ஆன்லைனில் அஞ்சலக சேமிப்பு கணக்கு எப்படி தொடங்குவது.. இணைய வங்கியை எப்படி ஆக்டிவேட் செய்வது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஞ்சலக சேமிப்பு கணக்கு என்பது வங்கி சேமிப்பு கணக்கு போன்றது தான். ஏனெனில் இன்றைய நாளில் நாம் வங்கி கணக்கில் பெறும் பெரும்பாலான சேவைகளை, அஞ்சலக கணக்கிலும் பெற முடியும்.

குறிப்பாக ஆன்லைன் வங்கி மற்றும் மொபைல் வங்கி போன்ற சேவைகளையும் பெற முடியும். ஒரு காலகட்டத்தில் ஆன்லைனில் பணம் அனுப்பும் சேவை என்பது வங்கிக் கணக்குகளில் மட்டும் தான் இருந்தது. ஆனால் இன்று பல சேவைகள் வந்து விட்டன. ஆனால் அந்த சேவையானது அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கும் உண்டு என்பது மிக நல்ல விஷயம் தான்.

அதிலும் கிராமப்புறங்களில் இந்த அஞ்சலக சேவையானது மிக பயனுள்ளதாகவும், எளிதான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிற்றும் மேலாக அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் கிளைகள் உள்ளதால், மக்கள் எளிதில் அணுக முடியும்.

ஆர்வம் அதிகரிப்பு

ஆர்வம் அதிகரிப்பு

இன்று நாட்டில் எத்தனையோ சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், மிக சிறந்த திட்டங்களில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது கிராமப்புறங்களில் மட்டும் அல்ல, நகர்புறங்களில் உள்ள பெண்களும் ஆர்வம் காட்டுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக வங்கி சேவைகளை போலவே இந்த அஞ்சலகங்களும் சேவைகளை வழங்குவதால், தற்போது மீண்டும் அஞ்சலக சேமிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது.

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் சேவை

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் சேவை

குறிப்பாக பொது வருங்கால வைப்பு நிதி, பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், அரசின் தேசிய சேமிப்பு பத்திரம், தேசிய ஓய்வூதிய திட்டம், தொடர் வைப்பு நிதி திட்டம், கிசான் விகாஸ் பத்திரம், பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் என பலவற்றையும் வழங்குகின்றன. இந்த திட்டங்களில் நீங்கள் செய்யும் பரிவர்த்தனைகளை உங்களது அஞ்சல் அலுவலக கணக்கு மூலமாக தொடங்கிக் கொள்ளலாம்.

அஞ்சலகத்தின் IPPB app

அஞ்சலகத்தின் IPPB app

இப்படிப்பட்ட அஞ்சல சேமிப்பு கணக்குகளை, எப்படி ஆன்லைனில் தொடங்குவது? அதிலும் தற்போது நிலவி வரும் நெருக்கடியான காலகட்டங்களில் அஞ்சலகங்களை நேரில் செல்ல முடியாத நிலை. இதனால் நீங்கள் ஆன்லைனிலேயே தொடங்கிக் கொள்ளலாம். இதனை அஞ்சலகத்தின் IPPB app மூலம் தொடங்கிக் கொள்ளலாம்.
அஞ்சலகத்தின் IPPB app-ல் ஒபன் அக்கவுண்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அதில் பான் எண் மற்றும் ஆதார் நம்பரை கொடுத்து கிளிக் செய்யுங்கள்.

ஆதார் வெரிபிகேஷன் செய்யப்படும்

ஆதார் வெரிபிகேஷன் செய்யப்படும்

அதன் பின்னர் ஆதார் வெரிபிகேஷன் செய்யப்படும். இதற்காக உங்கள் ஆதார் எண்ணில் கொடுக்கப்பட்ட பதிவு மொபைல் எண்ணுக்கு ஓரு ஓடிபி வரும். இது தவிர அம்மா பெயர், கல்வித் தகுதி, முகவரி, நாமினி விவரம் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும். வேண்டிய விவரங்களை கொடுத்த பிறகு சப்மிட் கொடுக்கவும். இந்த அனைத்து விவரங்களையும் சரியாக கொடுத்த பின்னர், உங்களது அஞ்சல கணக்கினை ஆக்டிவேட் ஆகிவிடும்.

இதனையும் செய்ய வேண்டும்

இதனையும் செய்ய வேண்டும்

உங்களது சேமிப்பு கணக்கினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனினும் இந்த டிஜிட்டல் சேமிப்பு கணக்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே வேலிட் ஆக இருக்கும். இதனை துவங்கிய ஒரு வருடத்திற்குள், நீங்கள் நேரடியாக சென்று பையோமெட்ரிக் முறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

எப்படி இணைய வங்கியை ஆக்டிவேட் செய்வது?

எப்படி இணைய வங்கியை ஆக்டிவேட் செய்வது?

சரி அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது? இதற்காக நீங்கள் https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx என்ற இணையத்தில் மூலம் சென்று, India Post Payments Bank என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதனை கிளிக் செய்தால் அது https://www.ippbonline.com/ என்ற பக்கத்திற்கு செல்லும். இதில் மெனு பாரில் services என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பல டிஜிட்டல் சேவைகள்

பல டிஜிட்டல் சேவைகள்

அதில் மொபைல் பேங்கி, எஸ் எம் எஸ் பேங்கிங், மிஸ்டு கால் பேஙகிங், போன் பேங்கிங், டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட், உள்நாட்டு பண பரிவர்த்தனை என பல ஆப்சன்கள் இருக்கும். அதில் நீங்கள் மொபைல் பேங்கிங்கினை தொடங்க வேண்டும் எனில், IPPB mobile app என்பதை https://www.ippbonline.com/web/ippb/mobile-app என்ற இணையத்தில் சென்று லாகின் செய்து கொள்ளலாம். ஆனால் ஆன்லைனில் நீங்கள் இந்த சேவையை தொடங்கும் முன்பு, நேரிடையாக சென்று கேஒய்சி விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும். அதன் பின்னரே உங்களது அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆகும்.

எப்படி லாகின் செய்வது?

எப்படி லாகின் செய்வது?

இதன் பின்னரே நீங்கள் ஒரு முறை இணைய வங்கியை ஆக்டிவேட் செய்த பிறகு, நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு எஸ் எம் எஸ் வரும். இதன் பிறகு நீங்கள் http://ebanking.indiapost.gov.in என்ற இணையத்தில் சென்று New user activation என்பதை கிளிக் செய்ய வேண்டும். அங்கு CIF ID என்பதை கொடுத்து லாகின் செய்ய வேண்டும். இது உங்களது சேமிப்பு கணக்கின் பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருக்கும்.

பாஸ்வேர் கொடுத்து கவனமாக பரிமாற்றம் செய்யுங்கள்

பாஸ்வேர் கொடுத்து கவனமாக பரிமாற்றம் செய்யுங்கள்

அதன் பிறகு பாஸ்வேர்டையும் கவனமாக கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள். இதன் பிறகு உங்களது அஞ்சலக சேமிப்பு கணக்கில் இருந்து, மற்ற கணக்குகளுக்கும் மாற்றிக் கொள்ள முடியும். மற்ற சேமிப்பு திட்டங்களுக்கும் பணம் செலுத்த முடியும். இதே போல மற்ற மொபைல் பேங்கிங் சேவை என பலவற்றிற்கும் வழிமுறைகளை தொடர்ந்து லாகின் செய்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to open India post payment bank account online? How to activate online banking?

Post office account updates.. How to open India post payment bank account online? How to activate online banking?
Story first published: Sunday, May 23, 2021, 15:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X