கொரோனா பிடியில் இருந்து இந்தியா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வகும் நிலையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தையை ஊக்குவிக்கவிக்கவும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரவும் மோடி தலைமையிலான அரசு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டம் குறித்து மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து இருந்து வரும் நிலையில், இந்தத் திட்டம் மூலம் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை இல்லாமல் மே12 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறிவிப்புக்குப் பின் அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.
இது பங்குச்சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 12
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மே12 நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகப் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களைப் பல கட்டங்களாக அறிவித்தார். இந்த அறிவிப்புகள் ஓன்றிணைத்து பார்த்தால் கிட்டதட்ட ஒரு இடைக்காலப் பட்ஜெட் அறிக்கை என்று கூறினால் மறுக்க முடியாது.
முதலீட்டாளர்கள்
நிர்மலா சீதாராமன் தலைமையிலான மத்திய நிதியமைச்சகம் பல ஆய்வுகளைச் செய்து அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்காத காரணத்தால் மே 12க்குப் பின் சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து இந்திய சந்தையில் வெளியேற்றியுள்ளனர்.
நோமுரா
மே 12 ஆம் தேதி துவங்கி 5 நாட்கள் படிப்படியாகப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது, இந்த 5 நாட்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் நம்பிக்கையும் (silver bullets) காணப்படவில்லை எனக் குளோபல் முதலீட்டு வங்கியான நோமுரா மே 17ஆம் தேதி அறிவித்துள்ளது.
ஜிடிபி சரிவு
மத்திய அரசு தற்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறுகிய கால வளர்ச்சி திட்டங்களாக இல்லை. இதனால் 2020 மார்ச் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் மேசமான நிலையைச் சந்திக்கும். இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதம் வரையில் குறையும் என்று அமெரிக்க முதலீட்டுச் சந்தை நிறுவனமான கோல்டுமேன் சாச்சீஸ் நிறுவனமும் தெரிவித்துள்ளது.
9600 கோடி ரூபாய்
மே 7ஆம் தேதி ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனங்கள் மீது அதிகளவில் வர்த்தகம் நடந்தாலும் கடந்த 10 நாட்களில் இந்திய சந்தையில் இருந்து அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் சுமார் 9600 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர். இதில் 90 சதவீதம் மே 12 அறிவிப்புக்குப் பின்பு நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications