ஆறே மாதத்தில் ரூ.1 லட்சம் டூ 5.89 லட்சம் வருமானம்.. அப்பர் சர்க்யூட் பங்கின் செம சான்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்மால் கேப் நிறுவனமான ஏபிசி கேஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 14.71 கோடி ரூபாயாக உள்ளது.

உலோகத் தொழிலில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம் 1980ம் ஆண்டில் பித்தளை கம்பிகள், டியூப்ஸ், காப்பர் பைப்கள் என பலவற்றையும் உற்பத்தி செய்து வருகிறது.

இது தவிர எரிவாயு சந்தையிலும் மிகப்பெரிய வணிக வலையமைப்பினை கொண்டுள்ள இந்த நிறுவனம், மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றாகவும் உள்ளது இப்பங்கு அதன் முதலீட்டாளார்களுக்கு அடிக்கடி நல்ல வருமானத்தினை கொடுத்து வருகின்றது.

உஷாரா இருங்க..காளையா கரடியா மோதலில் இந்திய பங்கு சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் ? உஷாரா இருங்க..காளையா கரடியா மோதலில் இந்திய பங்கு சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் ?

6 மாத நிலவரம்

6 மாத நிலவரம்

ஆறு மாதங்களுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் இந்த பங்கினில் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 5.89 லட்சம் ரூபாயாகும்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இப்பங்கின் விலைய்யானது 4.94% அதிகரித்து, அப்பர் சர்க்யூட் ஆகியிருந்தது. அந்த சமயத்தில் பங்கின் விலை 74.30 ரூபாயாக இருந்தது.

15 ஆண்டுகால நிலவரம்

15 ஆண்டுகால நிலவரம்

இந்த பங்கின் விலையானது பிப்ரவரி 2, 2007ல் 1.65 ரூபாயாக இருந்த நிலையில், தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிடும்போது 4403.03% லாபத்தினை பதிவு செய்துள்ளது. 15 வருடங்களுக்கு முன்பு இந்த பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், உங்கள் முதலீட்டின் மதிப்பு 45 லட்சம் ரூபாயாகும்.

இதே கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலையானது 25 ரூபாயில் இருந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிடும்போது 197.20% லாபத்தில் உள்ளது. இதன் CAGR விகிதக் 24.24% ஆகும்.

இவ்வளவு லாபமா?

இவ்வளவு லாபமா?

மூன்று வருடத்திற்கு முன்பு இப்பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்றைய அதன் மதிப்பு 8.74 லட்சம் ரூபாயாகும். இப்பங்கின் விலையானது 2019, அக்டோபர் 11ல் 8.74 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தற்போதைய விலையுடன் ஒப்பிடும்போது 774.12% லாபம் கொடுத்து வருகின்றது.

ஓராண்டின் என்ன நிலவரம்?

ஓராண்டின் என்ன நிலவரம்?

இதே கடந்த ஆண்டு அக்டோபர் 11, 2021ல் இப்பங்கின் விலையானது 12.58 ரூபாயாக இருந்தது. கடந்த ஒரு வருடத்தில் இப்பங்கானது 490.62% வருமானம் கொடுத்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், தற்போது 5.90 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும். இதே கடந்த ஆறு மாதத்தில் இப்பங்கானது 1லட்சம் ரூபாயானது, 5.89 லட்சம் ரூபாயாக லாபம் கொடுத்துள்ளது.

52 வார உச்சம், குறைந்தபட்சம்

52 வார உச்சம், குறைந்தபட்சம்

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பங்கின் விலையானது 34.36% லாபம் கொடுத்துள்ளது. இதே கடந்த 5 வர்த்தக அமர்வில் மட்டும் 21.41% ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கின் 52 வார உச்ச விலை 153.50 ரூபாயாகும். இது கடந்த செப்டம்பர் 6 அன்று தொட்டது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 10.66 ரூபாயாகும். இது கடந்த பிப்ரவரி 16 அன்று எட்டியது. இதன் 52 வார உச்சத்தில் இருந்து 51.58% குறைந்திருந்தாலும், 52 வார குறைந்தபட்ச விலையில் இருந்து, 596.99% ஏற்றம் கண்டுள்ளது.

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

இந்த பங்கின் விலை டெக்னிக்கலாக 5 நாள், 10 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கு மேலாகவும், 20 நாள் மற்றும் 50 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் கீழாகவும் காணப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Invest of Rs.1 lakh turns Rs.5.89 lakh in just six months

If you had invested Rs 1 Lakh in this share six months ago in ABC Gas International Limited, it would be worth Rs 5.89 Lakh today
Story first published: Sunday, October 9, 2022, 20:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X