IRFC முதலீட்டாளர்களுக்கு நல்ல சான்ஸ்.. ஏன் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRFC) பங்கு விலையானது இன்று 7% மேலாக அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றது.

கடந்த அமர்விலும் இப்பங்கின் விலையானது 8% மேலாக வர்த்தகமாகி வந்தது. தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வரும் இந்த பங்கின் விலையானது, அதன் 52 வார உச்சத்தில் காணப்படுகின்றது.

இந்திய ரயில்வே துறையை சேர்ந்த ஐ ஆர் எப் சி நிறுவனம், கடந்த ஆண்டு தான் பங்கு சந்தைக்குள் காலடி எடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

ரூ. 15,00,000 கோடி சேமிப்பு.. இதை மட்டும் செய்யாட்டி, 'அவ்வளவு தான்': இந்திய ரயில்வே துறை ரூ. 15,00,000 கோடி சேமிப்பு.. இதை மட்டும் செய்யாட்டி, 'அவ்வளவு தான்': இந்திய ரயில்வே துறை

தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது என் எஸ் இ-யில் 4.45% அதிகரித்து, 28.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலையும், 52 வார உச்ச விலையும் 28.70 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 27.15 ரூபாயாகும்.

இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 7.84% அதிகரித்து, 28.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 28.70 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 27.20 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 28.70 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 19.30 ரூபாயாகும்.

வெளியீட்டு விலை

வெளியீட்டு விலை

இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு விலையானது 26 ரூபாயாகும். தற்போது இந்த பங்கின் விலையானது அதன் வெளியீட்டு விலைக்கு மேலாக உள்ளது, இதுவே முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலைக் கொடுத்துள்ளது எனலாம்.

கடந்த ஆண்டு ஜனவரி 2021ல் ஐஆர்எப்சி நிறுவனம் தனது பங்கு வெளியீட்டினை செய்தது. இந்த வெளியீட்டில் 25 - 26 ரூபாயாக பங்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஐஆர்எப்சி லாபம்

ஐஆர்எப்சி லாபம்

நடப்பு ஆண்டில் மட்டும் ஐஆர்எப்சி பங்கு விலையானது 23% என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. ஐஆர்எப்சி நிறுவனம் இரண்டாவது காலாண்டில் அதன் நிகர லாபம் 14% அதிகரித்து, 1714 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது. இதே கடந்த ஆண்டில் 1501 கோடி ரூபாயாக இருந்தது.

வருவாய் விகிதம் எப்படி?

வருவாய் விகிதம் எப்படி?

இதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதம் 24% அதிகரித்து, 5810 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 4690 ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர மதிப்பு 43,549 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் சொத்துகளின் மதிப்பு 4,39,070 கோடி ரூபாயாகும்.

டிவிடெண்ட்

டிவிடெண்ட்

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுவானது இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு, அதன் முகமதிப்பில் 8% அறிவித்துள்ளது. இதன் முகமதிப்பு 10 ரூபாயாகும். இதன் டிவிடெண்ட் தொகையானது ஒரு பங்குக்கு 0.80 ரூபாயாகும். ஐஆர்எப்சி நிறுவனம் இந்திய ரயில்வேக்கு வழங்கிய நிதியானது இரண்டாவது காலாண்டில் 5 லட்சம் கோடி ரூபாயினை தாண்டியுள்ளது.

வலுவான வளர்ச்சி

வலுவான வளர்ச்சி

இந்த நிறுவனத்தின் 25வது ஆண்டு வருடாந்திர கூட்டத்தில் ஐஆர்எப்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அமிதாப் பானர்ஜி, ஐஆர்எப்சி வலுவான நிதி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதன் லாபம் மற்றும் வருவாய் என இரண்டுமே வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

good news: IRFC shares jumped to record high: investors got big relief

Indian Railway Finance Corporation Limited (IRFC) stock price is trading up over 7% today
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X