எதற்கு எவ்வளவு கட்டணம்.. எவ்வளவு குறைந்தபட்ச இருப்பு.. இதனையும் தெரிந்து கொள்ளுங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஞ்சலகத்திலும் இன்றைய காலகட்டத்தில் வங்கிகளை போலவே பெரும்பாலான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். அஞ்சலகத்திலும் வங்கிகளில் உள்ளதை போல கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

 

குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டியுள்ளது. அப்படி வைத்திருக்கவில்லையெனில் அதற்கு கணிசமான அபாரதமும் செலுத்த வேண்டியிருக்கும்.

எலான் மஸ்க்-ன் வருமான வரி எவ்வளவு தெரியுமா.. கேட்டா ஆடிப்போயிருவீங்க..!

எனினும் வங்கிகளோடு ஒப்பிடும்போது அஞ்சலகத்தில் கட்டணங்கள் குறைவு தான். சரி வாருங்கள் பார்க்கலாம். எதற்கு எவ்வளவு கட்டணம்? குறைந்தபட்ச இருப்பு எவ்வளவு என்று.

பல சேவைகளை செய்யும் அஞ்சலகம்

பல சேவைகளை செய்யும் அஞ்சலகம்

இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அஞ்சலகத் துறையானது, 150 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்கு வகித்து வருகின்றது. நாட்டில் 1,55,000 அஞ்சலகங்கள் உள்ளது. இது இந்தியா முழுவதும் தனது சேவையினை செய்து வருகின்றது. சர்வதேச அளவிலும் சில சேவைகளை பெற முடியும். அஞ்சலகத்தில் வங்கியை போன்றே வங்கி சேவைகள், சிறு சேமிப்பு திட்டங்கள் என பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது.

 குறைந்தபட்ச இருப்பு எவ்வளவு?

குறைந்தபட்ச இருப்பு எவ்வளவு?

நீங்கள் அஞ்சலகத்தில் ஏதேனும் சேமிப்பு திட்டத்தினை தொடங்குகிறீர்கள் எனில், நிச்சயம் இந்த கட்டணங்கள், குறைந்தபட்ச இருப்பு எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்கு - ரூ.500

தேசிய சேமிப்பு தொடர் வைப்பு நிதி திட்டம் - ரூ.100

மாதாந்திர வருமான திட்டம் - ரூ.1000

டைம் டெபாசிட் அக்கவுண்ட் - ரூ.1000

பொது வருங்கால வைப்பு நிதி - ரூ.500

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் - ரூ.250

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - ரூ.1000

தேசிய சேமிப்பு பத்திரம் - ரூ.1000

கிசான் விகாஸ் பத்திரம் - ரூ.1000

 சேவை கட்டணங்கள்
 

சேவை கட்டணங்கள்

பாஸ்புக் (Duplicate Passbook) - ரூ.50

அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட்- டெபாசிட் ரசீது - ஒன்றுக்கு ரூ.20

காணாமல் போன, திருடப்பட்ட அல்லது அழிந்த சான்றிதழ்களுக்கு பதிலாக புதிய பாஸ்புக் - ஒரு பதிவுக்கு ரூ.10

டிரான்ஸ்பர் அக்கவுண்ட் - ரூ.100

பிளெட்ஜிங் ஆப் அக்கவுண்ட் - ரூ.100

மாற்றம் அல்லது நாமினியை கேன்சல் செய்ய - ரூ.50

காசோலை ( Dishonour of cheque) - ரூ.100

சேமிப்பு கணக்கில் 10 லீப் வரை கட்டணங்கள் இல்லை, அதன் பிறகு ஒவ்வொரு லீப்புக்கும் 2 ரூபாய் கட்டணமாகும்.

கட்டணங்கள்

கட்டணங்கள்

மேற்கண்ட கட்டண விகிதங்கள் தற்போதைய நிலவரப்படி எடுக்கப்பட்டது. இது எதிர்காலத்தில் மாற்றம் காணலாம். ஆக நீங்கப் புதியதாக அஞ்சலக கணக்கு தொடங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Minimum balance and service charges for post office SA schemes

Minimum balance and service charges for post office SA schemes/எதற்கு எவ்வளவு கட்டணம்.. எவ்வளவு குறைந்தபட்ச இருப்பு.. இதனையும் தெரிந்து கொள்ளுங்க..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X