2017-ம் ஆண்டு பங்கு சந்தையில் கோடிகளை அள்ளிய நிறுவனங்கள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

2017-ம் ஆண்டுத் துவக்கம் முதல் இந்திய ஐபிஓ சந்தைக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ரீடெய்ல் மற்றும் நிறுவனங்கள் என்ற ஏதுவாக இருந்த நல்ல வரவேற்பு உள்ளது.

முதலீட்டாளர்கள் மத்தியை இந்த நிறுவனங்களுக்குக் கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து இந்திய பங்கு சந்தை ஆச்சர்யத்தில் உள்ளது. 2017-ம் ஆண்டு இது வரை அதிக முதலீடுகளை ஈட்டிய 5 நிறுவனங்களின் ஐபிஓ விவரங்களை இங்குப் பார்ப்போம்.

அவென்யூ சூப்பர் மார்ட் ஐபிஓ (மார்ச் 8 முதல் மார்ச் 10)

அளவு: ரூ. 1,870 கோடி
விலை: ரூ. 295-299
சந்தா: 104 முறை

அவென்யூ சூப்பர் மார்ட் நிறுவனத்தின் டிமார்ட் ரீடெய்ல் நிறுவனத்திற்காக ஐபிஓ மூலமாக நிதி கோரியதை அடுத்து முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளுக்குப் பெறும் வரவேற்பை அளித்துள்ளனர்.

டிமார்ட் நிறுவனத்தின் 4.43 கோடி பங்குகளுக்கு 406.22 கோடி பங்குகள் பெற்றுள்ளது, மே 19ம் தேதி வரை அவென்யூ சூப்பர் மார்ட் பங்குகள் 141 சதவீதம் லாபத்தை அளித்துள்ளது.

 

ஹட்கோ ஐபிஓ (மே 8 முதல் மே 11 வரை)

அளவு: ரூ. 1,220 கோடி
விலை: ரூ. 56 முதல் ரூ. 60 வரை
சந்தா: 79 க்கும் மேற்பட்ட முறை

ஹட்கோ நிறுவனம் 2012 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக ஐபிஓ மூலம் முதலீடு திரட்டிய பொதுத் துறை நிறுவனமாகும். ஹட்கோ நிறுவனம் இது வரை முதலீட்டாளர்களுக்கு 21 சதவீதம் லாபத்தை அளித்துள்ளது.

 

மும்பை பங்கு சந்தை (ஜனவரி 23 - ஜனவரி 25)

அளவு: ரூ. 1,243 கோடி
விலை: ரூ. 805 முதல் ரூ. 806
சந்தா: 51 முறை

இந்தியாவின் மிகப் பழமையான பங்குச் சந்தை நிறுவனமான பிஎஸ்ஈ முதன் முறையாக 2017-ம் ஆண்டு ஐபிஓ மூலமாகப் பங்குகளை வெளியிட்டது. 1,07,99,039 பங்குகளை வெளியிட்ட மும்பை பங்கு சந்தைக்கு 55,23,34,986 பங்குகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதனால் மும்பை பங்கு சந்தையின் பங்குகள் 33 சதவீதம் வரை முதலீட்டாளர்களுக்கு லாபம் அளித்துள்ளது.

 

ஷங்கரா பில்டிங் பிராடக்ட்ஸ் ஐபிஓ (மார்ச் 22 - மார்ச் 24)

அளவு: ரூ. 345 கோடி
விலை: ரூ. 440 முதல் ரூ. 460
சந்தா: 41 க்கும் மேற்பட்ட முறை

53 லட்சம் பங்குகளி ஐபிஓ மூலம் வெளியிட்ட ஷங்கரா பில்டிங் பிராடக்ட்ஸ் நிறுவனத்திற்கு 21.87 கோடி பங்குகளுக்கு ஏலம் கிடைத்தது. ஷங்கரா பில்டிங் பிராடக்ட்ஸ் பங்குகள் 54 சதவீதம் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது.

 

மியூசிக் பிராட்கேஸ்ட் ஐபிஓ (மார்ச் 6 - மார் 8)

அளவு: ரூ. 488 கோடி
விலை: ரூ. 324 முதல் ரூ. 333
சந்தா: 39 முறை

எப்எம் ரேடியோ அலைவரிசை நிறுவனமான இது 1,04,80,784 பங்குகளை ஐபிஓ-ல் வெளியிட்டது. முதலீட்டாளர்கள் அளித்த வரவேற்பில் 41,34,94,155 பங்குகள் ஏலம் எடுக்கப்பட்டது. முதலீட்டாளர்களுக்கு 2 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From DMart To Hudco: Most Successful IPOs So Far In 2017

From DMart To Hudco: Most Successful IPOs So Far In 2017
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns