5 வருடத்தில் 10 மல்டிபேக்கர் பங்குகள்.. 29 வயதான ஐஐடி மாணவர் சாதித்தது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் பங்கு சந்தை பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது. பங்கு சந்தைகளில் முதலீடுகளும் அதிகரித்து அதிகரித்து வருகின்றனர்.

அப்படி கடந்த 5 ஆண்டுகளில் 10 மல்டிபேக்கர் பங்குகளை கண்டறிந்த இளம் முதலீட்டாளரான நிகில் கங்கில், அதனை எப்படி தேர்தெடுத்தார் என்பது உள்ளிட்ட தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் சவாக்கா பிசினஸ் மெஷின்ஸ், மேக்மணி ஃபின்செம், டாடா பவர், டாடா மோட்டார்ஸ், ஜிஎன்ஏ ஆக்சில்ஸ், ராம்கோ சிஸ்டம்ஸ், நவா, மராத்தான் நெக்ஸ்ட் ஜென் ரியாலிட்டி, தேஜாஸ் நெட்வொர்க்குகள், ஃபீம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் அடங்கும்.

பங்குச்சந்தை 2 நகரங்களின் ஆதிக்கம் வேற லெவல்.. சென்னை ரொம்ப மோசம்..! பங்குச்சந்தை 2 நகரங்களின் ஆதிக்கம் வேற லெவல்.. சென்னை ரொம்ப மோசம்..!

பல மடங்கு லாபம்

பல மடங்கு லாபம்

இந்த பட்டியலில் சவாக்கா பிசினஸ் மெஷின்ஸ் 68 மடங்கு லாபமும், மேக்மணி ஃபின்செம் 15 மடங்கும், டாடா பவர் 6.5 மடங்கும், டாடா மோட்டார்ஸ் 6.5 மடங்கும், ஜிஎன்ஏ ஆக்சில்ஸ் 5.8 மடங்கும், ராம்கோ சிஸ்டம்ஸ் 5 மடங்கும், நவா 4.7 மடங்கும், மராத்தான் நெக்ஸ்ட் ஜென் ரியாலிட்டி 4.7 மடங்கும், தேஜாஸ் நெட்வொர்க்குகள் 4.5 மடங்கும், ஃபீம் இண்டஸ்ட்ரீஸ் 4 மடங்கும் லாபம் கொடுத்துள்ளதாக கங்கில் பட்டியலிட்டுள்ளார்.

தற்போதும் தன் வசம் உள்ள பங்குகள்

தற்போதும் தன் வசம் உள்ள பங்குகள்

தன்னிடம் இன்னும் ராம்கோ சிஸ்டம், மராத்தான் நெக்ஸ்ட்ஜென் டியாலிட்டி, தேஜாஸ் நெட்வொர்க்குகள், பீம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட சில பங்குகள் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது தகவலுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனை வாங்க பரிந்துரைக்கவில்லை. ஒருவர் தன்னிடம் உள்ள பங்குகளை வாங்குவதற்கு முன், ஒருவர் தனது நிதி ஆலோசகர்களை அணுக வேண்டும் எனவும் விளக்கமளித்துள்ளார்.

எனது விருப்பம்

எனது விருப்பம்

முதலீடு குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ள கங்கில், குறைந்த மதிப்பில் அதிக லாபத்தினை பெறுவதை நான் விரும்புகிறேன். ஒவ்வொரு துறையிலும் ஏற்ற இறக்கம் என்பது இருக்கும். ஆக அதனை தெரிந்து கொள்ள வேண்டும். அதனை தெரிந்து கொண்டால் வெற்றி கொள்ளலாம். ஆக ஒரு பங்கினை வாங்கும் முன்பு சரியான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்கிறார்.

சுய தரவரிசை

சுய தரவரிசை

மேலும் துறை வாரியாக பங்குகளை பிரிக்கும் கங்கில் , ஒரு சுய தரவரிசை முறையை உருவாக்கி வைத்துள்ளார். பங்குகளை அதன் தரம் மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வு செய்வேன். அது எனக்கு சரியாக கைகொடுக்கிறது என கூறுகின்றார்.

தெரிந்து கொள்ள வேண்டியவை அதிகம்

தெரிந்து கொள்ள வேண்டியவை அதிகம்

பங்குகள் எப்போது ஓவர் வேல்யூவில் இருப்பதாக உணர்ந்தால் அதனை விற்பனை செய்கிறேன். கடன் அதிகமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறேன் என கூறும் கங்கில், பங்குகள் எந்த துறையை சார்ந்தவை என பலவற்றையும் கவனிப்பதாக தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இந்த இளம் முதலீட்டாளரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் எனலாம். இது பிசினஸ் டுடேவில் வெளியான செய்தி அடிப்படையில் வெளியிடப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6700% returns! How this young investor spotted 10 multibaggers

6700% returns! How this young investor spotted 10 multibaggers/5 வருடத்தில் 10 மல்டிபேக்கர் பங்குகள்.. 29 வயதான ஐஐடியன் சாதித்தது எப்படி?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X