இந்திய பங்கு சந்தையானது கடந்த வாரத்தில் நல்ல ஏற்றத்தினை கண்டு முடிவடைந்தது. இதற்கிடையில் சந்தை மதிப்பின் அடிப்படையில் முதல் 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் மட்டும் 2.12 லட்சம் கோடி ரூபாய் லாபத்தினை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு ஜாக்பாட் ஆன வாரம் என்றே கூறலாம்.
அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த நிறுவனம்? இந்த 9 நிறுவனங்களில் நீங்கள் ஏதேனும் பங்கினை வாங்கியிருக்கீங்களா? அப்படி வாங்கியிருந்தால் நீங்கள் தான் இந்த வாரம் பணக்காரர்கள்.

டாப் கெயினர்கள் யார்?
கடந்த வாரத்தில் லாபம் கொடுத்த பங்குகளில் ஹெச் டி எஃப் சி வங்கி அதனை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனங்கள் டாப் கெயினர்களாக உள்ளனர். கடந்த வாரம் பி எஸ் இ சென்செக்ஸ் 1.3% அதிகரித்து, 844.68 புள்ளிகளாக காணப்படுகின்றன. இதுவும் சந்தையானது கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று குரு நானக் ஜெயந்தி என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

ஹெச்டிஎஃப்சி வங்கி
டாப் 10 நிறுவனங்களில் ஒரே ஒரு நிறுவனமாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் மட்டும் இழப்பினை கண்டுள்ளது. மீதமுள்ள 9 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 2,12,478.82 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
இதில் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறையை சேர்ந்த வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் 63,462.58 கோடி ரூபாய் அதிகரித்து, 8,97,980.25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் இதன் பங்கு விலையானது. கடந்த வாரத்தின் இறுதியில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 5.67% அதிகரித்து, 1611.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

டிசிஎஸ்
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 36,517.34 கோடி ரூபாய் அதிகரித்து, 12,13,378.03 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தின் இறுதியில் டிசிஎஸ் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 3.44% அதிகரித்து, 3315.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹெச் டி எஃப் சி
இதே நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான ஹெச் டி எஃப் சி-யின் சந்தை மதிப்பானது 29,422.52 கோடி ரூபாய் அதிகரித்து, 4,81,818.83 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தின் இறுதியில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 5.89% அதிகரித்து, 2651.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ்
இதுவே முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 26,317.30 கோடி ரூபாய அதிகரித்து, 17,80,206.22 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தின் இறுதியில் ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ் ன் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.31% அதிகரித்து, 2631.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ்
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 23,626.96 கோடி ரூபாய் அதிகரித்து, 6,60,650.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தின் இறுதியில் இன்ஃபோசிஸ் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 4.54% அதிகரித்து, 1570.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ்
அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 20,103.92 கோடி ரூபாய் அதிகரித்து, 4,56,992.26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தின் இறுதியில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.42% அதிகரித்து, 4008.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மதிப்பானது 6559.59 கோடி ரூபாய் அதிகரித்து, 5,36,458.41 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தின் இறுதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.73% குறைந்து, 601.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பார்தி ஏர்டெல்
இதே பார்தி ஏர்டெல்லின் சந்தை மதிப்பானது, 5591.05 கோடி ரூபாய் அதிகரித்து, 4,59,773.28 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தின் இறுதியில் பார்தி ஏர்டெல்-ன் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.14% அதிகரித்து, 826.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹிந்துதாஸ் யூனிலீவர் லிமிட்டெட்
இந்த பட்டியலில் ஹிந்துதாஸ் யூனிலீவர் லிமிட்டெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 3912.07 கோடி ரூபாய் குறைந்து, 5,88,220.17 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த வாரத்தின் இறுதியில் பார்தி ஏர்டெல்-ன் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.42% குறைந்து, 2503.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

டாப் பங்குகள்?
எப்படியிருப்பினும் இந்த டாப் 10 பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ், டிசிஎஸ், ஹெச் டி எஃப் சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச் டி எஃப் சி, பார்தி ஏர்டெல் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.