கடுமையான சரிவு கண்ட அமெரிக்கா, இங்கிலாந்து பங்குச் சந்தைகள்.. இப்போது இந்தியாவுக்கும் பலத்த அடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இந்த வெள்ளிக் கிழமை ஒரு கருப்பு வெள்ளியாகத் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 

அந்த அளவுக்கு அடி பலமாக விழுந்து கொண்டு இருக்கிறது. இது இந்திய பங்குச் சந்தைகளுக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா..? என்று கேட்டால் இல்லை.

அப்படி என்றால், எந்த நாடுகளில் எல்லாம் இந்த பிரச்சனை இருக்கிறது. எங்கு எல்லாம் எவ்வளவு அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

கொரோனா பீதியில் சென்செக்ஸ் 2,458 புள்ளிகள் சரிவு.. ரூபாயும் படு வீழ்ச்சி..!

அமெரிக்க சந்தைகள்

அமெரிக்க சந்தைகள்

நேற்று மார்ச் 12, 2020, வியாழக் கிழமை அன்று அமெரிக்காவின் நாஸ்டாக் சுமாராக 750 புள்ளிகள் வீழ்ந்தது. இதை புள்ளிகளில் கணக்கிட்டால் இது 9.43 சதவிகிதம் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அமெரிக்காவின் எஸ் அண்ட் பி 500 இண்டெக்ஸ் பயங்கர சரிவைக் கண்டதால் எஸ் அண்ட் பி 500 இரண்டு முறை வர்த்தகம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தகக்து.

ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகள்

லண்டனின் எஃப் டி எஸ் இ 10.87 % சரிவு, பிரான்ஸின் சி ஏ சி 12.28 % சரிவு, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 12.24 % சரிவு என ஐரோப்பிய சந்தைகள் எல்லாமே படு பயங்கர சரிவில் நேற்று வர்த்தகமாகி நிறைவு அடைந்து இருக்கிறது. அவர்களே சரியும் போது ஆசிய சந்தைகளும் சரியத் தானே செய்யும்.

ஆசிய சந்தைகள்
 

ஆசிய சந்தைகள்

சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி 8.70 % சரிவு

ஜப்பானின் நிக்கி 5.67 % % சரிவு

சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் 4.99 % சரிவு

ஹாங்காங்கின் ஹேங்செங் 5.78 % சரிவு

தைவானின் தைவன வெயிடெட் 5.86 % சரிவு

தென் கொரியாவின் கோஸ்பி 5.66 % சரிவு

தாய்லாந்தின் எஸ் இ டி காம்போஸைட் 2.67 % சரிவு

இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 5.02 % சரிவு

சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 3.32 % சரிவு என பயங்கர சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

எதிரொலி

எதிரொலி

கொரோனா பயம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சுமாராக 74.40-ஐத் தொட்டு வர்த்தகமாவது, உலகச் சந்தைகள் சரிவது, யெஸ் பேங்க் பிரச்சனை என எல்லாம் ஒன்றும் சேர்ந்து நிதிய சந்தைகளில் எதிரொலித்துக் கொண்டு இருக்கின்றன. இதே நிலை நீடித்தால் இன்னும் கூட சென்செக்ஸ் சரியலாம். உலக சந்தைகளோடு, பொருளாதார காரணிகளும் தேறினால் தான், இந்திய சந்தைகளின் ஏற்றத்தைப் பற்றி யோசிக்க முடியும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

தற்போது மீண்டும் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் சென்செக்ஸ் சுமாராக 30,823 புள்ளிகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸின் சரிவு 3,300 புள்ளிகளில் இருந்து 1,954 புள்ளிகளாக குறைந்து இருக்கிறது. இன்று சென்செக்ஸ் எத்தனை புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடையுமோ தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America England France Germany markets fall drastically

The world important market like America England France Germany markets fall drastically around 7 - 12 percent in one day.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X