SBI ATM Card வெச்சிருக்கீங்களா? இலவசமா பல லட்சத்துக்கு Personal Accident Insurance இருக்கு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தன் டெபிட் கார்ட் (ஏடிஎம் கார்ட்) வாடிக்கையாளர்களுக்கு, பல லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் கவர் கொடுக்கிறார்கள். இதை எஸ்பிஐ வங்கியின் வலைதளத்திலேயே பார்க்க முடிகிறது.

 

SBI வங்கியில், கொடுக்கப்படும் ஏடிஎம் கார்ட்களின் வகைகளைப் பொருத்து இன்சூரன்ஸ் கவர் மாறுபடுகிறது.

எந்த கார்ட்டுக்கு எவ்வளவு ரூபாய் இன்சூரன்ஸ் கவர் கொடுக்கிறார்கள்? என்ன வகையான பர்சனல் ஆக்ஸிடண்ட் இன்சூரன்ஸ்களைக் கொடுக்கிறார்கள் என்பதை எல்லாம் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

SBI ஏடிஎம் கார்ட் வகைகள்

SBI ஏடிஎம் கார்ட் வகைகள்

எஸ்பிஐ வங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு கீழ் காணும் பல வகைகளில் ஏடிஎம் கார்ட்களைக் கொடுக்கிறது.
SBI Gold (MasterCard/VISA)
SBI Yuva (VISA)
SBI Platinum (MasterCard/VISA)
SBI Pride (Business Debit) (MasterCard/VISA)
SBI Premium (Business Debit)(MasterCard/VISA)
SBI VISA Signature Debit Card.

இரண்டு வகையான இன்சூரன்ஸ்

இரண்டு வகையான இன்சூரன்ஸ்

மேலே சொன்ன ஏடிஎம் கார்ட்களின் வகைகளைப் பொருத்து
1. Personal Accident Insurance Non Air (Death Only)
2. Personal Air Accident Insurance
(Death Only) என இரண்டு வகை இன்சூரன்ஸைக் கொடுக்கிறார்கள். இந்த இரண்டு வகை இன்சூரன்ஸையும் கொஞ்சம் விரிவாகப் பார்த்து விடுவோம். அதற்கு முன் எந்த வகை கார்டுகளுக்கு எவ்வளவு இன்சூரன்ஸ் கொடுக்கிறார்கள் என்பதையும் பார்த்துவிடுவோம்.

எந்த கார்டுக்கு எவ்வளவு Personal Accident Insurance Non Air  (Death Only) கவர்
 

எந்த கார்டுக்கு எவ்வளவு Personal Accident Insurance Non Air (Death Only) கவர்

SBI Gold (MasterCard/VISA) 2,00,000/-
SBI Yuva (VISA) 2,00,000/-
SBI Platinum (MasterCard/VISA) 5,00,000/-
SBI Pride (Business Debit) (MasterCard/VISA) 2,00,000/-
SBI Premium (Business Debit)(MasterCard/VISA) 5,00,000/-
SBI VISA Signature Debit Card 10,00,000/-
என லட்சக் கணக்கில் இன்சூரன்ஸ் கவரை இலவசமாகக் கொடுப்பதாகச் சொல்கிறது எஸ்பிஐ வலைதளம்.

எந்த கார்டுக்கு எவ்வளவு Personal Air Accident Insurance (Death Only) கவர்

எந்த கார்டுக்கு எவ்வளவு Personal Air Accident Insurance (Death Only) கவர்

SBI Gold (MasterCard/VISA) 4,00,000/-
SBI Yuva (VISA) 4,00,000/-
SBI Platinum (MasterCard/VISA) 10,00,000/-
SBI Pride (Business Debit) (MasterCard/VISA) 4,00,000/-
SBI Premium (Business Debit)(MasterCard/VISA) 10,00,000/-
SBI VISA Signature Debit Card 20,00,000/-
என கணக்கு சொல்கிறது எஸ்பிஐ.

1. Personal Accident Insurance Non Air  (Death Only)

1. Personal Accident Insurance Non Air (Death Only)

எஸ்பிஐ ஏடிஎம் கார்ட் வைத்திருப்பவர்கள், வான் விபத்து (Air Accident) தவிர, மற்ற விபத்துக்களால் உயிர் பறி போனால் இந்த பாலிசியின் கீழ், கார்ட் வகையைப் பொருத்து, மேலே சொல்லி இருக்கும் தொகைக்கு க்ளெய்ம் கோரலாம். விபத்து நடப்பதற்கு 90 நாட்களுக்குள், எஸ்பிஐ ஏடிஎம் கார்ட் வைத்திருப்பவர்கள், ATM, PoS, eCom என ஏதாவது ஒன்றின் வழியாக பணப் பரிமாற்றம் செய்து இருக்க வேண்டும் என்கிறது எஸ்பிஐ.

2.  Personal Air Accident Insurance (Death Only)

2. Personal Air Accident Insurance (Death Only)

எஸ்பிஐ ஏடிஎம் கார்ட் வைத்திருப்பவர்கள், வான் விபத்தில் இறந்தால் மட்டுமே இந்த பாலிசியில் க்ளெய்ம் கோர முடியும். இந்த பாலிசியின் கீழ், மேலே சொல்லி இருக்கும் தொகைக்கு க்ளெய்ம் கோரலாம். விபத்து நடப்பதற்கு 90 நாட்களுக்குள், எஸ்பிஐ ஏடிஎம் கார்ட் வைத்திருப்பவர்கள், ATM, PoS, eCom என ஏதாவது ஒன்றின் வழியாக பணப் பரிமாற்றம் அல்லது பணம் அல்லாத பரிமாற்றம் செய்து இருக்க வேண்டும்.

2.1 விமான டிக்கெட்

2.1 விமான டிக்கெட்

அதோடு, எந்த விமான விபத்து ஏற்பட்டு, எஸ்பிஐ டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள் இறந்து போனாரோ, அந்த பயணத்துக்கான விமான டிக்கெட்களை, இந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிம் கார்ட் வழியாக பணம் செலுத்தி, வாங்கி இருக்க வேண்டும் என்கிறது எஸ்பிஐ வலைதளம்.

கவனிக்க வேண்டிய விஷயம்

கவனிக்க வேண்டிய விஷயம்

எஸ்பிஐ தன் வலைதளத்திலேயே "Complimentary Insurance Covers Available On SBI Debit Cards" என மொட்டையாகத் தான் போட்டு இருக்கிறார்கள். இந்த இன்சூரன்ஸ் திட்டம் எல்லோருக்கும் தன்னிச்சையாக பொருந்துமா? அல்லது இந்த இன்சூரன்ஸ் திட்டங்களைப் பெற ஏதாவது தனியாக எழுதிக் கொடுக்க வேண்டுமா அல்லது ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதே குறிப்பிட வேண்டுமா என, எஸ்பிஐ வலைதளத்தில் தெளிவுபடுத்தவில்லை. எனவே இந்த இன்சூரன்ஸ் தொடர்பாக, உங்கள் எஸ்பிஐ வங்கிக் கிளைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI ATM cardholders are having free Personal Accident insurance cover in lakhs

The State Bank of India ATM Cardholders are having free Personal Accident Insurance Cover in lakhs according to their card type. SBI website has all the details regarding this insurance.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X