வரலாற்று உச்சத்தில் கெளதம் அதானியின் நிறுவனம்.. அதானி கிரீன் எனர்ஜியின் வேற லெவல் பெர்பார்மன்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கெளதம் அதானியின் அதானி குழுமத்தில் உள்ள நிறுவனம் தான் அதானி கிரீன் எனர்ஜி.

இது அகமதாபாத்தினை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு லார்ஜ் கேப் நிறுவனமாகும்.

இது மின்சார துறையில் செயல்படும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 5% அதிகரித்து அதன் வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இந்திய சந்தைகள் தொடர்ந்து சரிவினை சந்தித்து வரும் நிலையில், இந்த பலவீனமான சந்தை போக்கில் இந்த நிறுவனம் 52 வார வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளதே ஏன்? அதானி கிரீன் எனர்ஜியின் துணை நிறுவனமாக, அதானி ரீனிவபிள் எனர்ஜி ஹோல்டிங் பிஃப்டீன் லிமிடெட் (Adani Renewable Energy Holding Fifteen Limited) நிறுவனம், இது சந்தையில் நிலவி வரும் பலவீனமான போக்குக்கு மத்தியிலும் 300 மெகாவாட் காற்றாலை திட்டத்திற்கான உத்தரவை பெற்றுள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை 5% ஏற்றம்

அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை 5% ஏற்றம்

ஆக இது இந்த நிறுவனத்தின் பங்கு விலையேற்றத்திற்கு ஊக்கத்தினை அளித்துள்ளது எனலாம். இதற்கிடையில் அதானி கிரீன் எனர்ஜியின் பங்கு விலையானது இன்று 5% அதிகரித்து. அப்பர் சர்கியூட் ஆகி 1251.05 ரூபாயாக காணப்படுகிறது. இது தான் இந்த நிறுவனத்தின் புதிய உச்ச விலையும் கூட. இதற்கிடையில் இதன் குறைந்தபட்ச விலையானது இன்று 1233.40 ரூபாயாகவும், இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 1191.50 ரூபாயாகவும் உள்ளது.

என்எஸ்இ-யில் என்ன நிலவரம்?

என்எஸ்இ-யில் என்ன நிலவரம்?

இந்த ஏற்றத்தில் 28000 பங்குகள் கைமாறியுள்ளன. இதே என் எஸ் எஸ்-யில் இந்த பங்கின் விலையானது 5% அதிகரித்து, 1252.20 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 1192.50 ரூபாயாகும். அதானி கிரீன் எனர்ஜி பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில், 1200 மெகாவாட் திறனுள்ள காற்றாலை அமைக்க SECI- ஆல் விடப்பட்ட டெண்டரில் வென்றுள்ளதாகவும், இதன் காலம் 25 வருடம் எனவும் கூறியுள்ளது.

அதானி கிரீன் எனர்ஜியின் மொத்த திறன்

அதானி கிரீன் எனர்ஜியின் மொத்த திறன்

இந்த டெண்டரின் மூலம் அதானி கிரீன் எனர்ஜியின் மொத்த புதுபிக்கதக்க திறன் இப்போது 15,165 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதில் 3,395 மெகா வாட் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதே 11,770 மெகாவாட் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வளர்சி குறித்து பேசிய அதானி கிரீன் எனர்ஜியின் எம்டி, வினீத் எஸ் ஜெயின், காற்றாலை எனர்ஜி எங்கள் வணிகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

தற்போதைய பங்கு சந்தை நிலவரம்

தற்போதைய பங்கு சந்தை நிலவரம்

இது எங்களது வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கிய பங்களிப்பை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள இந்த 300 மெகாவாட் திட்டம், பசுமையான எதிர்காலத்தினை நோக்கி நகர, சுற்றுசூழல் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகும். இதற்கிடையில் சென்செக்ஸ் 134.6 புள்ளிகள் குறைந்து, 49,723.64 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.4 புள்ளிகள் குறைந்து, 14,711.6 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani green share hits 52 week high on Monday

Adani latest updates.. Adani green share hits 52 week high on Monday
Story first published: Monday, March 22, 2021, 14:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X