கொரோனா தொற்றுக் காரணமாக அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் மக்கள் கொரோனா தொற்று காரணமாகவும், தங்களது உடல் நலம் மீதான அக்கறையின் காரணமாகவும் அதிகளவிலானோர் மருத்துவக் காப்பீடு எடுத்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் தங்களது மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டத்தில் அதிகப்படியான கிளைம் பெற என்ன செய்யவேண்டும் என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
மருத்துவக் காப்பீடுகள்
பெரும்பாலான மருத்துவக் காப்பீடுகள் எந்த மருத்துவச் சிகிச்சைக்கும் முழுமையாகக் கிளைம் கொடுப்பது இல்லை, அதாவது மருத்துவச் சிகிச்சைக்கான 100 சதவீத தொகையையும் முழுமையாகக் கொடுப்பது இல்லை. ஆனால் 70 முதல் 90 வரையிலான தொகையைக் கிளைம் செய்ய முடியும்.
Cashless முறை கிளைம்
ஆனால் இந்தக் கொரோனா தொற்றுக் காலத்தில் பல மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் மிகவும் குறைவான தொகையை மட்டுமே கிளைம் அளிக்கிறது. உதாரணமாக நீங்கள் Cashless முறையில் கிளைம் செய்தால் மொத்த மருத்துவச் செலவில் 40% முதல் 80% வரை மட்டுமே கிடைக்கிறது.
கேஷ்லெஸ் அல்லாத முறை
இதுவே கேஷ்லெஸ் முறையை ஏற்காத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், மருத்து சிகிச்சைக்கான செலவுகளை நாம் பணமாகச் செலுத்திவிட்டு பிறகு இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் கிளைம் செய்ய வேண்டும். இந்த முறையில் கிளைம் செய்வோருக்கு 40 முதல் 60 சதவீதம் மட்டுமே கிளைம் தொகை கிடைக்கிறது.
அதிகக் கிளைம் தொகை
இந்நிலையில் உங்கள் மருத்து காப்பீட்டின் மூலம் அதிகப்படியான தொகையைக் கிளைம் தொகையைப் பெறுவது உங்கள் கையில் தான் உள்ளது. எப்படி எனக் கேட்கிறீர்களா..? Cashless முறையில் கிளைம் செய்வோருக்கு மருத்துவமனை நிர்வாகமே முழுமையாகப் பணிகளைச் செய்துவிடும். ஆனால் Non Cashless முறையைப் பயன்படுத்துவோர் கீழ் கூறப்படும் வேலைகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.
முக்கியமான ஆவணங்கள் கட்டாயம் தேவை
1. முதலில் கொரோனா தொற்றை உறுதி செய்யும் சிடி ஸ்கேன் பில், சிடி ஸ்கேன் ரிப்போர்ட், சிடி ஸ்கேன் பிலிம் ஆகிய 3ஐயும் கட்டாயம் பெற வேண்டும். இந்த 3ல் ஒன்று இல்லை என்றாலும் இதற்கான தொகை கிளைம் செய்யப்பட மாட்டாது.
2. அனைத்து மருத்துவப் பரிசோதனை அறிக்கை, ஆய்வறிக்கைகள் மற்றும் பரிசோதனைக்கான ரசீது ஆகியவை கட்டாயம் பெற வேண்டும்.
3. நீங்கள் வாங்கிய மருத்துகளுக்கு ரசீது கட்டாயம் தேவை
4. இதர செலவுகள் என்று போட்டிருந்தால் அதற்கான முழு விளக்கம் மற்றும் ரசீதுகள்
5. இவை அனைத்தையும் தாண்டி டிஸ்சார்ஜ் சம்மரி அதாவது குணமான பின்பு நீங்கள் மருத்துவமனையில் இருந்து வெளி வரும்போது மொத்த மருத்து சிகிச்சைக்கான சுருக்க அறிக்கை.
டிஸ்சார்ஜ் சம்மரி அறிக்கை
டிஸ்சார்ஜ் சம்மரி அறிக்கையில் நீங்கள் செலவு செய்த தொகை அனைத்தும் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது மட்டும் அல்லாமல் மருத்துவமனை, மருத்துவர் அல்லது மருத்துவமனை நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஆகியோரின் கையெழுத்து மற்றும் சீல் உள்ளதா என்பதைக் கட்டாயம் சரி பார்க்க வேண்டும்.
மருத்துவமனை சீல் மற்றும் கையெழுத்து
மருத்துவமனை, மருத்துவர் அல்லது மருத்துவமனை நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஆகியோரின் கையெழுத்து மற்றும் சீல் இல்லையெனில் உங்களது இன்சூரன்ஸ் கிளைம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
அதிகப்படியான கிளைம் தொகை
மேலே குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் கட்டாயம் உங்களுக்கு அதிகப்படியான தொகை உங்கள் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் கிடைக்கும். ஆவணங்களைச் சரியாக இல்லாத போது அதற்கான கிளைம் தொகை குறையும்.
இறப்புச் சான்றிதழ் கட்டாயம் தேவை
இதோடு கொரோனா சிகிச்சை பெறுவோர் மரணம் அடைந்தால், மேலே குறிப்பிட்ட ஆவணங்களோடு, இறப்புச் சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும். மேலும் இன்சூரன்ஸ் திட்டம் மூலம் கிளைம் செய்யும் போது மருத்துவமனை ஆவணங்களுடன் இறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications