சம்வாட் 2079: 10 பங்குகளை பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. வாங்க ரெடியா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சம்வாட் இந்த வார்த்தை பற்றி பங்கு சந்தையில் வணிகம் செய்வோர் தெரிந்திருக்கலாம். இருப்பினும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

சம்வாட் என்பது இந்திய பேரரசன் விக்ரமாதித்தன் நிறுவிய ஒரு காலண்டர் ஆகும். இந்த காலண்டரில் முதல் நாளில் முகூர்த்த டிரேடிங்கினை தான் பங்கு சந்தையிலும் கொண்டாடுகின்றனர். இது தீபாவளித் திருநாள் அன்று ஒரு மணி நேரம் கொண்டாடப்படுகிறது.

 ரூ.6 லட்சம் முதலீடு.. 50 கோடி டர்ன் ஓவர்... சாதித்த பொறியாளர்கள்.. என்ன வணிகம்.. எப்படி? ரூ.6 லட்சம் முதலீடு.. 50 கோடி டர்ன் ஓவர்... சாதித்த பொறியாளர்கள்.. என்ன வணிகம்.. எப்படி?

ஏன் இந்த சம்வாட்?

ஏன் இந்த சம்வாட்?

ஆரம்ப காலகட்டத்தில் பங்கு சந்தையில் அதிக ஆர்வம் காட்டியது குஜராத் மற்றும் ராஜஸ்தான் முதலீட்டாளர்கள் தான். இவர்கள் பயன்படுத்திய ஒரு நிதியாண்டு தான் சம்வாட் (விக்ரம் சம்வாட்). இது இன்றும் இந்தியாவில் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாளில் வணிகம் செய்து லாபம் பார்த்தால், அதனால் வருடம் முழுவதும் லாபம் கிடைக்கலாம் என்பது ஐதீகம்.

எப்போது?

எப்போது?

இந்த முகூர்த்த டிரேடிங் 1957 அன்றில் இருந்து வர்த்தகத்தினை தொடங்கியது. இது தேசிய பங்கு சந்தையில் 1992ல் அதனை தொடங்கியது.

முகூர்த் டிரேடிங் என்பது தீபாவளி நாளில் அக்டோபர் 24, 2022 அன்று கொண்டாடப்பட உள்ளது. என் எஸ் இ மற்றும் பி எஸ் இ-ல் மாலை 6.15 முதல் 7.15 மணி நேரம் வரையில் வர்த்தகமாகிறது. இதே ப்ரீ ஓபனிங் செசன் மாலை 6 மணிக்கே தொடங்கி, இது 6.08 மணிக்கு முடிவடையும்.

இதே கமாடிட்டி டெரிவேட்டிவ் பிரிவும் மாலை 6.15 முதல் 7.15 வரையில் வணிகம் செய்து கொள்ளலாம்.

கரன்சி டெரிவேட்டிவ்ஸ் பிரிவில் மாலை 6.15 முதல் 7.15 வரையில் வணிகம் செய்து கொள்ளலாம்.

அசாதாரணமான சூழல்
 

அசாதாரணமான சூழல்

தற்போது சர்வதேச சந்தையில் நிலவி வரும் அசாதாரணமான சூழலுக்கு ஏற்றவாறு, பணவீக்கமும் தொடர்ந்து உச்சம் எட்டி வருகின்றது. தற்போது ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையும் மீண்டும் கடுமையாகத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இந்த சமயத்தில் லாபம் பார்க்க முடியுமா? முதலீடு செய்யலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

 நிபுணர்களின் பரிந்துரை?

நிபுணர்களின் பரிந்துரை?

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய விலை 788 ரூபாயாகும். இதன் இலக்கு விலை 1094 ரூபாயாகும். இதன் வருமான இலக்கு 39% ஆகும்.

அமி ஆர்கானிக் நிறுவனத்தின் தற்போதைய சந்தை விலை 918 ரூபாய். இலக்கு விலை - ரூ.1229, வருமானம் - 34%

பஜாஜ் பைனான்ஸ் -CMP - ரூ.7364, இலக்கு விலை - ரூ.8630, வருமானம் - 17%

தேவ்யானி இன்டர்நேஷனல் - -CMP - ரூ.190, இலக்கு விலை - ரூ.230, வருமானம் - 21%

இந்த பங்குகளும் லிஸ்டில் அடங்கும்

இந்த பங்குகளும் லிஸ்டில் அடங்கும்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் - -CMP - ரூ.2588, இலக்கு விலை - ரூ.3043, வருமானம் - 18%

ஐசிஐசிஐ வங்கி - -CMP - ரூ.887, இலக்கு விலை - ரூ.1055, வருமானம் - 19%

இன்ஃபோசிஸ் - -CMP - ரூ.1490, இலக்கு விலை - ரூ.1805, வருமானம் - 21%

மைண்ட் ட்ரீ - -CMP - ரூ.3398, இலக்கு விலை - ரூ.3800, வருமானம் - 12%

அல்ட்ராடெக் சிமெண்ட் - -CMP - ரூ.6272, இலக்கு விலை - ரூ.7574, வருமானம் - 21%

ஜைடஸ் லைஃப்சயின்ஸ் - -CMP - ரூ.419, இலக்கு விலை - ரூ.506, வருமானம் - 20.7%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diwali 2022: Experts recommend on these 10 stocks to buy for Samvat 2079

Samvat 2079: Muhurat trading session on October 24, 2022, will mark beginning of samwat 2079
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X