வங்கி கணக்கை வேறு கிளைக்கு மாற்ற வேண்டுமா.. இனி இதையும் வீட்டில் இருந்தே செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளரா? அப்படி எனில் நிச்சயம் இது உங்களுக்கான செய்தி தான். ஏனெனில் இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில், லாக்டவுன் காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

 

பலரும் தங்களது வங்கிக் கணக்கினை நகரங்களில் தொடங்கியிருப்பர். ஆனால் நிலவி வரும் நிலையில் தற்போது தங்களது வங்கிக் கணக்கினை சொந்த ஊர்களுக்கு மாற்ற நினைக்கலாம்.

 7வது சம்பள கமிஷன்.. ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வருமா? 7வது சம்பள கமிஷன்.. ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வருமா?

முன்பெல்லாம் இது மிகப்பெரிய ஒரு வேலையாக இருந்தது. ஆனால் இன்று அப்படியில்லை. இருந்த இடத்தில் இருந்தே மாற்றிக் கொள்ளும் வசதி வந்து விட்டது. ஆக இதற்காக நீங்கள் வங்கி வங்கியாக அலைய வேண்டிய அவசியம் இல்லை. சரி வாருங்கள் பார்க்கலாம் எப்படி உங்களது எஸ்பிஐ வங்கிக் கணக்கினை ஒரு கிளையில் இருந்து வேறொரு கிளைக்கு மாற்றிக் கொள்வது என்று?

பரிவர்த்தனை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்

பரிவர்த்தனை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்

பொதுவாக நாம் இன்று ஏடிஎம், டிஜிட்டல் பேங்க் மூலமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். பணம் எடுப்பது டெபாசிட் செய்வது எனில் அதனை எங்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கு அப்பாற்பட்ட சேவைகளை தொடங்க வேண்டும் எனில், நிச்சயம் உங்களுக்கு வங்கிக் கணக்கு தேவை. குறிப்பாக கிரெடிட் கார்டு, லாக்கர் சேவை, லோன் வசதி என பலவும் பெற வங்கிக் கணக்கு என்பது அவசியமான ஒன்று.

ஆன்லைன் வசதி போதுமானது?

ஆன்லைன் வசதி போதுமானது?

அந்த வகையில் உங்களது எஸ்பிஐ வங்கிக் கிளையை வேறு கிளைக்கு மாற்றுவது மிக எளிது. இதற்காக நீங்கள் வங்கிக்கு எல்லாம் அலைய வேண்டியதில்லை. மாறாக உங்கள் வீட்டில் இருந்தே செய்து கொள்ளலாம். இதற்காக உங்களிடம் ஆன்லைன் வசதி இருந்தாலே போதுமானது.

டிஜிட்டல் சேவையை பயன்படுத்துங்கள்
 

டிஜிட்டல் சேவையை பயன்படுத்துங்கள்

தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் என்பது மிக மோசமாக பரவி வரும் நிலையில், மக்கள் அதிகம் வங்கிக்கு செல்ல வேண்டாம். முடிந்த அளவு டிஜிட்டல் சேவையை பயன்படுத்தலாம் என வங்கிகள் கூறுகின்றன. அந்த வகையில் எஸ்பிஐ ஒரு வங்கிக் கணக்கினை ஒரு கிளையில் இருந்து, ஆன்லைனிலேயே மற்றொரு கிளைக்கு மாற்றிக் கொள்ளும் அம்சத்தினை கொண்டுள்ளது.

ஆப் மூலம் மாற்றம் செய்யலாம்

ஆப் மூலம் மாற்றம் செய்யலாம்

இதற்காக நீங்கள் எஸ்பிஐ-யின் மிக பிரபலமான செயலியான யோனோ ஆப், யோனோ லைட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது ஆன்லைன் எஸ்பிஐ-யையும் பயன்படுத்தலாம். இதன் மூலம் பாதுகாப்பாக உங்கள் வீட்டில் இருந்தே, உங்களுக்கு விருப்பப்பட்ட வங்கிக் கிளைக்கு, உங்களது எஸ்பிஐ சேமிப்பு கணக்கினை மாற்றிக் கொள்ளலாம்.

எப்படி மாற்றம் செய்வது?

எப்படி மாற்றம் செய்வது?

இதற்காக நீங்கள் எஸ்பிஐயின் https://www.onlinesbi.com/ இணையதளத்திற்கு சென்று, லாகின் செய்து கொள்ளுங்கள்.

அதில் மெனு பாரின் E-services என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

இதன் பிறகு Transfer the savings account என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

உங்களது வங்கிக் கோடு மற்றும் டிரான்ஸ்பர் செய்ய நினைக்கும் கிளையின் கோடு இரண்டையும் கொடுக்க வேண்டியிருக்கும். அதனை கொடுத்த பிறகு read and accept என்ற ஆப்சனை கிளிக் செய்து சப்மிட் கொடுக்கவும்.

கன்பார்ம் செய்யும் முன்னர் நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியா என ஒரு முறை பார்த்துக் கொடுக்கவும். கன்பார்ம் கொடுத்தவுடன் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும்.

ஓடிபியை கொடுத்து, கன்பார்ம் என்பதை கிளிக் செய்யவும்.

இதன் பிறகு கன்பர்மேஷன் மேசேஜ் ஒன்று உங்களுக்கு ஸ்கீரினில் வரும். இதே போல யோனோ ஆப், யோனோ லைட் மூலமாகவும் தேவையான விவரங்களைக் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI savings account: Now very easy to transfer your account without visiting bank

SBI latest updates.. SBI savings account: Now very easy to transfer your account without visiting bank
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X