இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை 35 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியது. இது வங்கிகளை கடனுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக வங்கிகள் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கலாம். குறிப்பாக வீட்டுக் கடனுடக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியாக கடந்த 7 மாத காலமாகவே தொடர்ந்து வட்டி விகிதமானது அதிகரித்து வருகின்றது.

எவ்வளவு அதிகரிப்பு?
இது உங்கள் கடனிலும் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். கடந்த 7 மாதங்களில், 2.25% அதிகரித்து, 6.25% ஆக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பால். உங்கள் மாத தவணைத் தொகையானது 50 லட்சம் கடனுக்கு 20 வருட கால அவகாசமாக கருதினால், 7 மாதங்களில் உங்களது மாத தவணை 7000 ரூபாயாக அதிகரித்துள்ளது எனலாம்.

வட்டி எவ்வளவு?
தற்போது வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் என்பது 9% தாண்டி இருக்கலாம். இதில் பல கடன் வாங்கியோரின் வயது ஏற்கனவே 60 வயதினை தாண்டியிருக்கலாம். கடன்களின் கால அளவும் அதிகரித்துள்ளது. கடன் விகிதங்கள் உயரும்போது வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது. எனினும் இது நிலையான வட்டி விகிதத்தினை தேர்தெடுத்தவர்களுக்கு பொருந்தாது.

மறு நிதியளிக்க வங்கியை கூறலாம்
ஆக இந்த சமயத்தில் உங்கள் வீட்டுக் கடனுக்கான செலவை குறைப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதற்கு என்ன செய்யலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன?
நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் கடனுக்கான வட்டி விகிதத்தினை குறைவாக கேட்க வேண்டும். இது சற்றே மலிவானது, ஆவணங்கள் எதுவும் இல்லாததால், ஏற்கனவே வாங்கிய வங்கிகளிலேயே செய்யலாம். இதில் செயலாக்க கட்டணம் இருக்கும். இது சில ஆயிரங்கள் இருக்கும். இது 50 அடிப்படை புள்ளிகள் குறைவாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்.

வேறு வங்கிகளில் ரீபைனான்ஸ் பெறலாம்
நீங்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் கடன் பெறுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் கடனுக்கான வட்டி விகிதம் என்பது உச்சத்தில் இருக்கலாம். ஆக இது போன்ற சமயங்களில் நீங்கள் வங்கிகளில் கடனை டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். எனினும் இதனை செய்வதற்கு முன்பும் பின்பும் என்னென்ன பிரச்சனைகள் என்பதையும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதில் வட்டி விகிதம் மட்டும் அல்ல, செயல்பாட்டுக் கட்டணம், எம்ஓடி கட்டணங்கள், நிர்வாக கட்டணங்கள் என பலவும் அதிகரிக்கலாம். ஆக அதனையும் தெரிந்து கொண்டு பின்னர் மாற்றம் செய்யலாம்.

மாத தவணையை அதிகமாக செலுத்தலாம்
வங்கிகளில் சென்று உங்களது மாத தவணை தொகையை அதிகரிக்க கூறலாம். இதன் மூலம் விரைவில் உங்கள் கடனை நீங்கள் திரும்ப செலுத்த முடியும். இதன் மூலம் உங்களால் உங்கள் தொகையை மிச்சப்படுத்த முடியும். இதன் மூலம் முன் கூட்டியேவும் உங்கள் கடனை நீங்கள் செலுத்தி முடிக்க முடியும்.

கூடுதலாக ஒரு EMI செலுத்தணும்
உங்களால் ஒவ்வொரு மாதமும் இ எம் ஐ-யினை கூடுதலாக செலுத்த முடியாவிட்டால், ஒரு வருடத்திற்கு ஒரு தவணையை ஆவது அதிகமாக செலுத்தலாம். இதுவும் உங்களது பணத்தினை சேமிக்க உதவும். இது கடனை முன் கூட்டியேவும் செலுத்த வழிவகுக்கும்.

கூடுதலாக 5% கடனை செலுத்துங்கள்
ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக கடனில் 5% முன் கூட்டியே செலுத்தலாம். இதனால் உங்களது கடன் தொகை குறையும். இதன் மூலம் இதுவும் திட்டமிட்ட ஆண்டுகளை விட, உங்கள் கடனை முன் கூட்டியே முடிக்க வழிவகுக்கலாம். 20 வருட கடனில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 5% செலுத்தினால் 12 வருடங்களுக்குள்ளே செலுத்தி முடிக்கலாம்.

முன் கூட்டியே முடித்து விடுங்கள்
ஒரு வேளை உங்கள் கடன் அதிகமாக இருப்பதாக தோன்றினால் அதனை முன் கூட்டியே முடித்து விடுங்கள். உங்களுக்கு ரீபைனான்ஸ் மட்டும் ஆப்சன் அல்ல, முடிந்தால் முன் கூட்டியேவும் முடித்து விடலாம்.