தொலைந்து போன ATM கார்டினை எப்படி பிளாக் செய்வது.. எஸ்பிஐ-யில் மீண்டும் பெறுவது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் தொலைந்துபோன அல்லது திருட்டுபோன ஏடிஎம் கார்டினை எப்படி உடனே பிளாக் செய்வது? எப்படி புதிய கார்டுக்கு விண்ணப்பம் செய்வது?

 

பலருக்கும் தங்களது டெபிட் கார்டு தொலைந்து விட்டால், அடுத்து என்ன செய்வது? ஏது செய்வது என தெரியாமல் வங்கிகளுக்கு அலைவர்? மேலும் பணம் திருட்டு போய்விடுமோ என்ற பயமும் இருக்கும்.

இது உண்மையும் கூட, ஏனெனில் உங்களது தொலைந்து போன கார்டு தவறாகவும் பயன்பட வாய்ப்புள்ளது. அதாவது உங்களது வங்கிக் கணக்கில் பணம் திருடப்படவும் வாய்ப்புள்ளது. அப்படி ஏதேனும் மோசடிகள் நடப்பதற்கு முன்பு உங்களது கார்டினை நீங்களே பிளாக் செய்யலாம்.

எப்படியெல்லாம் பிளாக் செய்யலாம்?

எப்படியெல்லாம் பிளாக் செய்யலாம்?

இதனை வங்கிகளுக்கு உடனே தெரிவித்தும் பிளாக் செய்யலாம். அப்படி இல்லாவிட்டால் நீங்களாகவே பிளாக் செய்யலாம். இன்றைய காலகட்டத்தில் அதற்காக பல வழிகள் உள்ளது. குறிப்பாக எஸ்பிஐயின் யோனோ செயலி வழியாகவும், ஆன்லைன், ஆஃப்லைன் வழியாகவும், மொபைல் எஸ் எம் எஸ், போன் கால் வழியாகவும் பிளாக் செய்யலாம்.

எஸ்எம்எஸ் வழியாக எப்படி பிளாக் செய்வது?

எஸ்எம்எஸ் வழியாக எப்படி பிளாக் செய்வது?

மொபைல் எஸ்எம்எஸ் மூலமும் தொலைந்துபோன ஏடிஎம் கார்டினை பிளாக் செய்யலாம். இதற்காக நீங்கள் BLOCK XXXX என டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பலாம். அதாவது BLOCK (space)XXXX என டைப் செய்து அனுப்பவும். அதில் XXXX என்ற இடத்தில் உங்களது டெபிட் கார்டின் கடைசி நான்கு இலக்க நம்பரை கொடுக்க வேண்டும். இந்த எஸ் எம் எஸினை கட்டாயம் உங்களது வங்கிக் கணக்கில் இணைத்துள்ள பதிவு மொபைல் எண்ணில் இருந்து அனுப்ப வேண்டும். உங்களது கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டால், இதற்காக உறுதிபடுத்த உங்களுக்கு எஸ் எம் எஸ் வரும்.

போன் கால் மூலம் எப்படி பிளாக் செய்வது?
 

போன் கால் மூலம் எப்படி பிளாக் செய்வது?

எஸ்பிஐ-யின் ஹெல்ப்லைன் நம்பர் 24 மணி நேரமும் செயலில் இருக்கும். ஆக வாடிக்கையாளார்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த டோல் ப்ரீ எண்ணுக்கு கால் செய்து உங்களது தொலைந்து போன டெபிட் கார்டினை பிளாக் செய்யலாம். இதற்காக நீங்கள் 1800 11 2211 என்ற எண்ணுக்கும், இதே 1800 425 3800 என்ற எண்ணுக்கும் கால் செய்யலாம். இது தவிர 0802659 9990 என்ற எண்ணுக்கும் கால் செய்து பிளாக் செய்யலாம்.

யோனோ ஆப் வழியாகவும் பிளாக் செய்யலாம்?

யோனோ ஆப் வழியாகவும் பிளாக் செய்யலாம்?

வாடிக்கையாளார்கள் தங்களது யோனோ ஆப்பினை லாகின் செய்து கொண்டு, பின்னர் service request என்ற ஆப்சனில் பிளாக் ஏடிஎம்/டெபிட் கார்டு என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்களது இணைய வங்கியின் பாஸ்வேர்டினை கொடுத்து தொடரவும். இதன் பிறகு உங்களது அட்டையுடன் லிங்கில் உள்ள வங்கிக் கணக்கினை கிளிக் செய்யவும். அதில் உங்களது கார்டு எண் மற்றும் எதற்காக கார்டினை பிளாக் செய்கிறீர்கள் என கூறவும். அதன் பிறகு உங்களது கார்டினை தற்காலிகமாக பிளாக் செய்ய வேண்டுமா? அல்லது நிரந்தரமாக பிளாக் செய்ய வேண்டுமா என்பதை கொடுக்கவும்.

