RBI Retail Direct Scheme: அரசு பத்திரத்தில் முதலீடு செய்வது எப்படி.. முழு விபரம்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்த ரிசர்வ் வங்கியின் ரீடைல் டைரெக்ட் திட்டத்தின் மூலம் சாமானிய மக்கள் பங்குச்சந்தையில் எப்படி நேரடியாக முதலீடு செய்கிறார்களோ அதேபோல் அரசு பத்திரத்தில் முதலீடு செய்ய முடியும்.

 

இத்திட்டம் மூலம் மத்திய அரசுக்குத் தேவையான நேரத்தில் முதலீட்டைத் திரட்ட முடியும், இதேபோல் இந்த முதலீட்டுக்கு மத்திய அரசு நிலையான வட்டி வருமானத்தையும் அளிக்கும், அனைத்தையும் தாண்டி இது வங்கி வைப்பு நிதியைக் காட்டிலும் பாதுகாப்பானது. இத்திட்டம் மூலம் இந்திய முதலீட்டாளர்களுக்குப் புதிய முதலீட்டுப் பாதை திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு மெகா திட்டம் போட்ட ஜப்பான் சாப்ட்பேங்க்.. இனி பண மழைதான்..!இந்தியாவுக்கு மெகா திட்டம் போட்ட ஜப்பான் சாப்ட்பேங்க்.. இனி பண மழைதான்..!

சரி இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் வழிமுறை என்ன..? அரசு பத்திரத்தில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் ஏதேனும் தகுதி தேவையா..?

ரீடைல் டைரெக்ட் ஸ்கீம்

ரீடைல் டைரெக்ட் ஸ்கீம்

ரீடைல் முதலீட்டாளர்கள் அரசு பத்திரத்தில் நேரடியாக முதலீடு செய்ய வாய்ப்பை உருவாக்கித் தரும் ஒரு முக்கியமான திட்டம் தான் ரிசர்வ் வங்கியின் ரீடைல் டைரெக்ட் ஸ்கீம் (RBI Retail Direct scheme). இத்திட்டத்தின் மூலம் ஒருவர் ஆன்லைன் மூலம் அரசு பத்திரத்தை வாங்கவோ விற்பனை செய்வோ முடியும்.

நாணய கொள்கை கூட்டம்

நாணய கொள்கை கூட்டம்

ரிசர்வ் வங்கி இத்திட்டத்தை 2021 பிப்ரவரி மாதம் நடந்த நாணய கொள்கை கூட்டத்தில் அறிவித்தது. இதன் பின்பு பல ஆலோசனை, கட்டமைப்புப் பணிகள் வாயிலாகப் பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வமாக இத்திட்டத்தைத் துவங்கி வைத்துள்ளார்.

ஆன்லைன் தளம்
 

ஆன்லைன் தளம்

ரிசர்வ் வங்கி ரீடைஸ் டைரெக்ட் திட்டத்திற்காக அரசு பத்திரங்களை வாங்கவும், விற்கவும் https://www.rbiretaildirect.org.in/ என்ற வெப்சைட் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தத் தளம் மூலம் முதலீட்டாளர்கள் ப்ரைமரி மற்றும் செக்ன்டரி தளத்தில் அரசு பத்திரங்களை வாங்க முடியும்.

GILT கணக்கு

GILT கணக்கு

பொதுவாகவே அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் நிறுவனமோ அல்லது அமைப்போ GILT கணக்கு திறக்க வேண்டும். இதேபோல் தற்போது ரீடைல் முதலீட்டாளர்கள் அரசு பத்திரத்தில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கியிடம் Retail Direct Gilt (RDG) Account-ஐ திறக்க வேண்டும்.

RDG கணக்கு திறக்க தேவையானவை..?

RDG கணக்கு திறக்க தேவையானவை..?

ரிசர்வ் வங்கி ஜூலை 12, 2021ல் வெளியிட்ட அறிவிப்பு மூலம் ஒரு ரீடைல் முதலீட்டாளர் RDG கணக்கு திறக்க வேண்டும் என்றால் இது தேவை

1. இந்தியாவில் ரூபாய் மதிப்பில் இயங்கக் கூடிய சேமிப்பு கணக்கு வேண்டும்

2. வருமான வரித்துறை கொடுக்கும் பான் கார்டு கட்டாயம் வேண்டும்

3. அதாப், வாக்காளர் அட்டை போன்ற KYC பூர்த்தி செய்வதற்கான ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

4. சரியான ஈமெயில் ஐடி

5. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்

மேலும் இந்த RDG கணக்கை தனி நபரோ அல்லது கூட்டணி கணக்காகவோ திறக்கலாம்.

RDG கணக்குத் திறப்பது எப்படி..?

RDG கணக்குத் திறப்பது எப்படி..?

ரிசர்வ் வங்கியின் இப்புதிய முதலீட்டுத் திட்டத்தின் வாயிலாக முதலீடு செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால் https://www.rbiretaildirect.org.in/ அல்லது https://rbiretaildirect.in/#/rdg-account-registration இணையப் பக்கத்தில் சென்று ஆன்லைன் வாயிலாகவே கணக்கைத் திறந்து முதலீடு செய்யலாம். மொபைல் எண் மற்றும் ஈமெயின் பதிவு செய்யப்பட்ட பின்பு கணத்தின் விபரங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

அரசு பத்திரத்தில் முதலீடு

அரசு பத்திரத்தில் முதலீடு

கணக்கு திறந்த பின்பு இதே தளத்தில் வாயிலாக ஒருவர் அரசு பத்திரத்தை வாங்கவோ விற்கவோ முடியும். மேலும் புதிதாக வெளியிடப்படும் அரசு பத்திரத்தை ப்ரைமரி சந்தையிலும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அரசு பத்திரத்தை செக்கண்டரி சந்தையில் வாங்கவோ விற்கவோ செய்யலாம்.

பேமெண்ட் முறை

பேமெண்ட் முறை

தற்போது சந்தையில் இருக்கும் அனைத்துப் பேமெண்ட் முறையும் இந்தத் தளத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளதால் பேமெண்ட் சார்ந்த பிரச்சனை எதுவும் இருக்காது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to open RDG account and invest in RBI Retail Direct Scheme- Full Details

How to open RDG account and invest in RBI Retail Direct Scheme- Full Details ரீடைல் டைரெக்ட் ஸ்கீம் : அரசு பத்திரத்தில் முதலீடு செய்வது எப்படி.. முழு விபரம்..!!
Story first published: Friday, November 12, 2021, 16:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X