2020-21ஆம் நிதியாண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வருமான வரி, வரிச் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றைத் தொடர்பாகப் பல முக்கியப் பணிகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
ஏற்கனவே பலர் வருமான வரியைச் சேமிக்க முக்கியமான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யத் தயாராகி இருப்பீர்கள். இதேவேளையில் பலர் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்தாமல் இருப்பீர்கள் அதை உடனே செலுத்தி விடுங்கள்.

வருமான வரி தாக்குதல்
2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை, திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 31. இதை இதுநாள் வரையில் செய்யத் தவறியவர்கள் கட்டாயம் உடனடியாகச் செய்தாக வேண்டும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் அபராதத்துடன் மார்ச் 31 வரையில் செலுத்த முடியும்.

முன்கூட்டிய வரி
வருடத்திற்கு 10000 ரூபாய்க்கு அதிகமான வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் அட்வான்ஸ் டாக்ஸ் எனப்படும் முன்கூட்டிய வரியை 4 பகுதிகளாகச் செலுத்த வேண்டும். இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதிக்குள் 2020-21 நிதியாண்டுக்கான 4வது பகுதியைச் செலுத்த வேண்டும்.

வருமான வரிச் சேமிப்பு
80சி பிரிவில் வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரிச் சலுகை பெற முடியும். எனவை மார்ச் 31ஆம் தேதிக்குள் இப்பிரிவு சலுகையை முழுமையாகப் பெற வேண்டுமாயின் வரியைச் சேமிக்க மார்ச் 31ஆம் தேதிக்குள் முதலீடு செய்துகொள்ளுங்கள் இல்லையெனில் வருமான வரியாகப் பெரும் பகுதி தொகையை அரசு செலுத்த வேண்டி வரும்.

ஆதார் மற்றும் பான் இணைப்பு
மத்திய அரசு ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கப் பல முறை கால நீட்டிப்பு செய்துள்ள நிலையில், ஆதார் மற்றும் பான் எண்-ஐ இணைக்க மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை இணைக்காவிடில் பான் எண் பயன்படுத்த முடியாமல் போகும் நிலை உருவாகும் எனத் தெரிகிறது.
இதேபோல் Vivad Se Vishwas அறிக்கையைத் தாக்கல் செய்ய மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.