பிப்ரவரி 1 முதல் அனைவரும் டிஜிட்டல் வாக்காளர் அட்டை பெறலாம்.. டவுன்லோடு செய்வது எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் தலைமையிலான மோடி அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தற்போது அனைத்து அரசு மற்றும் சேவைத் துறைகளிலும் டிஜிட்டல் சேவைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 25ஆம் தேதி டிஜிட்டல் வாக்காளர் அட்டை என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது.

 

இந்தச் சேவை மூலம் வாக்குப்பதிவு செய்ய மக்கள் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதன் மூலம் ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் டிஜிட்டல் முறையில் பெறுவது போல் வாக்காளர் அட்டையும் டிஜிட்டல் முறையில் பெற முடியும்.

சரி டிஜிட்டல் வாக்காளர் அட்டையை எப்படி டவுன்லோடு செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

 டிஜிட்டல் வாக்காளர் அட்டை திட்டம்

டிஜிட்டல் வாக்காளர் அட்டை திட்டம்

ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினத்தில் அறிவிக்கப்பட்ட இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டை திட்டத்தைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. வழக்கம் போல் இந்தச் சேவைக்கும் இண்டர்நெட் இணைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் அல்லது கம்பியூட்டர் அடிப்படைத் தேவையாக உள்ளது.

 5 மாநில தேர்தல்

5 மாநில தேர்தல்

இந்தியாவில் மேற்கு வங்காளம், அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 5 மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இப்புதிய சேவை மக்கள் மத்தியில் அதிகப் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் இந்தப் புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டையை அனைவரும் பெற முடியா..? இதை வைத்து வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய முடியுமா..?

 டவுன்லோடு செய்வது எப்படி..?
 

டவுன்லோடு செய்வது எப்படி..?

1. டிஜிட்டல் வாக்காளர் அட்டையை முதலில் நீங்கள் https://voterportal.eci.gov.in/ அல்லது https://nvsp.in/Account/Login இந்த இணையதளத்தில் லாக் இன் செய்ய வேண்டும்.

2. இந்தத் தளத்தில் கணக்கு இல்லாதவர்கள், உடனடியாக உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி-யை கொண்டு ஒரு கணக்கைத் துவங்க வேண்டும்.

3. கணக்கைத் துவங்கிய பின்பு லாக் இன் செய்த உடனேயே உங்கள் கணக்கில் டவுன்லோடு E-EPIC (Electronic Electoral Photo Identity Card) என்ற ஆஃப்ஷன் இருக்கும். இதைக் கிளிக் செய்ய வேண்டும்.

4.இந்த டிஜிட்டல் சேவை தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 தேதி காலை 11.14 மணி முதல் மக்களின் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 ஜனவரி 31 வரை

ஜனவரி 31 வரை

முதல்கட்டமாக இந்தச் சேவை புதிய வாக்காளர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. வாக்காளர் அட்டையைப் பெறுவதற்காக மொபைல் நம்பர் உடன் பதிவு செய்துள்ள வாக்காளர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரையில் வழங்கப்படும். மொபைல் நம்பர் உடன் பதிவு செய்தவர்களுக்குத் தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள இரண்டு தளத்தில் இருந்து டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்ய முடியும்.

 அனைவருக்கும் டிஜிட்டல் வாக்காளர் அட்டை

அனைவருக்கும் டிஜிட்டல் வாக்காளர் அட்டை

இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண்-ஐ இணைத்துள்ள அனைவரும் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை மேலே குறிப்பிட்டு உள்ள வழிமுறையைப் பயன்படுத்தி டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

 மொபைல் நம்பர்

மொபைல் நம்பர்

தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண்-ஐ இணைக்காதவர்கள் உங்களின் தரவுகளைத் திருத்தி அல்லது சரிபார்க்கப்பட்டுத் தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண் இணைக்கப்பட்ட பின் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்யும் சேவையைப் பெறலாம்.

டவுன்லோடு செய்யப்படும் டிஜிட்டல் வாக்காளர் அட்டை பிடிஎப் பார்மெட்-ல் இருக்கும்.

 

 பாதுகாப்புக் காரணிகள்

பாதுகாப்புக் காரணிகள்

இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையில் QR கோட் இருக்கும், இந்த QR கோட்-ல் வாக்காளரின் புகைப்படம், அவரது பிராந்திய தகவல், முகவரி ஆகியவை இருக்கும். மேலும் இதைப் போலியாகத் தயாரிக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ள காரணத்தால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

அது மட்டுமல்லாமல் இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையை அரசின் டிஜிலாக்கர் சேவையில் பதிவேற்றம் செய்து பாதுகாக்கவும் முடியும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Digital voter ID cards: How to download?

Digital voter ID card updates.. Digital voter ID cards: How to download?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X