விமான டிகெட்டினை குறைந்த விலையில் புக் செய்ய வேண்டுமா.. இந்த 10 முக்கிய டிப்ஸ்-ஐ பாருங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று விமான பயணம் என்பது பெரும்பாலானவர்களுக்கு அலாதி பிரியமான பயணமாக உள்ளது. எனினும் பலருக்கும் இது தங்களது வாழ்நாள் கனவாகவும் உள்ளது.

அதிலும் குடும்பமாக குழந்தைகளுடன் கோடைகால விடுமுறை காலத்தில் பயணிக்க ஆசைப்படுவர். ஆனால் கட்டணத்தினை யோசித்து அது வெறும் யோசனையாகவே மட்டுமே இருக்கும்.

இந்த விமான கட்டணங்களை குறைந்த விலையில் புக் செய்ய என்ன மாதிரியான விஷயங்களை கவனிக்க வேண்டும். மலிவான விமான சேவையினை எப்படி பெறுவது என்பதை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.

ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் சீருடை.... செம ஸ்டைலிஷா இருக்கே! ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் சீருடை.... செம ஸ்டைலிஷா இருக்கே!

முன் கூட்டியே பதிவு செய்யலாம்?

முன் கூட்டியே பதிவு செய்யலாம்?

உங்களது விமான பயணத்திற்கான முன் பதிவினை விரைவில் முன் கூட்டியே முடிந்த அளவு செய்யுங்கள். இது உங்களது பயணத்திற்கு குறைந்த விலையில் பயணிக்க உதவும். இதன் மூலம் அதிகளவிலான செலவினை மிச்சப்படுத்த முடியும்.

குறிப்பாக விடுமுறை காலம், பண்டிகை காலத்தில் தேவை அதிகம் என்பதால் டிக்கெட் விலையும் அதிகம் இருக்கும். ஆக முன் கூட்டியே திட்டமிடலாம்.

நாள் தேர்வு- நள்ளிரவு செய்யலாம்

நாள் தேர்வு- நள்ளிரவு செய்யலாம்

பல்வேறு ஆய்வுகளில் படிவின் படி, பகல் நேரத்தில் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்வதை விட, இரவு நேரங்களில் புக் செய்வது சிறந்ததாக பார்க்கப்படுகிறது. நள்ளிரவு நேரங்களில் புக் செய்யும் போது அதிக முன்பதிவு இருக்காது என்பதால் கட்டணம் அதிகம் இருக்காது. ஆக நள்ளிரவு நேரத்தில் பதிவினை செய்யலாம்.

ஆய்வு செய்யுங்கள்?

ஆய்வு செய்யுங்கள்?

இன்றைய காலகட்டத்தில் போட்டியினை சமாளிக்க நிறுவனங்கள் பல ஆஃபர்களையும், சலுகைகளையும் வாரி வழங்குகின்றன. ஆக ரெகுரலாக பயணிப்பவர்கள் அது போன்ற சலுகைகள் இருக்கிறதா என்பதையும் பார்க்கலாம். அதேபோல ஒரே தளத்தில் பார்த்துவிட்டு டிக்கெட் புக் செய்வதை தவிர்த்து, பல்வேறு தளங்களை பார்த்து ஒப்பிடுட்டு புக் செய்யலாம். எனினும் இந்த மாதிரியாக சலுகைகளை பெறும்போது சில நிபந்தனைகளையும் அதனையும் பார்த்துக் கொள்வது நல்லது.

சமூக வலைதளங்களில் அலர்ட்

சமூக வலைதளங்களில் அலர்ட்

டிவிட்டர், பேஸ்புக், இன்சாஸ்டா கிராம் தளங்களில் பல்வேறு விமான நிறுவனங்களும் அடிக்கடி ஏதேனும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஆக அவற்றை பின் தொடர்ந்தால், அதன் மூலம் குறைவான கட்டணம் என சலுகை கிடைக்கும்போது டக்கென பதிவும் செய்யலாம்.

நெழ்வான நேரங்கள், தேதியினை கண்கானியுங்கள்

நெழ்வான நேரங்கள், தேதியினை கண்கானியுங்கள்

உங்கள் பயண தேதிகளை குறிப்பிட்ட தேதிகளில், குறிப்பிட்ட நேரத்தில் வேண்டும் என்பதை தவிர்த்து, எப்போது குறைவான இருக்கிறதோ? அதுபோன்ற நேரத்தினை தேர்தெடுக்கலாம். குறிப்பாக வார விடுமுறை நாட்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற நாட்களில் டிக்கெட் கட்டணம் மிக அதிகமாக இருக்கும். ஆக அதுபோன்ற நாட்களில் பயணம் செய்யாமல் முன் கூட்டியே திட்டமிடலாம்.

