வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு அனைத்துத் தரப்பு மக்களும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை பணம். ஓய்வு பெற்ற பின்பும் மாத செலவிற்கும் நம்முடைய தனிப்பட்ட செலவுகளுக்குப் போதுமான நிதி இல்லாமல் இருப்பது ஓய்வு பெற்ற மக்கள் மத்தியில் இருக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது.
ஓய்வு காலத்திற்காகத் தேவைப்படும் பணத்தைப் பலர் முன்கூட்டியே முதலீடு செய்திருந்தாலும், இது பல்வேறு காரணங்களின் திட்டமிட்டப்பட்ட வருமானம் முழுமையாகக் கிடைக்காமல் போகக் கூடும்.
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஓய்வு காலத்திற்குத் தேவையான வருமானத்தைப் பெற ரிஸ்க் மிகவும் குறைவாக இருக்கும் 5 திட்டங்கள் பற்றிய இப்போது பார்க்கப்போகிறோம்.
மோடி திட்டத்தின் முதல் வெற்றி.. நோக்கியாவிற்கு நன்றி..!

மக்களின் கவலை
பணியில் இருந்து ஓய்வு பெறும் மக்களின் பொதுவான பயமே இந்தப் பணம் தான். குறிப்பாக ஓய்வு பெற்ற பின் மருத்துச் செலவுகள் பெரிய அளவில் அதிகரிக்கும், கூடுதல் வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறையும், இதனால் கவலைகளும் அதிகரிக்கும். இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட நமக்குத் தேவையானது ரிஸ்க் இல்லாத முதலீட்டுத் திட்டம் தான்.

பிபிஎப்
போஸ்ட் ஆபீஸ்-ல் வழங்கப்பட்டும் பிபிஎப் திட்டம் முதலீடுகள் ஓய்வு பெறுவோருக்கான சிறந்த முதலீடாக உள்ளது, நிலையான வட்டி வருமானம், ரிஸ்க் குறைவு, வரிச் சலுகை எனப் பல நன்மைகள் உள்ளது. தற்போதை நிலையில் பிபிஎப் திட்டத்திற்குச் சந்தையில் சுமார் 7.1 சதவீதம் வட்டி வருமானம் கிடைக்கிறது.
15 வருடத்தில் முதிர்வடையும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை 5 வருட காலத்திற்குத் தேவையைப் பொருத்து அதிகப்படியாக 50 சதவீத பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.

அரசு பத்திரங்கள்
அரசு பத்திரங்கள் மீதான முதலீடுகளில் ஆபத்து மிகவும் குறைவு என்பதால், ஓய்வு கால முதலீட்டுக்கு திட்டமிடும் அனைவரும் எவ்விதமான ஐயமும் இல்லாமல் அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாம். ஆர்பிஐ பாண்ட்ஸ், ஆர்ஈசி, ஐஆர்எப்சி, பிஎப்சி எனப் பல அரசு பத்திரங்கள் உள்ளது. வரிக்கு முந்தைய வருமானமாகச் சுமார் 7 சதவீதம் லாபத்தை அளிக்கிறது.

நேஷனல் பென்ஷன் பண்ட்
அரசு முதலீட்டு திட்டமான நேஷனல் பென்ஷன் பண்ட் திட்டத்தில் Tier 1 மற்றும் Tier 2 என இரு வகையான முதலீட்டுத் திட்டங்கள் உடன் அரசு பத்திரங்கள், பங்குச்சந்தை, கார்பரேட் முதலீடு என முதலீட்டு தேர்வுகளும் உண்டு. எனவே ஒய்வுகால முதலீட்டுக்காகத் திட்டமிடும் அனைவருக்கும் ரிஸ்க் மிகவும் குறைவாக இருக்கும் இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.

விபிஎப்
நீங்கள் பணியில் இருக்கும்போதே உங்கள் ஒய்வு காலத்திற்கான நிதியை விபிஎப் எனப்படும் Voluntary Provident Fund மூலம் சேமிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் வருடத்திற்குச் சுமார் 1.5 லட்சம் ரூபாய் அளவிலான தொகையை இதில் முதலீடு செய்து வருமான வரிச் சலுகை பெற முடியும.்
இத்திட்டத்தில் அதிகப்படியாக ஒருவரது மாத சம்பளத்தில் அடிப்படை சம்பளத்தை முழுவதுமாக விபிஎப் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்
வங்கிகளை விடவும் அதிக வட்டி வருமானத்தைத் தரும் குறுகிய காலப் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் கூடிய விரைவில் ஓய்வு பெறுவோருக்கு சிறந்த முதலீடாக இருக்கும்.
இந்தத் தீட்டத்தில் ஒருவர் 1 முதல் 5 வருட காலத்திற்குள் முதிர்வு காலத்தைத் தேர்வு செய்துக்கொள்ளலாம். இத்திட்டம் மீதான வட்டியை ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய அரசு நிர்ணயம் செய்யும். தற்போது 5 ஆண்டுப் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு அரசு 6.7 சதவீத வட்டி வருமானத்தை அளிக்கிறது.