அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச ஹோல்டிங் நிறுவனமான IHC அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், 3200 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீட்டில் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

Recommended Video

Adani VS Hindenburg | US-ல் நடந்த Balloon விபத்திற்கும்...Adani Shares சரிவிற்கும் என்ன தொடர்பு?

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் உரிமை பங்கு வெளியீடு மூலம் 20,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் இந்த எஃப் பி ஓ-வில் 16% பங்கினை, IHC நிறுவனம் பெற திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டில் அதானி குழுமத்தில் ஐ ஹெச் சியின் முதல் முதலீடாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமம்: ஹிண்டன்பர்க் மூலம் எல்ஐசி-க்கும் பிரச்சனை.. முதலீட்டாளர்கள் பெரும் கவலை..! அதானி குழுமம்: ஹிண்டன்பர்க் மூலம் எல்ஐசி-க்கும் பிரச்சனை.. முதலீட்டாளர்கள் பெரும் கவலை..!

சர்ச்சைகளுக்கு மத்தியில் FPO

சர்ச்சைகளுக்கு மத்தியில் FPO

IHC அறிவிப்பு இந்தியாவின் மிகப்பெரிய உரிமை பங்கு வெளியீடானது, அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க்கின் சர்ச்சைகளுக்கு மத்தியில் வந்துள்ளது. இந்த நிலையில் அதானி குழுமம் எங்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக வந்துள்ளது. இது எங்களின் உரிமை பங்கு வெளியீட்டில் பிரச்சனையை ஏற்படுத்தலாம் என அதானி குழுமம் தெரிவித்து இருந்தது.

 3% பங்குக்கு மட்டுமே  விண்ணப்பம்

3% பங்குக்கு மட்டுமே விண்ணப்பம்

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் எஃப்பிஓ மூலம் 2.5 பில்லியன் டாலர் முதலீட்டினை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் உரிமை பங்கு வெளீயீடாக இருக்கும் இந்த வெளியீட்டில், எஃப் பி ஓ மூலம் 13,98,516 பங்குகள் இரண்டாவது நாள் வரையில் பெற்றுள்ளது. இது மொத்த வெளியீடான 4,55,06,791 பங்குகளின் சலுகை அளவுகளில் வெறும் 3% ஆகும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

வரும் வாரத்தில் இந்த பங்கு வெளியீடானது முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்த எஃப்.பி.ஓ-வில் முழுமையான விண்ணப்பங்களை பெறுமா? என்பது பெரும் சந்தேகமாக வந்துள்ளது. இந்த எஃப்பிஓ-வில் சலுகையில் 90% ஏலங்களை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் ஆங்கர் முதலீட்டாளர்கள் மூலம் 5985 கோடி ரூபாய் நிதியினை திரட்டவுள்ளது.

தொடர்ந்து முதலீடு விரிவாக்கம்

தொடர்ந்து முதலீடு விரிவாக்கம்

நடப்பு ஆண்டில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட சந்தைகளில் கவனம் செலுத்தி, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தனது முதலீடுகளையும் தொடர்ந்து செய்து வருவதாக IHC தெரிவித்துள்ளது.

 அதானி குழுமம் மீது நம்பிக்கை உள்ளது

அதானி குழுமம் மீது நம்பிக்கை உள்ளது

அதானி குழுமத்தின் மீதான எங்கள் ஆர்வம், அதானி குழுமத்தின் மீதான எங்களின் நம்பிக்கையால் உந்தப்படுகின்றது. நீண்டகால கண்ணோட்டத்தில் வளர்ச்சிக்கான சாத்தியத்தை நாங்கள் அதானி குழுமத்தில் காண்கிறோம். எங்கள் பங்குதாரர்களுக்கு கூடுதல் மதிப்பைக் காண்கிறோம் என்று ஐ ஹெச் சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சையத் பாசார் ஷூப் தெரிவித்துள்ளார்.

நிகர மதிப்பு சரிவு

நிகர மதிப்பு சரிவு

ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் இந்த அறிவிப்பினால் முதலீட்டாளர்கள் மத்தியில், கெளதம் அதானியின் நிகர மதிப்பு 18% சரிவினைக் கண்டுள்ளது. போர்ப்ஸ் இதழின் படி உலக கோடீஸ்வரர்களின் நிகழ் நேர பட்டியலின் படி, அவர் பணக்காரர்களின் பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Abu Dhabi's IHC plans to invest Rs3200 crore in Adani Enterprises FPO

Abu Dhabi's IHC plans to invest Rs3200 crore in Adani Enterprises FPO
Story first published: Monday, January 30, 2023, 22:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X