அதென்ன Capital receipt..? பட்ஜெட் கலைச் சொற்கள் ஒரு பார்வை..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட் என்றாலே கணக்கு வழக்கு தானே, நமக்கு என்ன என்று ஒதுங்க வேண்டாம்.

பட்ஜெட்டில் சொல்லப்படும் கடினமான ஆங்கில கலைச் சொற்களை, எளிய தமிழில் கொடுத்து இருக்கிறோம்.

இதைப் படித்துவிட்டு, பட்ஜெட் சம்பந்தப்பட்ட செய்திகளைப் படித்துப் பாருங்கள். உங்களால் ஓரளவுக்காவது செய்தியை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

Fiscal deficit-ன்னா என்னங்கய்யா..? பட்ஜெட் & நிதி கலைச் சொற்கள்..!Fiscal deficit-ன்னா என்னங்கய்யா..? பட்ஜெட் & நிதி கலைச் சொற்கள்..!

Capital receipt

Capital receipt

இந்திய அரசுக்கு என்று ஒரு கேப்பிட்டல் அக்கவுண்ட் இருக்கிறது. அந்தக் கணக்கில் வரும் வரவுகள் எல்லாமே கேப்பிட்டல் ரெசிப்ட் தான். உதாரணமாக, மத்திய அரசு நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், எல் ஐ சி போன்ற நிறுவனங்களின் பங்குகளை விற்றால் கிடைக்கும் பணம் இந்த கேப்பிட்டல் ரெசிப்ட் கணக்குக்குத் தான் வரும்.

Capital expenditure

Capital expenditure

மேலே கேப்பிட்டல் ரெசிப்ட்டுக்கு சொன்னதுக்கு எதிராக நடந்தால் அது Capital expenditure. உதாரணமாக, ஏதாவது சொத்து பத்துக்களை வாங்க, மத்திய அரசு செலவழிக்கிறது என்றால், அதற்கு பணம், மத்திய அரசின் கேப்பிட்டல் அக்கவுண்டில் இருந்து தான் பணம் போகும். ஆகையில் தான் அதை Capital expenditure என்கிறார்கள்.

Revenue receipt
 

Revenue receipt

மத்திய அரசுக்கு வரிகள் மூலமாகவோ அல்லது ஈவுத் தொகை, வட்டி மூலமாகவோ வரும் வருவாய்களைத் தான் Revenue receipt என்கிறோம். அப்படி வரும் வருவாய்களை கணக்கில் கொண்டு வர பயன்படுத்தும் சொல் தான் இந்த Revenue receipt.

Revenue expenditure

Revenue expenditure

வந்த வருவாயை அப்படியே வைத்திருக்க முடியுமா..? அடுத்தடுத்து அரசாங்கத்துக்கு செலவுகள் இருக்கத் தானே செய்யும். அந்த செலவுகளை எல்லாம் எப்படி கணக்கிடுவார்கள் என்று கேட்டால் அதற்கான விடை தான் Revenue expenditure.

Ways and means advance (WMA)

Ways and means advance (WMA)

மத்திய அரசோ மாநில அரசோ, கொஞ்சம் பட்ஜெட்டில் துண்டு விழுகிறது என்றால், ஆர்பிஐ ஒரு வங்கி போல செயல்பட்டு கடன் கொடுக்கும். அப்படி கொடுக்கப்படும் கடனின் பெயர் தான் Ways and means advance (WMA). பொதுவாக இந்த ரக கடன்கள், மத்திய அல்லது மாநில அரசின் தற்காலிக வரவு செலவு பற்றாக்குறைகளைச் சரி செய்து கொள்ள உதவும்.

Subvention

Subvention

இதை நாம் அடிக்கடி கேள்விப்படும் சொல் தான். அரசு மானியம் கொடுப்பதை பார்த்திருக்கிறோம். இல்லையா..? அதன் மறு பெயர் தான் இந்த Subvention. உதாரணம்: வங்கிகளில் Interest Subvention கடன்களை வழங்குவார்கள். உதாரணமாக, நமக்கு 10% வட்டிக்கு வங்கிகள் கடன் கொடுக்கும், ஆனால் நாம் 7% செலுத்தினால் போதும், மீதமுள்ள 3% அரசு நமக்கு பதிலாக செலுத்திக் கொள்ளும்.

Financial Inclusion

Financial Inclusion

இந்தியாவில் இருக்கும் கடைக் கோடி மக்கள் வரை, இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவை கிடைக்க வேண்டும். அவர்களும் வங்கிகளின் பலன்களைப் பெற வேண்டும். அதைத் தான் ஆங்கிலத்தில் Financial Inclusion என்கிறார்கள். ஜன் தன் திட்டம் இந்த Financial Inclusion-க்கு ஒரு நல்ல உதாரணம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance and budget terminologies with simple explanation part 3

Know the simple meaning of some Finance and budget terminologies with simple explanation part 3 which we heard very often.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X