்கிக் கொள்ளலாம். அங்கும் யுபிஐ ஐடி அல்லது ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தலாம்.

வணிக நிலையங்களிலும் யுபிஐ ஐடி அல்லது ஸ்கேன் செய்து பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

BHIM- ல் என்னவெல்லாம் செய்யலாம்?

BHIM- ல் என்னவெல்லாம் செய்யலாம்?

பண பரிவர்த்தகை செய்து கொள்ளலாம். உங்களால் மற்றவர்களுக்கும் அனுப்ப முடியும். மற்றவர்களிடம் இருந்து பெறவும் முடியும்

உங்களது பில்களை செலுத்திக் கொள்ள முடியும்

 

விமான டிக்கெட்டுகள் புக் செய்யலாம், மொபைல் ரீசார்ஜ் செய்யலாம்.

இதில் கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்வதன் மூலம் விரைவில் பணம் செலுத்தலாம்

 

உங்கள் பரிவர்த்தனை வரலாற்றை பார்த்துக் கொள்ள முடியும்

வங்கிக் கணக்குக்கும், ஐஎஃப்எஸ்சி கோடு மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

விபிஏ என்றால் என்ன?

விபிஏ என்றால் என்ன?

விபிஏ என்பது (Virtual Payment Address) தனித்துவமான அடையாள காட்டியாகும். இது ஒரு மெயில் போல செயல்படும் எனலாம். இதனை பயன்படுத்தி பலரும் பணம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

இணைய சேவை இல்லாமல் பயன்படுத்த முடியுமா?

இணைய சேவை இல்லாமல் பயன்படுத்த முடியுமா?

இந்த பீம் சேவையினை இணைய சேவை இல்லாமலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்காக நீங்கள் *99# என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். இதன் மூலம் ஆப்லைன் சேவையினையும் பெற முடியும்.

வங்கி கணக்கு இல்லையெனில்?

வங்கி கணக்கு இல்லையெனில்?

BHIM சேவையானது ஒவ்வொரு வங்கியுடனும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. பீம் பயன்பாட்டில் உங்கள் கணக்கை இணைக்க முடியும்.

பரிவர்த்தனைக்கு என்னென்ன முறைகள் உள்ளன?

பரிவர்த்தனைக்கு என்னென்ன முறைகள் உள்ளன?


பீமில் பயனாளியின் பின்வரும் விவரங்களை பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.

விபிஏ (யுபிஐல் பதிவு செய்யப்பட்டது)

மொபைல் எண் (யுபிஐல் பதிவு செய்யப்பட்டது)

வங்கிக் கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி

 எத்தனை விபிஏ பதிவு செய்யலாம்?

எத்தனை விபிஏ பதிவு செய்யலாம்?

பீமில் இரண்டு விபிஏ-வினை பதிவு செய்து கொள்ளலாம். முதலாவது எப்போதும் போல இயல்பாக மொபைல் நம்பருடன் உருவாக்கப்படும், இரண்டாவது உங்களது புரொபைல் பக்கத்தில் சென்று உருவாக்கி கொள்ளலாம்.

பெனிபிசியரி விவரங்களை சேமிக்கலாமா?

பெனிபிசியரி விவரங்களை சேமிக்கலாமா?

இணைய வங்கிகளில் பணம் அனுப்ப சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே பணம் அனுப்ப வேண்டியவரின் விவரங்களை நாம் சேமித்துக் கொள்வோம். அதேபோல் இதில் சேமித்துக் கொள்ளலாம். இதில் ADD to Favourites என்பதையும் கொடுத்துக் கொள்ளலாம்.

எப்படி ஸ்கேன் செய்வது?

எப்படி ஸ்கேன் செய்வது?

யுபிஐ சேவையின் ஹோம்பேஜிலேயே ஸ்கேன் செய்யும் வசதியானது உள்ளது. ஆக அதனை கிளிக் செய்து ஸ்கேன் செய்து பணம் அனுப்பலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BHIM UPI: Is there any upper limit to the amount sent by using BHIM?

BHIM UPI: iS there any upper limit to the amount of can be sent using BHIM?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X