8ல் 7 பங்குகள் வீழ்ச்சி.. 4 நாளில் படு மோசம்.. முதலீட்டாளர்கள் பெரும் கவலை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஈக்விட்டி பெஞ்ச்மார்க் சந்தையானது தொடர்ந்து 4வது நாளாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. இதில் பிஎஸ்இ சென்செக்ஸ் 981 புள்ளிகள் அல்லது 1.61% சரிவினைக் கண்டு, 59,845 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே என்எஸ்இ நிஃப்டி 321 புள்ளிகள் அல்லது 1.77% குறைந்து, 17,807 புள்ளிகளாக முடிவடைந்தது.

 

இன்று 8ல் 7 நிறுவனங்கள் சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளன. இதற்கிடையில் பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, 8.42 லட்சம் கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.

ஐடி நிறுவனங்களில் வரலாறு காணாத சரிவு.. இனி ஊழியர்களின் நிலைமை எப்படியிருக்கும்? ஐடி நிறுவனங்களில் வரலாறு காணாத சரிவு.. இனி ஊழியர்களின் நிலைமை எப்படியிருக்கும்?

ரூ.8.5 லட்சம் கோடி இழப்பு

ரூ.8.5 லட்சம் கோடி இழப்பு

முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு பி எஸ் இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 8.42 லட்சம் கோடி ரூபாய் குறைந்து, 272.12 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த அமர்வில் 280.55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்த சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி எஃப்.சி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிவினைக் கண்டுள்ளன.

294 பங்குகள் 52 வார சரிவு

294 பங்குகள் 52 வார சரிவு

294 பங்குகள் 52 வார சரிவினைக் கண்டுள்ளன. பி.எஸ்.இ-யில் உள்ள கிளாண்ட் பார்மா, இண்டிகோ பெயிண்ட்ஸ், மேப் மை இந்தியா, நய்கா, குவெஸ் கார்ப், ரிலாக்ஸோ உள்ளிட்ட பங்குகள், அதன் 1 வருட சரிவினைக் எட்டியுள்ளன.

8ல் 7 பங்குகள் சரிவு
 

8ல் 7 பங்குகள் சரிவு

இன்றைய பங்கு சந்தை அமர்வில் பி எஸ் இ-யில் உள்ள எட்டு பங்குகளில் 7 பங்குகள் சரிவில் காணப்படுகின்றன. 3655 பங்குகளில், 3115 பங்குகள் சரிவிலேயே முடிவடைந்துள்ளன. 472 பங்குகள் ஏற்றத்திலும், 68 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

10 பிஎஸ்இ பங்குகள் 10% கீழாக சரிவு

10 பிஎஸ்இ பங்குகள் 10% கீழாக சரிவு

பி.எஸ்.இ 500 பங்குகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கல்யாண் ஜூவல்லர்ஸ், இர்கான், மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ், இன்ஃபீம் அவென்யூஸ், யூனியன் வங்கி, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் வங்கி, ஈஸி ட்ரிப் பிளானர்ஸ், ஐஆர்எஃப்சி மற்றும் ஜேகே பேப்பர் போன்ற பி எஸ் இ 500 பங்குகள் 10% அல்லது அதற்கு மேலாக சரிவினைக் கண்டன.

வங்கிகள் & எனர்ஜி பங்குகள்

வங்கிகள் & எனர்ஜி பங்குகள்

சென்செக்ஸ் -ல் உள்ள முக்கிய நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி வங்கி, ஹெச் டி எஃப் சி, எல் & டி, ஐடிசி, டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ், பஜாஜ் பின்செர்வ், டாடா மோட்டார்ஸ், மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. இதில் இன்ஃபோசிஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் 300 புள்ளிகளுக்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளன.

FII - DII தரவுகள்

FII - DII தரவுகள்

என் எஸ் இ தரவுகளின் படி, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 706.84 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்துள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 3398.98 கோடி ரூபாய் முதலீட்டினை இழந்துள்ளனர்.

பிளாக் பிரைடே

பிளாக் பிரைடே

பிளாக் பிரைடே நாளான இன்று, இந்திய சந்தையானது செல்லிங் அழுத்தத்தில் காணப்படுகின்றது. இன்று சந்தையில் மீண்டும் செல்லிங் அழுத்தம் தொடங்கியுள்ளது. அமெரிக்க சந்தைகள் கடந்த அமர்வில் கடந்த அமர்வில் சரிவினைக் கண்டுள்ள நிலையில், ரெசசன் அச்சமும் இருந்து வருகின்றது. தொடர்ந்து பணவீக்கமும் உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: bse பிஎஸ்இ
English summary

Dalal street sell off in numbers: 7 out of 8 stocks declined on BSE

Dalal street sell off in numbers: 7 out of 8 stocks declined on BSE,Out of 3655 stocks, 3115 stocks closed down.
Story first published: Friday, December 23, 2022, 21:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X