உங்கள் பிஃஎப் கணக்கிற்கான வட்டி வரவில்லையா? புகார் அளிப்பது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிஎப் கணக்கில் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அதற்கான வட்டி விகிதம் அளிக்கப்படும். சில சமயங்களில் சில காரணங்களுக்காக தாமதமாகவும் வழங்கப்படும்.

 

பிஃஎப் கணக்கில் இந்தியாவில் கோடி கணக்கானவர்கள் உள்ளதால் சில சமயங்களில் அதற்கான வட்டி வழங்கப்படாமல் போக வாய்ப்புள்ளது.

சில சமயங்களில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் பிஎப் கணக்கில் பணத்தைச் செலுத்தாமல் விட்டுவிடவும் வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் எப்படி பிஃஎப் கணக்கில் உள்ள இருப்பை சரி பார்ப்பது மற்றும் புகார்கள் அளிப்பது என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம்.. EPFO முக்கிய முடிவு..!பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வருமானம்.. EPFO முக்கிய முடிவு..!

பிஃஎப் பேலன்சை ஆன்லைனில் செக் செய்வது எப்படி?

பிஃஎப் பேலன்சை ஆன்லைனில் செக் செய்வது எப்படி?

Unified portal போர்டலுக்கு பதிலாக, இப்போது தொழிலாளர்கள் மற்றொரு இணையதளத்திலும் அணுக முடியும். தொழிலாளர்களின் பாஸ்புத்தகம் www.epfindia.gov.in என்ற இணையத்திலும் இருக்கும். இந்த இணையதளத்தில் our services என்ற லிங்கினை கிளிக் செய்து, பின்பு, for employees என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து member passbook என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அங்கு உங்களது யுஏஎன் நம்பரை பதிவு செய்து, பாஸ்வேர்டையும் கொடுத்து லாக் இன் செய்து கொள்ள முடியும். பின்பு இங்கு உங்களது பிஃஎப் கணக்கு இருப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற முடியும்.

 Umang செயலி மூலம் பிஎப் கணக்கு பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

Umang செயலி மூலம் பிஎப் கணக்கு பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

ஊழியர்கள் தங்களது பிஎப் கணக்கு இருப்பை மொபைல் மூலமாக பார்த்துக் கொள்ள, Umang app ஆப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். அரசின் பல்வேறு சேவைகளுக்காக வழங்கப்பட்ட இந்த உமாங் ஆப் மூலம் ஒருவர் EPF பாஸ் புத்தகத்தினையும் பெற முடியும். இதன் மூலம் உங்களது இருப்பினையும் தெரிந்து கொள்ள முடியும்.

எஸ்எம்எஸ் மூலம் பிஎப் கணக்கு பேலன்ஸ் செக் செய்வது எப்படி?
 

எஸ்எம்எஸ் மூலம் பிஎப் கணக்கு பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

உங்களது பிஎப் கணக்கு இருப்பினை தெரிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள் இந்த மொபைல் எண்ணிற்கு மொழியினை தேர்வு செய்ய EPFOHO UAN ENG என்று அனுப்பலாம். அதாவது ENGLISH என்ற வார்த்தையில் ENG-யை மட்டும் எடுத்து அனுப்ப வேண்டும். இந்த எஸ்எம்எஸ் சேவையானது ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலும் உள்ளது.

மிஸ்டு கால் மூலம் பிஎப் கணக்கு பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

மிஸ்டு கால் மூலம் பிஎப் கணக்கு பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

நீங்கள் யுஏஎன் நம்பரில் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு, மிஸ்டு கால் கொடுத்தும் தெரிந்து கொள்ளலாம். இதிலும் உங்களது யுஏஎன் எண், வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சேவையினை பெறுவதற்கு, செலவும் அதிகம் இல்லை.

புகார்

புகார்

ஒருவேலை மேலே கூறியுள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி உங்கள் பிஎப் கணக்கு இருப்பை செக் செய்யும் போது அதில் வட்டி வழங்கப்படவில்லை, உங்களது நிறுவனம் சரியாக பணத்தை கணக்கில் இருப்பு வைக்கவில்லை என்றால் www.epfigms.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம். அதன் பிறகு Register Grievance என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு புதிய பக்கம் உங்கள் முன் திறக்கும். உங்களுக்கு PF உறுப்பினர், EPF ஓய்வூதியம் பெறுபவர் அல்லது வேலை வழங்குபவர் போன்ற பல விருப்பங்கள் இருக்கும். இவற்றில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் PF உறுப்பினர் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் UAN எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்.

குறியீட்டை உள்ளிட்ட பிறகு, விவரங்களைப் பெறு என்பதைக் கிளிக் செய்க, அதன் பிறகு உங்கள் தனிப்பட்ட விவரங்களைக் காண்பீர்கள். அதன் பிறகு Get OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். OTP உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சலுக்கு வரும், அதன் பிறகு OTP ஐ உள்ளிடவும், அதன் பிறகு தனிப்பட்ட விவரங்களை உள்ளிட வேண்டும், இப்போது PF எண்ணை உள்ளிடவும். அதன் பிறகு நீங்கள் ஒரு பாப் அப் விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் புகாரை பதிவு செய்வது குறித்து. அதன் பிறகு நீங்கள் மீதமுள்ள தகவல்கள் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

நீங்கள் பணியாளராக இருந்தால்: employmentfeedback@epfindia.gov.in. நீங்கள் ஒரு வேலையளிப்பவராக இருந்தால்: employerfeedback@epfindia.gov.in. கட்டணமில்லா எண்: 1800118005 என்ற எண்ணிலும் நீங்கள் அழைக்கலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Where can I complain about PF interest not credited?

Where can I complain about PF interest not credited? | உங்கள் பிஎப் கணக்கிற்கான வட்டி வரவில்லையா? புகார் அளிப்பது எப்படி?
Story first published: Tuesday, September 20, 2022, 9:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X