வீட்டில் செல்வம் கொழிக்க முகூர்த்த டிரேடிங் சிறந்த தினமா.. ஏன்.. எப்போது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக தீபாவளியை நாம் எவ்வாறு கொண்டாடுகிறோமோ? அதனை போல் முதலீட்டாளர்கள் கொண்டாடும் ஒரு செயல்முறை தான் இந்த முகூர்த்த டிரேடிங் தினம்.

பொதுவாக இந்த நாளில் வணிகம் செய்து லாபம் கண்டால், அந்த ஆண்டு முழுவதும் லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஐதீகம் உண்டு.

சரிவில் தொடங்கி ஏற்றத்தில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி.. ஜாக்பாட் தான்..! சரிவில் தொடங்கி ஏற்றத்தில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி.. ஜாக்பாட் தான்..!

இந்த மூகூர்த்த டிரேடிங் தீபாவளியை ஒட்டி வரும் அமாவாசை அன்று கொண்டாடப்படுகிறது.

மூகூர்த்த டிரேடிங்

மூகூர்த்த டிரேடிங்

மூகூர்த்த டிரேடிங்க் என்றால் என்ன? ஏன் இது கொண்டாடப்படுகிறது? உண்மையில் இந்த நாளில் வணிகம் மேற்கொண்டால் நல்லதா? ஏன் அப்படி கூறப்படுகிறது வாருங்கள் பார்க்கலாம்.

இந்திய சந்தைகளில் கொண்டாடப்படும் இந்த மூகூர்த்த டிரேடிங் தினமானது, பலரும் அறிந்த ஒரு விஷயமே. ஆனால் பலருக்கும் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகின்றது என்பது தெரிவதில்லை.

முகூர்த்த டிரேடிங் எப்போது?

முகூர்த்த டிரேடிங் எப்போது?

பிஎஸ்இயில் இந்த முகூர்த் டிரேடிங், இந்த வருடம் நவம்பர் 04 அன்று நடைபெறவுள்ளது. இது மாலை 6.15 மணிக்கு தொடங்கவுள்ளது. இதில் ப்ரீ ஒபனிங் செசன் மாலை 6 மணி முதல் 6.08 மணி வரை இருக்கலாம். முகூர்த் டிரேடிங் நேரம் மாலை 6.15 முதல் மாலை 7.15 மணி நேரம் வரை இருக்கும். இதே 1 மணி நேரத்தில் என்எஸ்இ-யிலும் நடைபெறவுள்ளது.

எம்சிஎக்ஸ் - முகூர்த் டிரேடிங்

எம்சிஎக்ஸ் - முகூர்த் டிரேடிங்

இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் (MCX) இந்த முகூர்த் டிரேடிங், இந்த வருடம் நவம்பர் 04, 2021 அன்று நடைபெறவுள்ளது. எனினும் இது குறித்து அதிகாரர்பூர்வ நேரம் இதுவரை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக ஒவ்வொரு முகூர்த்த வர்த்தக நாளில், ப்ரீ ஒபனிங் செசன் மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை இருக்கும். முகூர்த் டிரேடிங் நேரம் மாலை 6.15 முதல் மாலை 7.15 மணி நேரம் வரை இருக்கும். இந்த வருடம் அறிவிப்பு வரும்போது தெரியவரும்.

எதற்காக முகூர்த் டிரேடிங்?

எதற்காக முகூர்த் டிரேடிங்?

பொதுவாக தீபாவளித் திருநாளில் லட்சுமி பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்யப்படும். மக்கள் தங்கள் வீட்டில் செல்வ செழிப்பு வளர வேண்டும் என்று பூஜை செய்வார்கள். ஆக இதனை நாம் செய்யும் போது நமக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்று கூறுவார்கள். ஆக இந்த சிறப்பான நாளில் நாம் சந்தையில் வணிகம் செய்து அதன் மூலம் லாபம் கிடைத்தால், அந்த வருடம் முழுவதும் லாபகரமான வருடமாக இருக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் இந்த லட்சுமி பூஜை நாளில் இந்த முகூர்த் டிரேடிங் கொண்டாடாப்படுகிறது. இதனால் இந்த நாளில் வர்த்தகர்கள் போட்டி போட்டுக் கொண்டு, 1 ரூபாய் லாபம் கிடைத்தாலும் பரவாயில்லை என வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

முதலீட்டாளர்கள் ஆர்வம்

முதலீட்டாளர்கள் ஆர்வம்

இது ஆண்டு தோறும் இந்திய பங்கு சந்தைகளிலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் நடைபெற்று வரும் ஒரு சிறப்பு வர்த்தக நாளாகும். இதனால் மற்ற நாட்களில் வர்த்தகம் செய்வதை விட, இந்த நாளில் வர்த்தகம் செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

 

முகூர்த்த வர்த்தக தினத்தில் வர்த்தகம் செய்து லாபம் பெறுவது என்பது ஒரு நல்ல ஆரம்பத்தின் அறிகுறியாக பார்க்கப்படும் நிலையில் அதனை ஏற்றுக் கொண்டு நாமும் தான் செய்து பார்ப்போமே. 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diwali muhurat trading session on November 04, 2021

BSE, NSE and MCX announced that it will hold a Muhurat Trading session on November 04, 2021 on the occasion of Diwali
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X