இன்னும் இதனை தெளிவாக சொல்ல வேண்டுமெனில் எல்லோரும் செல்ல நினைக்கும்போது, நீங்கள் பயணிக்க விரும்பினால் கட்டணம் அதிகமாகத் தான் இருக்கும். குறிப்பாக வெளி நாடு செல்பவர்களில் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

 இலக்கிலும் நெகிழ்வாக இருங்கள்

இலக்கிலும் நெகிழ்வாக இருங்கள்

நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அதில் சற்று நெகிழ்வாக இருக்கலாம். உதாராணத்திற்கு ஒருவர் ஈரோடு செல்ல வேண்டும். ஆனால் வருக்கு திருச்சி விமான நிலையம் செல்ல கட்டணம் குறைவாக இருக்கலாம். இதே கோயம்புத்தூருக்கு அதிகமாக இருக்கலாம். ஆக இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை யோசிக்கலாம். இதன் மூலம் செலவினை குறைக்க முடியும்.

பட்கெட் கேரியர்களில் பறக்கலாம்

பட்கெட் கேரியர்களில் பறக்கலாம்

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கண்டம் தாண்டி இன்னொரு கண்டத்திற்கு செல்ல வேண்டும் எனில், நீங்காள் பெரும்பாலும் பாரம்பரிய விமானங்களில் செல்ல வேண்டியிருக்கும். அதற்கும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இன்று அப்படியில்லை. பட்ஜெட் விமான நிறுவனங்கள் குறுகிய மற்றும் நடுத்தர தூர பகுதிகளுக்கும் வேலை செய்கின்றன. ஆக பட்ஜெட் விமானங்களினை தேர்வு செய்யலாம்.

நேரடியாக செல்ல முயல வேண்டாம்

நேரடியாக செல்ல முயல வேண்டாம்

ஒரு இடத்திற்கு செல்ல நேரடியாக செல்ல முயல வேண்டாம். அது உங்களுக்கு மிக அதிகளவிலான கட்டணத்தினையே செலுத்த வேண்டியிருக்கும். ஆக கனெக்டிங் பிளைட் மூலம் பயணம் செய்யலாம். இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம்.

எல்லா இணையமும் ஒன்றல்ல

எல்லா இணையமும் ஒன்றல்ல

நீங்கள் மலிவான டிக்கெட்டினை பதிவு செய்ய ஒரு தளத்தினை மட்டும் தேட வேண்டாம். பலவற்றை தேடுங்கள். அதேபோல கமிஷன் தொகை எங்கு அதிகம், எங்கு குறைவு என்பதையும் பாருங்கள். குறிப்பாக முடிந்தமட்டில் பேரடியாக பெற பாருங்கள்.

 மாணவர்களுக்கான தள்ளுபடி

மாணவர்களுக்கான தள்ளுபடி

நீங்கள் ஒரு மாணவராக இருந்தால் (ஆல்லது 26 வயதுக்கு கீழாக ) உங்களுக்கு பல தள்ளுபடிகள் உள்ளன. நீங்கள் வழக்கமாக நிலையான கட்டணத்தில் 10 - 20% தள்ளுபடிகளை பெறலாம். இது இன்னும் நீண்டதூரம் பயணிக்க உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

தனியாக புக் செய்யுங்கள்

தனியாக புக் செய்யுங்கள்

டிக்கெட்டுகளை புக் செய்யும்போது மொத்தமாக புக் செய்யாதீர்கள். தனித் தனியாக புக் செய்யும்போது இன்னும் சலுகைகள் அதிகம் கிடைக்கலாம். குழும டிக்கெட்டுகள் பதிவு செய்யும்போது நீங்கள் நிறைய கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இன்காக்னிட்டோ முறையில் தேடலாம்

இன்காக்னிட்டோ முறையில் தேடலாம்

இணையதளத்தில் விமான டிக்கெட் குறித்து ஏராளமாக தேடியபின், கூகுள் சேர்ச்சில் இன்காக்னிட்டோ ( incognito mode)ல் தேட வேண்டும். அவ்வாறு தேடும்போது, பழைய தேடுதல்கள் சேமிக்கப்படாது, உயர்த்தப்பட்ட கட்டணங்கள் இருக்காது. குறைக்கப்பட்ட கட்டண விவரங்களை அறியலாம். ஒரே லேப்டாப்பில் தேடும்போது, ஐபி எண் மூலம் ஒரே மாதிரியான தகவல்கள் தான் வரும். ஆக நண்பர்கள், உறவினர்களின் லேப்டா ப், கணினி மூலம் தேடி புக் செய்யலாம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Check out these 10 top tips to book cheap flight tickets

Check out these 10 top tips to book cheap flight tickets/விமான டிகெட்டினை குறைந்த விலையில் புக் செய்ய வேண்டுமா.. இந்த 10 முக்கிய டிப்ஸ்-ஐ பாருங்க!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X