EPFO: வருங்கால வைப்பு நிதி கணக்கில் நாமினை மாற்றுவது எப்படி.. ரொம்ப ஈஸி தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் நீங்கள் உறுப்பினராக இருந்தால், உங்களது பணியாளார் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் ஓய்வதிய திட்டத்தில் நாமினி இருக்க வேண்டும்.

பலரும் முன்னரே இதனை செய்திருப்பர். எனினும் சில நேரங்களில் நாமினி கொடுக்கப்படாமலும் இருக்கலாம். அதோடு ஏற்கனவே கொடுத்த நாமினியின் பெயரை எப்படி மாற்றுவது? ஒன்றுக்கு மேற்பட்ட நாமினியை எப்படி கொடுப்பது?

களத்தில் இறங்கும் டாடா.. மத்திய அரசு திட்டத்திற்காக புதிய பிஸ்னஸ் துவங்க முடிவு..!களத்தில் இறங்கும் டாடா.. மத்திய அரசு திட்டத்திற்காக புதிய பிஸ்னஸ் துவங்க முடிவு..!

இன்றைய காலகட்டத்தில் அதனை செய்வது மிக எளிது? இன்றைய காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று இது. ஏனெனில் பிஎஃப் கணக்கினை பொறுத்த வரையில், அதில் நீங்கள் உங்களது அவசர தேவைக்காக அணுகும்போது தான் இது போன்ற பிரச்சனைகள் தெரியவரும்.

ஆக அந்த சமயத்தில் உங்களால் சரியான நேரத்தில் க்ளைம் செய்ய முடியாமல் போகலாம்.

உங்களது விவரங்கள் சரியாக இருக்கிறதா?

உங்களது விவரங்கள் சரியாக இருக்கிறதா?

அதன்பிறகு நீங்கள் விவரங்களை அப்டேட் செய்து, அதன்பிறகு பயன்படுத்த தாமதமாகும். இதன் காரணமாக எப்போதும் உங்கள் பிஎஃப் கணக்கில் விவரங்கள் சரியாக இருக்கின்றனவா? அது நாமினி மட்டும் அல்ல, ஆதார், பான் மட்டும் அல்ல, வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட பலவும் சரியாக இருக்கின்றனவா? என பார்த்துக் கொள்ளுங்கள்.

எந்த தளத்தில் செல்ல வேண்டும்?

எந்த தளத்தில் செல்ல வேண்டும்?

இதற்காக https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற தளத்தில் சென்று, அதில் services என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

அடுத்ததாக Employees Section என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதில் Services என்ற ஆப்சனின் கீழ் உள்ள member UAN/Online Service option என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு இது மற்றொரு பக்கத்தில் தொடங்கும். அதில் உங்களது UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்யவும்.
அதன் பிறகு MANAGE என்ற ஆப்சனின் கீழ் E- Nomination என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்ததாக குடும்பத்தினரின் விவரங்களை நிர்வகி என்ற பிரிவில் yes என்ற ஆப்சனை கொடுத்து கிளிக் செய்ய வேண்டும்.

பல நாமினிகளை கொடுக்கலாம்

பல நாமினிகளை கொடுக்கலாம்

இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளை கொடுத்துக் கொள்ளலாம். அதில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பலன் என்பதையும் கொடுத்துக் கொள்ளலாம்.

அதனை கொடுக்க நியமன விவரங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். விவரங்களை கொடுத்த பிறகு, இபிஎஃப் நாமினேஷன் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதனை சேவ் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு இது அடுத்த பக்கத்தில் தொடங்கும். இதில் E- sign என்ற ஆப்சனை கொடுக்கவும்.
உங்களது ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். நீங்கள் ஓடிபியை பதிவு செய்த பிறகு, உங்கள் நாமினி விவரங்கள் இபிஎஃப்ஒ-வில் பதிவு செய்யப்படும்.

e - sign தேவை

e - sign தேவை

நீங்கள் நாமினி விவரங்களைக் கொடுத்து Save செய்திருந்தால், அதனை Manageல் சென்று பார்க்கும்போது பெண்டிங் லிஸ்டில் காண்பிக்கும். இந்த செயல்முறையை முடிக்க வேண்டும் எனில் உங்களது e - sign தேவைப்படும். ஆக அதனையும் கொடுத்து அப்டேட் செய்து கொள்ளுங்கள். இந்த விவரங்களை அப்டேட் செய்ய உங்களிடம் UAN எண், ஆதார் எண் உள்ளிட்ட பல விவரங்கள் தேவை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to add or change nominee in EPF account online: check details

EPF latest news updates.. How to add or change nominee in EPF account online: check details/ EPFO: வருங்கால வைப்பு நிதி கணக்கில் நாமினை மாற்றுவது எப்படி.. ரொம்ப ஈஸி தான்..!
Story first published: Friday, November 19, 2021, 20:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X