பிஎப் கணக்கிற்கு டிசம்பர்-க்குள் 8.5% வட்டி வருமானம் கன்பார்ம்.. இப்போதே பேலென்ஸ்-ஐ செக் பண்ணுங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓய்வூதிய அமைப்பான ஈபிஎப்ஓ அமைப்பு 2019-20 நிதியாண்டுக்கான 8.5 சதவீத வட்டி வருமானத்தை சுமார் 6 கோடி ஊழியர்களின் ஈபிஎப் கணக்கில் டிசம்பர் மாத இறுதிக்குள் டெபாசிட் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஈபிஎப்ஓ அமைப்பின் கோரிக்கைக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 6 கோடி ஊழியர்களுக்கு ஒற்றை முறையில் 8.5 சதவீத வட்டி வருமானம் செலுத்த உள்ளது. இது ஊழியர்களுக்கு உண்மையிலேயே ஜாக்பாட் தான்.

சரி இந்த வட்டி வருமானம் உங்கள் ஈபிஎப் கணக்கிற்கு வந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்ள நான்கு வழிகள் உள்ளது.

அலுவலகத்தினை துவம்சம் செய்த ஊழியர்கள்.. பெங்களூரு விஸ்ட்ரானில் பதற்றம்.. என்ன காரணம்..! அலுவலகத்தினை துவம்சம் செய்த ஊழியர்கள்.. பெங்களூரு விஸ்ட்ரானில் பதற்றம்.. என்ன காரணம்..!

 CBT அமைப்பின் செப்டம்பர் அறிவிப்பு

CBT அமைப்பின் செப்டம்பர் அறிவிப்பு

மத்திய CBT அமைப்பு கொரோனா பாதிப்பால் ஈபிஎப்ஓ முதலீடு செய்துள்ள பங்குகளை விற்பனை செய்ய முடியாத காரணத்தால் ஊழியர்களின் 8.5 சதவீத வட்டி வருமானத்தை இரு பிரிவுகளாக டெபாசிட் செய்யப்படும் எனச் செப்டம்பர் மாதம் அறிவித்தது.

இதனால் ஊழியர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். குறிப்பாக நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பலர் தங்களது பிஎப் பணத்தை எடுக்கத் திட்டமிட்ட பலருக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

 பங்கு முதலீடுகள்

பங்கு முதலீடுகள்

முதல் முறையாகக் கொரோனா பாதிப்பின் காரணமாக அரசு தனது பங்கு முதலீடுகளை விற்பனை செய்ய முடியாத காரணத்தால் கடன் சந்தையில் செய்யப்பட்ட முதலீட்டில் கிடைத்த 8.15 சதவீத வட்டி வருமானத்தை மட்டும் முதலில் ஈபிஎப்ஓ கணக்கில் செலுத்தவும், மீதமுள்ள 0.35 சதவீத வட்டி வருமானத்தை இழப்புகளைக் கணக்கிட்டுச் செலுத்துவதாக அறிவித்தது.

 பங்குச்சந்தை வளர்ச்சி

பங்குச்சந்தை வளர்ச்சி

ஆனால் தற்போது பங்குச்சந்தை சிறப்பான வர்த்தக நிலையில் இருக்கும் காரணத்தால் அரசு தனது பங்கு முதலீடுகளை விற்பனை செய்து 6 கோடி ஊழியர்களின் ஈபிஎப் கணக்கில் டிசம்பர் மாத இறுதிக்குள் 8.5 சதவீத வட்டி வருமானத்தை டெபாசிட் செய்ய உள்ளது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் உங்கள் ஈபிஎப் கணக்கிற்குப் பணம் வந்துள்ளதா? இல்லையா? என்பதை எப்படி தெரிந்துகொள்வது.

 

 உமெங் ஆப்

உமெங் ஆப்

அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களும் தங்களது ஈபிஎப் கணக்கின் பேலென்ஸ்-ஐ UMANG ஆப் வாயிலாக செக் செய்யலாம். இந்த ஆப் மூலம் ஈபிஎப் பாஸ்புக், கிளைம் என பல சேவைகளைப் பெற முடியும்.

படி 1: உங்கள் மொபைலில் UMANG ஆப்-ஐ டவுன் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.

படி 2: UMANG ஆப்பில் ஈபிஎப்ஓ சேவையை கிளிக் செய்யுங்கள்

படி 3: இதில் எம்பிளாயி சென்டிரிக் சர்வீசஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்

படி 4: இதன் பின் உங்கள் ஈபிஎப் பேலென்ஸ் செக் செய்ய வியூவ் பாஸ்புக் என்பதை கிளிக் செய்யுங்கள்

படி 5: எப்போது உங்கள் UAN எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP பதிவிடுங்கள்.

படி 6: பதிவிட்ட பின் லாக்இன் பட்டனை கிளிக் செய்யவும்.

படி 7: மெம்பர் ஐடி-யை கிளிக் செய்து ஈபிஎம் பேலென்ஸ்-ஐ தெரிந்துகொள்ளுங்கள்.

 

 ஈபிஎப்ஓ இணையதளம்

ஈபிஎப்ஓ இணையதளம்

உங்கள் ஈபிஎப் பேலென்ஸ்-ஐ ஈபிஎப்ஓ போர்ட்டல் வாயிலாக தெரிந்துக்கொள்ள முடியும்.

படி 1: www.epfindia.gov.in என்ற இணைய தளத்திற்குச் சென்று 'அவர் சர்வீசஸ்' என்ற பட்டனை கிளிக் செய்து பார் எம்பிளாயிஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

படி 2: சர்வீசஸ் கீழ் மெம்பர் பாஸ்புக் என்பதை கிளிக் செய்யுங்கள்

படி 3: வேறு இணையதள பக்கத்திற்குச் செல்லும்.. இந்த தளத்தில் UAN மற்றும் பாஸ்வேர்டு கொண்டு உள் நுழையுங்கள்.

படி 4: மெம்பர் ஐடி-யை கிளிக் செய்து ஈபிஎம் பேலென்ஸ்-ஐ தெரிந்துகொள்ளுங்கள்.

 

 எஸ்எம்எஸ்

எஸ்எம்எஸ்

எஸ்எம்எஸ் வாயிலாக உங்கள் ஈபிஎப் பேலென்ஸ்-ஐ செக் செய்ய, உங்கள் UAN எண்ணுடன் ஆதார், பான் கார்டு அல்லது வங்கி கணக்கை இணைத்திருக்க வேண்டும். இணைக்கப்பட்டு இருந்தால் EPFOHO UAN ENG என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள்.

இதில் ENG என்பது English என்பதைக் குறித்தும். நீங்கள் தமிழில் ஈபிஎப் தகவல்களைப் பெற நினைத்தால் ENG-க்கு பதிலாக TAM என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்புங்கள்.

 

 மிஸ்டு கால்

மிஸ்டு கால்

இந்த சேவை பெற UAN பேர்டல் மற்றும் UAN எண்ணுடன் ஆதார், பான் கார்டு அல்லது வங்கி கணக்கை இணைத்திருக்க வேண்டும். இல்லையெனில் இந்த சேவை பெற முடியாது.

UAN எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். மிஸ்டு காலுக்கு பின் பிஎப் பேலென்ஸ் அனைத்தும் எஸ்எம்எஸ் வாயிலாகப் பெறலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO to credit 8.5% interest for 2019-20. How to Check

EPFO to credit 8.5% interest before December, how to check your PF balance
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X