ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களான (OMCs) ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்(HPCL), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) உள்ளிட்ட நிறுவனங்கள், நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 21,228 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளன.
செப்டம்பர் 2022வுடன் முடிவடைந்த முதல் பாதியில் எண்ணெய் நிறுவனங்கள், அரசின் கோரிக்கைக்கு ஏற்ப, எண்ணெய் விலையை உயர்த்த முடியாத சூழலில் இத்தகைய இழப்பினை கண்டுள்ளன.
கடந்த காலாண்டில் அவர்களின் நிகர நஷ்டமானது 2749 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 11,124 கோடி ரூபாயாக இருந்தது.
மதிப்பு குறைப்பா?
இதற்கிடையில் இந்த நிறுவன பங்குகளை இந்த காலகட்டத்தில் வாங்கலாமா? வேண்டாமா? இது வாங்க சரியான தருணமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது குறித்து தரகு நிறுவனமான பிரபுதாஸ் லில்லாதேர், எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், உள்ளிட்ட நிறுவனங்களின் மதிப்பினை குறைத்துள்ளது.
ஐஓசி & பிபிசில் நஷ்டம்
எவ்வளவு நஷ்டம் தெரியுமா?ஏனெனில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர நஷ்டம் 272.35 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 6360.05 கோடி ரூபாயாக லாபத்தில் இருந்தது.
இதே பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிகர நஷ்டம் 304.17 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் லாபம் 2840 கோடி ரூபாயாக இருந்தது.
கீழ் நோக்கிய திருத்தம்
எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் விலையால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சந்தை விலையை விட லிட்டருக்கு 10 ரூபாய் குறைவாக உள்ளது. இது எண்ணெய் நிறுவனங்களின் வருவாயினை கடுமையாக பாதித்துள்ளது. இதற்கிடையில் ஐஓசிக்கு இலக்கு விலையாக 50 ரூபாயும், பிபிசிஎல்-க்கு 260 ரூபாய் இலக்கு விலையாகவும் திருத்தம் செய்துள்ளது. தற்போது ஐஓசியின் பங்கு விலை 69 ரூபாய் என்ற லெவலிலும், பிபிசிஎல்லின் விலை 306 ரூபாய் என்ற லெவலிலும் காணப்படுகிறது.
ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் கணிப்பு
எனினும் மறுபுறம் ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் பிபிசிஎல்லின் இலக்கு விலையை 365 ரூபாயாகவும், இப்பங்கினை வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் தேவையானது மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில் இதன் வருவாயும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெட்ரோலிய பொருட்கள் தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இதன் மார்ஜின் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்
இதே ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் நிகர நஷ்டம் செப்டம்பர் காலாண்டில், 2172.14 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1923.51 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பங்கினை பிரபுதாஸ் லில்லாதேர் இப்பங்கினை ஹோல்டு செய்யலாம் என கணித்துள்ளது. இதன் இலக்கு விலை 195 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. செப்டம்பர் முடிவில் இந்த நிறுவனத்தின் கடன் விகிதமானது 68,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2022ம் நிதியாண்டில் 43,100 கோடி ரூபாயாக இருந்தது.
ஹெச் பி சி எல் நிலவரம்
ஹெச் பி சி எல் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று முடிவில் 2.57% குறைந்து, 204.50 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்தது. மறுபுறம் சென்செக்ஸ் 0.25% குறைந்து, 61,033 ஆக முடிவடைந்துள்ளது.
சென்ட்ரோம் ப்ரோக்கிங் ஹெச்சிபிஎல் நிறுவனத்தின் இலக்கு விலை 240 ரூபாயாக கணித்துள்ளது. தற்போது டீசல் தவிர மற்ற பொருட்கள் ஆரோக்கியமான வளர்ச்சியினை கண்டு வருகின்றன. 2024 ,மற்றும் 2025ல் எபிட்டா விகிதம் மேம்படலாம் என மதிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications