மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால் லாபம் குறைந்ததாம்.. ஏசியன் பெயின்ட்ஸ் கவலை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடந்த மார்ச்- 31 ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஏசியன் பெயின்ட்ஸ் நிகரலாபம் 487 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் 495 கோடி ரூபாயாக இருந்தது.

 

இதற்கு காரணம் மூலப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் சந்தைபடுத்துதலுக்கு ஆகும் அதிகளவு செலவு ஆகியவற்றால் இதன் லாபம் குறைந்துள்ளது என இந்த இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால் லாபம் குறைந்ததாம்.. ஏசியன் பெயின்ட்ஸ் கவலை

இதே கடந்த நிதியாண்டில் ஏசியன் பெயின்ட்ஸ்சின் வருவாய் 11.7% உயர்ந்து 5,018 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாம். இதே முந்தைய ஆண்டு இதே காலத்தில் 4,492 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.

பாதாளத்தில் பதுங்கிய Sensex..! பள்ளத்திலேயே அடிவாங்கிய Nifty..!

இதுவே கடந்த நான்காம் காலாண்டில் இந்தியாவின் அலங்கார வர்த்தக பிரிவு இரட்டை இலக்க அளவு வளர்ச்சியைப் பதிவு செய்ததுள்ளதாம். தொழில்சார் பூச்சுகள் பவுடர் மற்றும் பாதுகாப்பு பூச்சுகளிலும் நல்ல வளர்ச்சியைக் கண்டதாம்.

இதே கார் பிரிவில் ஏற்பட்ட மந்தநிலையின் விளைவாக வாகன பூச்சுகள் வளர்ச்சி லாபத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாம்.

எங்களின் சர்வதேச வர்த்தகத்தில் சில சவாலான வியாபார யுக்திகளையும் தாண்டி பாதித்தது. குறிப்பாக எகிப்து, எத்தியோப்பியா, வங்காளதேசம் மற்றும் இலங்கை ஆகியவற்றில் உள்ள முக்கிய சந்தைகளில் சில செயல்கள் மிகவும் பாதித்தது. எனினும் வீட்டு மேம்பாட்டுப் பிரிவில் சமையலறை மற்றும் குளியலறை தொழில்கள் நன்றாகவே வளர்ந்தன என்று கூறுகிறார் இந்த நிறுவனத்தின் தலைவர் கே.பி.எஸ். ஆனந்த். அதோடு ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் பங்குக்கு ரூ.7.65 டிவிடெண்டாகவும் அறிவித்துள்ளது.

இதே கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த செலவு 15.65 சதவிகிதம் உயர்ந்து ரூ. 4,340.64 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு இதே காலத்தில் 3,752.94 கோடியாக இருந்தது கவனிக்கதக்கது.

 

இதே பெயின்ட்ஸ் வணிகப் பிரிவில் இருந்து வருவாய் 4,899.09 கோடியாகவும், இதே வீட்டு மேம்பாட்டு பிரிவில் இருந்து 119.12 கோடியாக இருந்தது கவனிக்கதககது.

இதே இந்த நிறுவனம் 2018 - 2019 ல் 2,211.91 கோடி ரூபாய் நிகர இலாபம் ஈட்டியுள்ளது. இதுவே 2017 -2018ம் நிதியாண்டில் 2,097.52 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்றிருந்தது கவனிக்கதக்கது.

இதே கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ. 19,576.89 கோடியாகவும், இதே 2017 - 2018ல் 17,482.85 கோடியாக இருந்ததும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Asian Paints Q4 net profit lower to Rs.487crore

Asian Paints today reported dip in net profit for the quarter ended March 31, hurt by high raw material prices and higher marketing spends. SO Net profit dropped to Rs.487 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X