ஆன்லைனில் எப்படி மொபைல் எண்ணை அப்டேட் செய்வது.. இதோ எளிய வழிமுறைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் வங்கி சேவைகள் பலவும் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ள முடிகிறது. பரிவர்த்தனை மட்டும் அல்ல, வங்கிக் கணக்கில் ஏதேனும் திருத்தம் என்றால் கூட ஆன்லைனிலேயே செய்து கொள்ளும் வசதியும் வந்து விட்டது.

வங்கிக் கணக்கில் இன்றும், பலர் அடிக்கடி செய்யக்கூடிய திருத்தம் என்னவெனில், அது மொபைல் எண் மாற்றுதல் தான்.

முன்பெல்லாம் ஏதேனும் மாற்றம் எனில் வங்கிகளை தேடி, மணிக் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று அப்படியில்லை. இருந்த இடத்தில் இருந்தே பெரும்பாலான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்லைன் அப்டேட்

ஆன்லைன் அப்டேட்

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எஸ்பிஐயில் எப்படி எளிதாக ஆன்லைனில் மொபைல் நம்பரை அப்டேட் செய்வது என்பது தான். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, அதன் வாடிக்கையாளர்கள் மொபைல் எண், இமெயில் ஐடி உள்ளிட்ட பல சேவைகளை பெற்றுக் கொள்ளும் படி வழிமுறை செய்துள்ளது.

எப்படி அப்டேட் செய்யலாம்

எப்படி அப்டேட் செய்யலாம்

எஸ்பிஐயில் மொபைல் நம்பர் மற்றும் இமெயில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக வங்கிகளை நாடி வாடிக்கையாளர்கள் செல்வதை தவிர்க்க இந்த செயல்முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது மட்டும் அல்ல, ஆன்லைன், ஏடிஎம் கார்டு மூலமும் உங்களது வங்கிக் கணக்கோடு மொபைல் நம்பரை அப்டேட் செய்து கொள்ளலாம். உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, இதனை அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஆன்லைனில் எப்படி?

ஆன்லைனில் எப்படி?

இதற்காக நீங்கள் எஸ்பிஐயின் https://retail.onlinesbi.com/retail/login.htm என்ற இணையதளத்தில் சென்று உங்களது லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்யவும்.

அதில் profileல் சுய விவரங்கள் என்பதை கிளிக் செய்து, பாஸ்வேர்டினை கொடுத்து லாகின் செய்யவும்.

இதன் பிறகு உங்களது பெயர், இமெயில் ஐடி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.

அதில் change mobile number - domestic only என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். இது இன்னொரு பக்கத்தில் தொடங்கும்.

அதில் மொபைல் நம்பர் கொடுத்து கிளிக் செய்தால் மீண்டும் பதிவு செய்ய கேட்கும். மொபைல் நம்பரை கொடுத்த பிறகு கன்பார்ம் செய்யுங்கள். அதன்பிறகு சப்மிட் கொடுங்கள். உங்களது மொபைல் நம்பருக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும், அதனை கிளிக் செய்து வெரிபை செய்து கொள்ளலாம்.

எப்படி சரிபார்ப்பது?

எப்படி சரிபார்ப்பது?

இதற்கான நீங்கள் மீண்டும் உங்களது இணைய வங்கியினை லாகின் செய்து கொண்டு, profile sectionல், சுய விவரங்களை பார்க்கவும். இதன் மூலம் உங்களது மொபைல் எண் என்ன இருக்கிறது என்பதை பார்க்கவும். அங்கு உங்களது பழைய எண்ணுக்கு பதிலாக அப்டேட் ஆகிவிட்டதா என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI customers can change their register mobile number in online

SBI latest updates.. SBI customers can change their register mobile number in online
Story first published: Tuesday, May 18, 2021, 15:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X