ஆன்லைன் வங்கியில் பிளாக் செய்வது எப்படி?

ஆன்லைன் வங்கியில் பிளாக் செய்வது எப்படி?

இதற்காக வாடிக்கையாளர்கள் https://onlinesbi.com/ என்ற இணையதளத்தில் சென்று உங்களது இணைய வங்கியினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு E-services என்ற ஆப்சனின் கீழ் ATM card services என்பதை கிளிக் செய்து, அதில் Block ATM என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு எந்த அக்கவுண்டுடைய ஏடிஎம் கார்டு என்பதை கிளிக் செய்யவும்.

அதன் பின்னர் பிளாக் என்பதை கிளிக் செய்து, எதற்காக பிளாக் செய்கிறீர்கள் என்பதையும் பதிவு செய்யவும். ஒரு முறைக்கு இருமுறை விவரங்களை சரிபார்த்து பின்னர் சப்மிட் கொடுக்கவும். இதனை உறுதிபடுத்த உங்களது ஓடிபி அல்லது profile பாஸ்வேர்டினை கொடுத்து confirm என்பதை கிளிக் செய்யவும்.

புதிய எஸ்பிஐ ஏடிஎம் கார்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

புதிய எஸ்பிஐ ஏடிஎம் கார்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இதற்காக நீங்கள் https://onlinesbi.com/ என்ற இணையதளத்தில் சென்று இணைய வங்கியை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் e- services என்பதன் கீழ், ஏடிஎம் கார்டு சேவைகள்' என்பதை கிளிக் செய்யவும். அதில் request ஏடிஎம் / டெபிட் கார்டினை கிளிக் செய்யவும்.

வெரிபிகேஷனுக்காக SMS OTP அல்லது profile password-னை கிளிக் செய்யவும். இதில் SMS OTP அல்லது profile password பதிவு செய்து கன்பார்ம் என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் அட்டை வழங்கப்படவேண்டிய வங்கிக் கணக்கினையும் தேர்வு செய்யவும்.

நீங்கள் அட்டையில் அச்சிட விரும்பும் பெயரை பதிவு செய்து, அட்டை வகையைத் தேர்ந்தெடுக்கவும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில் விவரங்களைச் சரிபார்த்து, சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் புதிய எஸ்பிஐ ஏடிஎம் / டெபிட் கார்டை பதிவு செய்யப்பட்ட முகவரியில் 7 - 8 வேலை நாட்களில் பெற முடிவும்.

யோனோ ஆப் வழியாக புதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

யோனோ ஆப் வழியாக புதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

எஸ்பிஐயின் யோனோ ஆப்பினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு service request என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு ‘புதிய / மாற்றுக் கோரிக்கை (Request NEW/Replacement) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு உங்களது கணக்கை தேர்ந்தெடுத்து, உங்கள் அட்டையில் நீங்கள் விரும்பும் பெயரை டைப் செய்து, பின்னர் நீங்கள் விரும்பும் அட்டை வகையைத் தேர்ந்தெடுக்கவும். அனுப்ப ஒரு முகவரியைத் தேர்ந்தெடுத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு. OTP ஐ உள்ளிட்டு தொடரவும்.

மொபைல் ஆப்பில் எப்படி கொடுக்கலாம்?

மொபைல் ஆப்பில் எப்படி கொடுக்கலாம்?

உங்களது மொபைலில் உள்ள எஸ்பிஐ கார்டு மொபைல் ஆப்பினை (SBIcard mobile app) லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் menu பாரினை கிளிக் செய்து, அதன் பிறகு service request என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பிறகு Request NEW/Replacement என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.உங்களது கார்டு நம்பரை கொடுத்து சப்மிட் செய்து கொள்ளுங்கள்.

புதிய கார்டுகளுக்கு கட்டணம் உண்டா?

புதிய கார்டுகளுக்கு கட்டணம் உண்டா?

ஏதேனும் ஒரு காரணத்தினால் நீங்கள் NEW/Replacement என்பதை அப்ளை செய்கிறீர்கள் எனில், அதற்காக Replacement கட்டணமாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இதன் பிறகு உங்களது கார்டு 7 வேலை நாட்களில், நீங்கள் கொடுத்த முகவரிக்கு அனுப்பப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to block SBI debit card and Reissue A new one? check full details

ATM card updates.. How to block SBI debit card and Reissue A new one?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X